கொல்கத்தா: மேற்கு வங்க மாநிலத்தில் கெரோனா பரவல் காரணமாக 10 மற்றும் 12ம் வகுப்புத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்து உள்ளார்.

மேற்குவங்க மாநிலத்தில் இதுவரை 14,30,00 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இதுவரை 13,900 பேர் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை 16,362 பேர் உயிரிழந்து உள்ளனர். அங்கு தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,  மேற்குவங்க மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், தங்கள் குழந்தைகளின் எதிர்காலத்திற்கு மிகப்பெரும் முன்னுரிமை அளிக்கப்படுவதாகக் குறிப்பிட்டுள்ளார். மேலும் 2021 ஆம் ஆண்டில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகளை நடத்துவது குறித்து முடிவு செய்ய ஒரு நிபுணர் குழுவை அமைத்ததாகக் குறிப்பிட்டுள்ள மம்தா, பெற்றோர்கள், மாணவர்கள் கருத்துக்கள் கேட்கப்பட்டதாகவும்,  அவர்கள் கூறிய கருத்துக்களின் அடிப்படையில், 10 மற்றும் 12ம் வகுப்பு வாரியத் தேர்வுகள் ரத்து செய்யப்படுகிறது என தெரிவித்து உள்ளார்.