துபாய்:

துபாயில் பணிபுரிந்து வரும் லட்சக்கணக்கான இந்தியர்களின் குறையை தீர்க்க வாரந்தோறும் சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது இந்திய தொழிலாளர் வள மையம்.

இந்த மையம் இந்த மையம் இந்திய தூதரகம் மற்றும் துணை தூதரகத்தின் ஆதரவுடன் செயல்பட்டு வருகிறது.‘

துபாயின் ஜுமைரா லேக் டவர் பகுதியில் அமைந்துள்ள இந்த மையத்தின் சார்பில் ஒவ்வொரு வாரமும் குறை தீர்க்கும் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.

ஒவ்வொரு வார வெள்ளிக்கிழமை மற்றும் சனிக்கிழமைகளில் மாலை 3 மணி முதல் 6 மணி வரை இநத் குறைதீர்க்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

துபாயில் பணி செய்து வரும் இந்திய தொழிலாளர்கள் தங்களது குறைகளை இந்த குறைதீர்க்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தெரிவிக்கலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் பங்குபெற விரும்பும் இந்தியவர்கள் 800 46342 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு விபரம் பெறலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில், தொழிலாளர் பிரச்சனைகள் மட்டுமல்லாமல்,  குடும்ப விவகாரம் தொடர்பான பிரச்சனைகள், கிரிடிட் கார்டு, ஆதார் அட்டை விளக்கம், வரி தொடர்பான சந்தேகங்களுக்கும் இலவச ஆலோசனை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த வாய்ப்பை அமீரகத்தில் வசித்து வரும் இந்தியர்கள் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள்.