தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் இருந்து விமானம், ரயில்களை இயக்க வேண்டாம்… மம்தா வலியுறுத்தல்

Must read

கொல்கத்தா:

கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள தமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு விமானம் மற்றும் சிறப்பு ரயில் இயக்க வேண்டாம் என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வலியுறுத்தி உள்ளார்.

இதுகுறித்து அவர் மத்தியஅரசுக்கு கடிதம் எழுதி உள்ளார். அதில், மற்ற மாநிலங்களில் கொரேனா பரவலை தடுக்கும் வகையில், அதிக பாதிப்புகள் கொண்ட  தமிழ்நாடு (86,224),  மகாராஷ்டிரா (1,69,883),, டெல்லி (85,161),, குஜராத்  (31,938)  , உத்தரபிரதேசம்(22,828). போன்ற மாநிலங்களில் இருந்து சிறப்பு ரயில்களை இயக்க வேண்டாம் என்று  கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும், விமானங்களையும் வாரம் ஒருமுறை மட்டும் அனுமதித்தால் போதும் என்று அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

‘ இதனிடையே கொல்கத்தாவில் மெட்ரோ ரயில்களும் புறநகர் மின்சார ரயில்களும் ஆகஸ்ட் 12ம் தேதி வரை இயங்கத் தடை விதிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

More articles

Latest article