மேஷம்

உங்களின் அதீத முயற்சியால் வருமானம் கூடும். குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் இருக்கும்.கணவன் மனைவிக்கிடையே நிதானமான போக்கு காணப்படும். பிள்ளைகளின் கருத்தை அறிந்து அதற்கேற்றார் போல் செயல்படுவீங்க. மூத்த சகோதரர் உடல்நலத்தில் கவனம் தேவை. பெண்களுக்கு மனக்குழப்பம் நீங்கும். மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். கூடுதலாக பொறுப்புகள் சேரும். ஆபீஸில் வேலையை முடிக்க கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். அன்னிய மொழி பேசுபவர்களால் உதவி கிடைக்கும். எதிலும் நிதானமாக ஈடுபடும் உங்களுக்கு இந்த வாரம் பணவரத்து திருப்திகரமாக இருக்கும். குழந்தைங்க குட் நியூஸ் கொண்டு வருவாங்க. மனைவிக்கு / ஹஸ்பெண்டுக்கு நல்ல செய்தி வரும். திருமணம் அல்லது குழந்தைப் பேறு எதிர்பார்த்துக்கிட்டிருக்கறவங்களுக்கு எண்ணம் நிறைவேறி சந்தோஷம் வரும்.

சந்திராஷ்டமம் : ஜனவரி 7 முதல் ஜனவரி 9 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருக்க வேண்டும்.

ரிஷபம்

அரசியல்துறையினருக்கு பயணங்கள் ஏற்படும். மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் உண்டாகும். பாடங்களை கவனமாக படிப்பது முன்னேற்றத்துக்கு உதவும். பொருளாதார சிக்கல் நீங்கும். எந்த ஒரு காரியத்திலும் தெளிவான முடிவு எடுக்க முடியாத குழப்பம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். சொன்ன சொல்லை காப்பாற்றுவீங்க. எதிர்ப்புகளை சமாளித்து முன்னேற எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். தொழில் வியாபாரத்தில் போட்டிகள் குறையும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்கலாம். சிலருக்கு ஆபீசில்/ காலேஜில்/ ஸ்கூலில் கூடுதல் பொறுப்புகள் வரும். யூ வில் என்ஜாய் தெம். மற்றவர்களிடம் பேசும் போது யாரைப் பற்றியும் விமர்சிக்காமல் இருப்பது நல்லது. மாணவர்கள் அதிக நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது அவசியம். சுபநிகழ்வுகள் நடக்கும். காரியதடை, தாமதம் விலகும்.

சந்திராஷ்டமம் : ஜனவரி 9 முதல் ஜனவரி 11 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருக்க வேண்டும்.

மிதுனம்

கவலைங்க குறையும். இன்கம் திருப்தி தரும். ஸ்டூடன்ட்ஸ் கல்வியில் சிறந்து விளங்குவாங்க . ஸ்டூடன்ட்ஸ்க்கு  கல்வியில் இருந்த தடைகள் நீங்கும். வாகனங்களில் நிதானம் அவசியம். கூர்மையான பொருட்களை கையாளும் போது கேர்ஃபுல்லா இருங்க . பெரிய அளவில் முதலீடுகள் செய்ய வேண்டாம். ஷேர் மார்க்கெட்ல இன்வெஸ்ட் செய்வதைத் அவாய்ட் செய்ங்க. யாருக்கும் ஜாமீன் கையெழுத்துப் போட்டு மாட்டிக்கொள்ள வேண்டாம். யாரை நம்பியும் லோன் தர வேண்டாம். உறவினர்களின் ஹெல்ப்  கிடைக்கும். அப்பா வழி சொத்துக்கள், பிதுராஜ்ஜித சொத்துக்களால் லாபம் கிடைக்கும். அபரிமிதமான பணவரவு உண்டு. சமயோசிதமாக செயல்படும் உங்களுக்கு இந்த வாரம் எதிர்பார்த்த பணவரத்து தாமதப்படலாம். மனநிம்மதி அதிகரிக்கும். வீண் பிரச்சினைகளை தாண்டி சாதிப்பீங்க. கலைத்துறையினருக்கு லாபம் அதிகரிக்கும்.

கடகம்

புதிய பதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், உற்சாகமும் காணப்படும். கணவன், மனைவிக் கிடையில் இருந்த பிரச்சினைகள் தீரும். பிள்ளைகள் பற்றிய கவலைகள் நீங்கும். உறவினர் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பெண்களுக்கு முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். கலைத்துறையினருக்கு காரியங்களை செய்து முடிப்பதில் திறமை வெளிப்படும். அரசியல்துறையினருக்கு பணவரத்து கூடும். மாணவர்களுக்கு கல்வியில் நினைத்ததை விட கூடுதல் பாடங்களை படிக்க வேண்டி இருக்கும். மனம் தளராது செயல்பட்டால் வெற்றி கிடைக்கும். பிள்ளைகள் நலனில் அக்கறை காண்பீங்க. உடல்களைப்பும், சோர்வும் உண்டாகலாம். பெண்களுக்கு எந்த காரியத்தில் ஈடுபடும் போதும் யோசித்து செயல்படுவது நல்லது. வீண் அலைச்சல் ஏற்படலாம். அது பற்றிப் பெரிய கவலையோ அலுப்போ ஏற்படாதுங்க. உற்சாகமே வரும்.

சிம்மம்

பேசும் வார்த்தைகளில் நிதானமும் கவனமும் தேவைங்க. பணிச்சுமை அதிகரிக்கும். தொழிலில் பிராப்ளம்ஸ் வம்பு வழக்கு வரும். வாகன பழுதுகள் நீங்கும். வெளிநாடு போறதுக்கான சான்ஸ் வரும். ரொம்ப காலம் ஆசைப்பட்ட விஷயங்களில் ஒண்ணு உங்களைத் தேடிக்கிட்டு வரும். ரொம்ப காலமாக் கிடப்புல போட்ட விஷயம் ஒண்ணு எடுத்து முடிச்சு ‘அப்பாடா’ன்னு நிம்மதியடைவீங்க. ஆன்லைன் வர்த்தகங்கள் மூலம் கிடைக்கும் வருமானம் உங்களைச் சுற்றியிருக்கறவங்களை பிரமிக்க வைக்கும். ஊழியர்கள் உற்சாகத்துடன் வேலை பார்க்க வேண்டும். சிலர் வேலை மாறுதலால் வேறு இடத்திற்கு செல்ல வேண்டி வரும். கடினமாக உழைத்தாலும் மேலதிகாரிகளின் கவனத்தை கவருவது சற்று சிரமம்தான். இருந்தாலும்  மனச்சாட்சிக்கு விரோதமில்லாம ஒங்க கடமையைச் செய்துக்கிட்டே போங்க. பிற்கால நன்மைக்கு அது வழி வகுக்கும்.

கன்னி

ஸ்டூடன்ட்ஸ்க்கு  கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். விளையாட்டுத்துறையில் இருப்பவர்களுக்கு நல்ல யோகம் வரும். ஸ்டூடன்ட்ஸ் படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியம். அரசியல் துறையில் உள்ளவர்களுக்கு புதிய பொறுப்புகள் தேடி வரும். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். சகோதர சகோதரிகளின் மூலம் ஹெல்ப்  தேடி வரும். உடல் உபாதைகள் விலகும். தோல் நோய்கள் நீங்கும். அலுவலகத்தில் கவனமும் நிதானமும் தேவைங்க. நீங்க பெண்ணா இருந்தாலும் சரி.. ஆணா இருந்தாலும் சரி..  புதிதாக அறிமுகமான பெண்களின் பழக்கங்களை நெருக்கமாக ஆக்கிக்காதீங்க. ஒங்களோட பர்சனல் விஷயங்களை அவங்க கிட்ட சொல்ல வேணாம். நாடகம், சினிமா போன்ற துறைகளில் வேலை பாக்கறவங்க பிரகாசமான பயனை அடைவாங்க. தொழிலில் முழு கவனத்தையும் செலுத்துங்கள். அதற்கான பரிசு லாபமாக கிடைக்கும்.

துலாம்

வேலையில் பிரமோஷன்  வரும். புதிய பொறுப்புகள் வரும். சம்பளம் அதிகரிக்கும். வேலையில் இருந்த பிரச்சினைகள், சங்கடங்கள் நீங்கி சந்தோஷம் அதிகமாகும் பொன் பொருள் சேர்க்கை ஏற்படும். சிலருக்கு நல்ல வேலை கிடைக்கும். பிரைவேட் கம்பெனியில் வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு சம்பள உயர்வு கிடைக்கும். வேலை காரணமா அலைச்சல் அதிகமாக இருந்தாலும் நல்லபடியா அந்த வேலையை முடிச்சு சந்தோஷமும் பாராட்டும்  கிடைக்கும்படி ஜெயிப்பீங்க. வீட்டில் உங்கள் மனம் கோணாமல் நடந்து கொள்வாங்க. புதிய நண்பர்களை அதிகம் நம்ப வேண்டாம். வியாபாரத்துலயோ உத்தியோகத்துலயோ சிக்கல்கள் தோன்றலாம். எப்படியாச்சும் உங்களை கவிழ்க்க வேண்டும் என்று எதிரிகள் முயற்சி செய்வாங்க. எச்சரிக்கையாக இருங்கள். இரும்பு சம்பந்தப்பட்ட உபகரணங்களை கவனமாக பயன்படுத்துங்க.

விருச்சிகம்

பிரமோஷனுடன் கூடிய இடமாற்றம் உண்டாக சான்ஸ் இருக்குங்க. பிள்ளைகள் மூலம் நன்மைகள் அதிகரிக்கும். தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வெளிநாடு ஏற்றுமதி இறக்குமதியால் லாபம் அதிகரிக்கும். சிலர் பழைய வாகனங்களை கொடுத்து விட்டு புதிய வண்டி வாகனங்களை வாங்கலாம். கவனமும் நிதானமும் தேவைங்க. பயணங்களில் விழிப்புணர்வு அவசியம். பயணங்களின் போது பொருட்களெல்லாம் பத்திரமா இருக்கான்னு அப்போதைக்கப்போது செக் செய்துக்குங்க. ஆன்லைன் வர்த்தகங்கள் அவ்வளவா நன்மையை தராது. பெரிய ரிஸ்க் எதுவும் இந்த வாரம் எடுக்க வேணாம். அரசாங்க ஊழியர்கள் எச்சரிக்கையாய் வேலை பார்க்கணுங்க. செலவு வந்து வாட்டி எடுக்கும். டோன்ட் ஒர்ரி. அதுக்கு மேல வரும்படி வந்துக்கிட்டிருக்கும்.  கை மாத்தாக் குடுத்த பழைய பாக்கிங்கள்லாம் திரும்ப வந்து நிம்மதி தரும்.

தனுசு

பல்வேறு சிறப்புகள் வீடு தேடி வரும். முகத்தில் பொலிவு கூடும் உடலில் சுறுசுறுப்பு அதிகரிக்கும். அரசு வேலை செய்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். அரசாங்கத்தால் அனுகூலம் உண்டாகும். சிலருக்கு பதவி உயர்வும் வேலையில் இடமாற்றமும் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். இன்கம்அதிகரிக்கும். பெரியவங்க ஆலோசனை வியாபாரத்துக்கு ரொம்பவும் உதவியாக இருக்கும். சின்னப் பிரச்சனையை கூட பெரிசா நினைச்சுக்கிட்டுக் கவலைப்படுவீங்க. ஏங்க அப்பிடிச் செய்யறீங்க? அதனால தூக்கம் கெடும். தைரியமாய் எந்தச் செயலில் ஈடுபடுங்கப்பா. சக மனிதர்களை அலட்சியமா நடத்தாதீங்க. தொழிலில் துணிந்து முதலீடு செய்வீங்க. நீங்க பிசினஸ்  செய்யறவரா/ செய்யறவங்களா இருந்தால் வெளியூர் பயணங்கள் மூலமாக வியாபாரத்துக்கு தேவையான ஆர்டர்களை பெறுவீங்க. பயணம் சந்தோஷம் தரும்.

மகரம்

ஸ்டூடன்ட்ஸ்க்கு உயர்கல்வி யோகம் தேடி வரும். சிலருக்கு பதவி உயர்வும் வேலையில் இடமாற்றமும் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். இன்கம்அதிகரிக்கும். லேடீஸ்க்குநன்மைகள் அதிகரிக்கும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுங்கள். பேச்சில் கவனமும் நிதானமும் தேவைங்க. வண்டி வாகனங்களில் போகும் போது நிதானம் அவசியம். சனிக்கிழமைகளில் எள் தீபம் ஏற்றி வணங்கிட்டீங்கன்னா   நன்மைகள் அதிகரிக்கும். எந்தத் தொழிலாக இருந்தாலும் ஏற்றம் பெறுவீங்க. எதிர்ப்புகள் வரட்டுமே… அது உங்களை ஒன்றும் செய்யாது. விரோதிகள் கூட வீடு வரை வந்து உதவி செய்வாங்க. பெரியோர்களின் ஆதரவால் சில நல்ல காரியங்கள் நடக்கும். அரசாங்க ஊழியர்கள் பதவி உயர்வு பெறுவாங்க. வழக்கறிஞர்கள் வாத திறமையால் வெற்றி பெறுவாங்க. பேச்சுல மட்டும் கவனமாய் இருந்துட்டீங்கன்னா போதும். ஜெயம்தான்.

கும்பம்

கேட்ட இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். குடும்ப ஒற்றுமை அதிகரிக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் மூலம் செல்ல செழிப்பு அதிகரிக்கும். காதல் திருமணம் கைகூடி வரும். பொன் பொருள் ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். பேச்சாற்றல் அதிகரிக்கும். பொருளாதார வளர்ச்சி மேம்படும். பழைய கடன்கள் நிவர்த்தியாகும். ஸ்டூடன்ட்ஸ்க்கு  கல்வியில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். மேலதிகாரிகளின் அன்பை பெறுவது கடினம். அதற்கான கடுமையான முயற்சி நல்ல பலன் தரும். ஆன்லைன் வர்த்தகங்களில் கவனமாக ஈடுபடுங்கள். கணவன் மனைவி உறவு மகிழ்ச்சியாக இருக்கும். பார்ட்னர்கள் பக்குவமாக நடந்து லாபத்தை அதிகரிப்பாங்க. சிலருக்கு வேலை வாய்ப்புகள் வீடு தேடி வரும். அதை நழுவ விடாதீங்க. குடும்பத்தில் பொறுமை அவசியம். எந்த காரணத்தை கொண்டும் மனைவியை/ கணவரைக் குத்தி காண்பிக்காதீங்க. அலுவலகக் கோபத்தைக் குடும்பத்துலயும் குழந்தைங்க கிட்டேயும் காமிக்காதீங்க. பழைய நட்பைப் புதுப்பிச்சு சந்தோஷப்படுவீங்க.

மீனம்

தொழில் வியாபாரிகளுக்கு நிறைய லாபம் கிடைக்கும். சரக்குகள் விற்று தீரும். ஸ்டூடன்ட்ஸ்க்கு  கல்வியில் முன்னேற்றம் உண்டாகும். மந்தநிலை நீங்கி சுறுசுறுப்பு அதிகமாகும். குடும்பத்தில் இருந்து வந்த வம்பு வழக்குகள் நீங்கும். புதிதாக வாகனங்கள் வாங்கலாம். வெளிநாட்டில் இருந்து நல்ல செய்திகள் தேடி வரும். லேடீஸ்க்குநன்மைகள் நிறைந்த வாரமாகும். வீட்டிலும் வெளியிடங்களிலும் மதிப்பு மரியாதை கூடும். விரோதிகளின் சூழ்ச்சிகளை துடைத்து தொழிலில் முன்னேற்றம் காண்பீங்க. மருந்து வர்த்தகர்கள், மருத்துவர்கள் அதிக பலனை அடைவாங்க. முன்கோபத்தை விலக்குவது நல்லது. அதனால் நல்ல நட்புகளை இழக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். தக்க சமயத்தில் உறவினர்கள் உதவிகரமாக நிற்பாங்க. யாரைப் பற்றியும் யாரிடமும் விமர்சிக்க வேணாம். எந்த விஷயத்தை எடுத்தாலும் அது ஒரு முறைக்கு நாலு முறை போகும்படி டிலே ஆகத்தான் ஆகும். பொறுமையா இருங்க.

சந்திராஷ்டமம் : ஜனவரி 5 முதல் ஜனவரி 7 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருக்க வேண்டும்.