thiruneer-3
நீர் வண்ணம் இங்கே கண்டோம் – திருநீர் மலை
சென்னை ஏர்போர்ட் தாண்டி பல்லாவரத்திலிருந்து வலப்புறம்  உள்ள திருநீர்மலை.
108 திவ்ய தேசங்களில் ஒன்று. பல்லாவரத்திலிருந்து 8 கி.மீ.
தமிழ்நாடு மாநிலத்தில்அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் சென்னையில் இருக்கும் ஒரு பேரூராட்சி மற்றும் புறநகர் பகுதி ஆகும்.
கோயம்பேட்டுல இருந்து மதுரவாயல் வழியா பெருங்களத்தூர் போற பை-பாஸ் வழியாகவும் போகலாம்;
திருநீர்மலையில் அமைந்திருப்பது நீர்வண்ணப்பெருமாள் திருக்கோயில் என்பது இதன் சிறப்பம்சம்.
இங்கு பெருமாள் நீர்வண்ணராக அடிவாரத்தில் அருள் புரிகின்றார். மலைமீது ரங்கநாதராகவும், உலகளந்தவராகவும், நரசிம்மராகவும் சேவை சாதிக்கின்றார்.
திருமங்கை ஆழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற தலமாகும்
மலை மேல் ஒன்றும் மலையடிவாரத்தில் ஒன்றுமாக இரண்டு கோயில்கள் உள்ளன.
thiruneer-1
பெருமாள்  நான்குநிலைகளில், மூன்று அவதார கோலத்தில் காட்சி தருகிறார். இரண்டு திருத்தலங்களும் ஒரே திவ்விய தேசமாக் கருதப்படுகிறது.
மலையடிவார கோவிலின்  மூலவர்  நீர்வண்ணப்பெருமாள்   நின்ற திருக்கோலத்தில்,  தாமரை மலர்  பீடத்தில்   அபய ஹஸ்த முத்திரைகளுடன்மார்பில் சாளக்ராம மாலை புரள, ராஜ கம்பீரத்துடன் கிழக்கு நோக்கி அருள் பாலிக்கிறார். அதனால, அவர் பேரு  நின்றான்  தாயார் அணிமாமலர் மங்கை, தனிக்கோவில் கொண்டு நாச்சியா ராக எழுந்தருளியிருக்கிறார்.
நீர் சூழ்ந்த மலையின் மத்தியில் இருந்ததால் இவருக்கு, நீர்வண்ணப்பெருமாள் ன்னும், தலத்திற்குத் திருநீர்மலை என்னும் பேர் வந்ததாம்.  நீல நிற மேனி உடையவர்என்பதால இவருக்கு  “நீலவண்ணப்பெருமாள்’ என்ற பேரும் உண்டு.
ராம பிரானுக்கும் சன்னதி இங்கு உண்டு. இவரது  சன்னதியில், சுவாமியை வணங்கியபடி வால்மீகி காட்சி தருகிறார்.
இதெப்படி!! ஏன்?
வால்மீகி மகரிஷிக்கு, ராமபிரானை, திருமணக்கோலத்தில் தரிசிக்க ஆசை வந்ததாம். அவர், இத்தலம் வந்து சுவாமியை வேண்டி தவமிருந்தாராம் பெருமாள்,  அவருக்கு  சீதா,  லட்சுமணன்,  பரதன்,  சத்ருக்கனன் ஆகியோ ருடன்  திருமணக்கோலத்தில் காட்சி தந்தாராம். அப்படியே இங்கு நிரந்தரமாகக் கோயில் கொண்டார்.
இங்குள்ள ராமபிரான் கல்யாண ராமனாக் காட்சி தருவதால் திருமணமாகாதவர்கள் இங்கு  வேண்டிக்கொண்டால் உடனே கல்யாணம் நிச்சயமாகும்.
thiruneer-2
ராமர் சன்னதிக்கு பக்கத்தில் அனுமன் தொழுத  நிலையில் அருள்பாலிக்கிறார்.
இங்கே கோபுரம் ராமருக்கு கொடிமரம் நீர்வண்ணருக்கு கோயில்களில் சுவாமி சன்னதிக்கு எதிரில் ராஜகோபுரம், பலிபீடம், கொடிமரம் ஆகியன ஒரே வரிசையில் இருக்கும்.
இங்கு பலிபீடம், கொடிமரம் இரண்டும் ராஜகோபுரத்திலிருந்து விலகி தனியே இருக்கு. வால்மீகிக்காக ராமராவும், நீர்வண்ணப்பெருமாளாவும் மகாவிஷ்ணு காட்சி தந்ததால், இவ்விரு மூர்த்திகளும் இத்தலத்தில் பிரதானம் பெறு கிறார்கள். எனவே, ராமர் சன்னதி எதிரில் ராஜகோபுரமும், நீர்வண்ணர் எதிரில் கொடிமரமும் அமைந்துள்ளது.
இத்தலத்தை மங்களா சாசனம் செய்த திருமங்கையாழ்வார் தாயாரை, “அணிமாமலர் மங்கை’ எனக் குறிப்பிட்டு  பாசுரம் பாடியுள்ளார்.
மூலவர் ரங்கநாதர் மலைக்கோயிலிலும், உற்சவர் அழகிய மணவாளர் அடிவாரத்திலுள்ள கோயிலிலும் காட்சி தருகின்றனர். சித்திரை பிரம்மோற்ஸவ கொடியேற்றம் மற்றும் கொடிஇறக்கம், பங்குனி உத்திரத்தில் நடக்கும்  திருக்கல்யாணம் ஆகிய மூன்று நாட்கள் மட்டும் அழகிய மணவாளர்  மலைக்கோயிலுக்கு எழுந்தருளுவார்.  அன்று மட்டுமே மூலவரையும், உற்சவரையும் ஒன்றாக தரிசிக்க முடியும்.
திருவரங்கம், வடவேங்கடம், திருக்கோட்டியூர் ஆகிய தலங்களோடு இத்தலத்தையும் இணைத்துப் பூதத்தாழ்வார் பாசுரங்கள் பாடியுள்ளார்.
திருமங்கையாழ்வார்    நான்குதிவ்ய தேசங்களான நாச்சியார்கோவில், திருவாலி,திருகுடந்தை , திருகோவிலூர் ஆகிய திருத்தலங்களை வணங்கிய பலன்கிடைக்கும்ன்னு சொல்லியிருக்கார். பூததாழ்வாரோ ஸ்ரீ ரங்கத்தை  வணங்கிய பலனை கிடைக்கும் என்றே சொல்லிவிட்டார்.
மலைமேல் இருக்கும் மூலவர் – சாந்த நரஸிம்மன்,வீற்றிருந்த திருக்கோலம்,  கிழக்கு நோக்கிய காட்சியிலும். மூலவர் – ரங்கநாதன், மாணிக்கசயனம், தெற்கே நோக்கிய காட்சியிலும்.தாயார் – ரங்கநாயகி. (தனிக் கோவில் நாச்சியார்) . கிழக்கே நோக்கிய காட்சியிலும் மூலவர் – த்ரிவிக்ரமன் , நின்ற திருக்கோலம்,  கிழக்கே கிழக்கு நோக்கிய காட்சியிலும் தரிசிக்கலாம்.
பெருமாள் இங்கே .. நின்றான்… இருந்தான்… கிடந்தான்… நடந்தான் .. என நான்கு நிலைகளில் நமக்கு தரிசனம் கொடுக்கிறார்.
நீர்வண்ணப்பெருமாள்  நின்றதிருக்கோலத்தில்- எனவே நின்றான்
சாந்த நரஸிம்மன்,- இருந்தான்
ரங்கநாதன்…கிடந்தான்
மூலவர் – த்ரிவிக்ரமன் …நடந்தான்
ஆண்டாளும் தனி சன்னதியில் எழுந்தருளியுள்ளார்.
thiruneer-4
இரணியனை சம்ஹாரம் செய்ய நரசிம்ம அவதாரம் எடுத்த மகாவிஷ்ணு, உக்கிரமாக இருந்தார். இந்த வடிவம் கண்டு  பிரகலாதன் பயந்தான். எனவே, அவர் தன் உக்கிர கோலத்தை  மாற்றி,  பாலரூபத்தில் தரிசனம் தந்தார். இவரை “பால நரசிம்மர்’ என்கின்றனர். மலைக்கோயிலில் இவருக்கு சன்னதி  இருக்கு. இவருக்கு பின்புறம் நரசிம்மர், சுயரூபத்துடன் இரண்டு கரங்களுடன் காட்சி தருகிறார்.
இடக்கைஆட்காட்டி விரலை உயர்த்திக் காட்டுகிறார். இவரிடம் சங்கு, சக்கரம் இல்லை. இவ்வாறு இங்கு பால வடிவம் மற்றும் சுயரூபம் என இரண்டு வடிவங்களில் நரசிம்மரை தரிசிக்கலாம்.
கொடிமரத்தின் முன்பு கருடாழ்வார் வீற்றிருந்து அருள் பாலிக்கிறார் அவருக்கு நேரே ஸ்ரீதேவி பூதேவி சமேதராக ஆதிசேஷனின் குடையின் கீழ் சயன கிடந்த திருக்கோலத்தில் ஸ்ரீரங்கநாதராய் அருள்பாலிக்கிறார். அவருடைய தொப்புள் கொடியிலிருந்து பிரம்மாவும் தாமரை மலரில் அமர்ந்திருக்கும் திருக்கோலமும் நாம் இங்கு சேவிக்கலாம்.
thiruneer-5
சித்திரை உத்திரத்தில் நீர்வண்ணர், அணிமாமலர் மங்கை திருக்கல்யாணமும், பங்குனி உத்திரத்தில் ரங்கநாதர் , ரங்கநாயகி திருக்கல்யாணமும் நடக்கும்..
ஆயுள்பலம் அதிகரிக்க வாழ்க்கை பிரச்சனையின்றிச் செல்ல, குழந்தைகள் நோயில்லாமல் ஆரோக்கியமா வாழ..,  குடும்பப் பிரச்சனைகள் மறைந்துபோக, இங்கு வந்து பெருமாளைத் தரிசனம் செய்து விட்டு சென்றால் போதும். அவர்களுக்கு பஞ்சகிரகங்களின் அனுக்கிரகங்களும் கிடைக்கும். கடன் தொல்லையும் நிவர்த்தியாகும்.
இந்தக் கோயிலின் எதிரிலுள்ள புஷ்கரிணியில்(குளம்) சித்த தீர்த்தம், சொர்ண தீர்த்தம், காருண்ய தீர்த்தம்,  க்ஷீர தீர்த்தம் என நான்கு தீர்த்தங்கள் சங்கமித்துள்ளன.