சன்சால், மேற்கு வங்கம்

பாஜக வின் ஐடி விங் செயலாளர் தருண் செங்குப்தா மேற்கு வங்க வகுப்பு மோதல்கள் பற்றி தவறான தகவல் பதிந்ததற்காக கைது செய்யப்பட்டுள்ளார்.

சமீபத்தில் மாணவர் ஒருவர் ஃபோட்டோஷாப் மூலம் எடிட் செய்து முகமது நபி பற்றி வெளியிட்ட தகவலால், மேற்கு வங்கத்தில் பெரும் வகுப்புக் கலவரம் நடைபெற்று வருகிறது.

இத்தருணத்தில் பாஜக வின் ஐடி விங் இந்த கலவரத்தில் நடந்ததாகக் கூறி பல தகவல்களை வெளியிட்டு வருகிறது.  ஏற்கனவே குஜராத் கலவர புகைப்படத்தை தற்போதைய மேற்கு வங்க கலவரமாக வெளியிடப்பட்டது.

தற்போது பாஜகவின் ஐடி விங் மேற்கு வங்க செயலாளர் தருண் செங்குப்தா ஒரு வீடியோவை வெளியிட்டார்.  அதில் ஒரு ஐபிஎஸ் அதிகாரி, பொதுமக்களில் ஒருவரை ஆக்ரோஷமாக இரக்கமின்றி தாக்கும் காட்சி காணப்பட்டது.  பிறகு அது ஏப்ரல் மாதத்தில் அனுமான் ஜெயந்தி விழாவில் எடுக்கப்பட்ட வீடியோ எனவும், கலவர வீடியோ அல்ல எனவும் கண்டறியப்பட்டது.

இதனால் செங்குப்தாவை தவறாக தகவல் தந்து வகுப்புவாதத்தை தூண்டியதாக குற்றம் சாட்டப்பட்டு போலிஸ் கைது செய்துள்ளது.  இச்சம்பவம் மேற்கு வங்க மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.