rasi-weekly-vedha-gopalan
%e0%ae%ae%e0%af%87%e0%ae%b7%e0%ae%ae%e0%af%8dகுடும்ப ஸ்தானத்தை குரு பார்ப்பதால் குடும்ப அங்கத்தினர்கள் சம்பந்தப்பட்ட கவலைகள் தீரும் என நம்பலாம். டாடியின் புத்திசாலித்தனம் அலுவலகத்தில் அவருக்குப் பெயர், புகழ் பாராட்டை மட்டும் அல்லாமல் அவார்ட் ரிவார்ட் பணம் என்பனவற்றையும் இணைத்துக் கொடுக்கும்.
சந்திராஷ்டமம்:  28.11.16 திங்கள் மாலை 03.41 முதல் 01.12.2016 வியாழன் அதிகாலை 03.08 வரை
%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b7%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d
ஒன்பதில் செவ்வாய் உச்சமானதால் தந்தையின் வாழ்வில் திடீரென்று முன்னறிவிப்பு ஏதுமின்றி நன்மைகள் அதிகரிகக்கும். பதினோராம் வீட்டுக்கு குரு பார்வை இருப்பதால் லாபம் கூடும். திடீர் அதிருஷ்டம் டெரஸைப் பிய்த்துக் கொண்டு கொட்டும். புதிதாய் அறிமுகமான ஒரு பெண்மணி மூலம் நன்மைகள் வலது காலை எடுத்து வைத்து வரும்.
சந்திராஷ்டமம்:  01.12.2016 வியாழன் அதிகாலை 03.09 முதல் 03.12.2016 சனி பகல் 12.55 வரை
%e0%ae%ae%e0%ae%bf%e0%ae%a4%e0%af%81%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8d
நாலாம் வீட்டில் குரு. மாணவர்கள் தங்களுக்கு இத்தனை திறமை இருக்கிறதா என்று தாங்களே வியக்குமளவு வெற்றி பெறுவார்கள்.
குழந்தைகளின் நலனுக்காக நிறைய செலவு செய்வீங்க. கணவர்- மனைவிக்கு விமானம் ஏறிக் கடல் தாண்டிச் செல்லக்கூடிய பயணம் அமையும்.
 
%e0%ae%95%e0%ae%9f%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d
ஐந்தாம் வீட்டின் அதிபதியாகிய செவ்வாய் உச்சம் பெற்றிருப்பதால் மகன் அல்லது மகளின் முயற்சிகள் வெற்றபெறும்.
சகோதர சகோதரிகள் வாழ்வில் எதிர்பார்த்த நன்மைக்கு இன்னும் கொஞ்சம் வெயிட்டிங் லிஸ்ட்!
 
%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%ae%e0%af%8d%e0%ae%ae%e0%ae%ae%e0%af%8dஐந்தில் புதன் இருப்பதால் குழந்தைகளின் புத்திசாலித்தனத்தால் வெற்றி பெறுவார்கள். அதே வீட்டில் சுக்கிரன் இருப்பதால் அவர்களின் புகழ் அதிகரித்துப் பாராட்டுப் பெறுவார்கள். தலை கழுத்துக்கு மேல் கரெக்டாய்ப் பொருந்தியிருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளுங்கள். ”நான் என்னங்க செய்துட்டேன். எல்லாம் ஆண்டவன் செயல்” என்ற வசனத்தை உருப்போட்டு டெலிவரி செய்யுங்க.
%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%bfநாலாம் வீட்டில் சுக்கிரன் இருப்பதால் மிக அழகிய வாகனம் அமையும். புதிய எழிலான வீடு வாங்குவீர்கள். பதினோராம் வீட்டைச் செவ்வாய் பார்ப்பதால். கட்டுமானத் துறைகளில் பணி புரிபவர்களுக்கும் மருத்துவர்களுக்கும் லாபமும் புகழும் கூடும். பச்சை மிளகாயைப் படக்கென்று கடித்தமாதிரி வார்த்தைகளை விநியோகம் செய்ய வேண்டாம். மம்மிகூட சண்டை வேண்டவே வேண்டாம்.
%e0%ae%a4%e0%af%81%e0%ae%b2%e0%ae%be%e0%ae%ae%e0%af%8dஐந்தாம் வீட்டை குரு பார்பபதால் திருமணமாகிக் குழந்தைகளுக்காகக் காத்திருப்பவர் களுக்கு நல்ல செய்தி காத்திருக்கிறது. இரண்டில் சூரியன் இருப்பதால் தந்தை வழி உறவினர்கள் மூலம் நன்மை உண்டாகும்.
மம்மி டாடிக்குத் தனிப்பட்ட முறையிலும் வெற்றிகள் உண்டு….உங்க மூலமாகவும் பெருமைகள் உண்டு.
%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%95%e0%ae%ae%e0%af%8dநாலில் கேது. தாயாரின் உடல் நிலையை நன்றாய்க் கவனித்துக் கொள்ளுங்கள். அவருக்கும் உங்களுக்கும் சண்டை வராமல் பார்த்துக்கொள்ளுங்கள். வாகனங்களால் சிறு பிரச்சினைகள் ஏற்படக்கூடும்.
கல்யாணம்,கச்சேரி, கொண்டாட்டாம், சந்தோஷம்…இதோ வந்தாச்சே! குடும்பத்தில் யாருக்கோ குவா குவா உண்டு.
%e0%ae%a4%e0%ae%a9%e0%af%81%e0%ae%9a%e0%af%81நான்காம் வீட்டை குரு பார்ப்பதால் புதிய வாகனம் அல்லது வீடு அல்லது இரண்டும் வாங்குவீர்கள். தாயாருக்கு நன்மையும் மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.
சாப்பிடவும் தூங்கவும் திரைப்படம்பார்க்கவும் கச்சேரி கேட்கவும் நேரம் இல்லைன்னு அங்கலாய்க்காதீங்க. பணத்தை எண்ணக்கூட நேரம் கிடைக்காதே அதுக்கு என்ன சொல்ல!
 
%e0%ae%ae%e0%ae%95%e0%ae%b0%e0%ae%ae%e0%af%8dபன்னிரண்டில் சுக்கிரன் இருப்பதால் ஆடை ஆபரணங்களுக்காகச் செலவு செய்வீர்கள். ராசிக்கு குரு பார்வை இருப்பதால் உங்கள் திருமணத்திற்காகவே நிறைய சந்தோஷச் செலவுகள் செய்ய வேண்டி வரலாம். பேச்சே வேண்டாம். மாட்டிக்காதீங்க.
குழந்தைங்க மேடையில் பரிசு வாங்குவாங்க.
 

%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8dசம்பளம் கூடும். பொறுப்பும் அதிகரிக்கும். பாராட்டு எல்லாவற்றையும்விட அதிகமாகும், லாபத்தைக் குறிக்கும் பதினோறாம் வீட்டில் சுக்கிரன் இருப்பதால் கலைத் துறையைச்  சேர்ந்தவர்களுக்கும் சினிமாத் துறையைச் சேர்ந்தவர்களுக்கும் லாபம் அதிகரிக்கும்.

புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.
 
%e0%ae%ae%e0%af%80%e0%ae%a9%e0%ae%ae%e0%af%8dகொடுங்கோல் பாஸ் வேறு வேலைக்குப் போய் அன்பான பாஸ் அருகில் வந்து தட்டிக் கொடுப்பார்.பதினோராம் வீட்டில் செவ்வாய் உச்சமாக இருப்பதால் திடீர் லாபங்கள் வரும்.  பளிச்சென்று உங்களிடம் ஒரு மாற்றம் உங்களுக்கே தெரியும். மேடை போட்டுப் பாராட்டுவாங்க.
சந்திராஷ்டமம்: 26.11.2016 சனிக்கிழமை அதிகாலை 04.07 முதல் 28.11.2016 திங்கள் மாலை 03.40 வரை