மேஷம்

மனைவியாலும் மனைவி வழி ரிலேடிவ்ஸால் லாபமும் நன்மையும் உண்டாகும். தொடர்ந்து நல்ல பெயரைக் காப்பாத்திக்க வேண்டும் என்பதை நினைவில் வெச்சு கவனமாய் இருப்பீங்க. அயராத  உழைப்பினாலேயே பெரிய நன்மைகளைக் காணப்போறீங்க. ஆனால் கண்டிப்பா உழைப்பில்லாத அதிருஷ்டத்தின்மீது மில்லிமீட்டர் எதிர்பார்ப்பு அல்லது நம்பிக்கைகூட வேணவே வேணாம். அசாதாரண லக் எதையும் எதிர்பார்க்க வேண்டாம். நிறையச் செலவுகள் இருக்கும். அதே சமயம் முன்பிருந்த உத்யோகம்.. சம்பளம்.. வாழ்க்கை வசதிகள்.. பிசினஸ் லாபம்ஸ் எதிலும் ஒரு குறையும் இருக்காதுங்க. டோன்ட் ஒர்ரி. சொத்து வாங்க செய்த முயற்சிகள் விருப்பப்படி நிறைவேறும். அது பற்றிக் கவலையோ டவுட்டோ வேண்டாங்க. எனினும் அதற்கான முயற்சிகளும் செலவுகளும் நீங்க எதிர்பார்த்ததைவிடவும் அதிகமாயிருக்க வாய்ப்பிருக்கு. கணவன் மனைவிக்குள் இருந்து வந்த சண்டை சச்சரவுகள் குறைந்து இன்முகமான சூழல் நிலவும்.

ரிஷபம்

மகன்/ மகளால் ஏற்பட்டிருந்த டென்ஷன்ஸ் ஒவ்வொன்றாய்த் தீர்ந்துக்கிட்டே வந்து நிம்மதி தர ஆரம்பிக்கும். சந்தோஷம்தானே? முன்பு இருந்ததைக் காட்டிலும் நிதி நிலைமையும் பலப்படுவதால் மனதில் தெம்பும் உற்சாகமும் பிளஸ் பிளஸ் ஆகும். சிலர் புதிய வேலைக்கு முயற்சி செய்வதில் முனைப்புடன் ஈடுபடுவீங்க. அடடா, இத்தனை காலம் சும்மா இருந்துட்டோமே என்று ஆதங்கப்படாதீங்க. நல்லகாலம் இப்பதானேங்க வந்திருக்கு. வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு நம்பிக்கையூட்டும் நிகழ்ச்சிகள் நடக்கும். அலுவலகம் சம்பந்தமான சில சாதனைகளை செய்து முடிப்பீங்களே! உங்களுக்கு நல்ல அட்வைஸ் குடுக்கறவங்களை அலட்சியம் செய்யாமல் மதிச்சுக் காதைக் கொடுத்து உருப்பட்டு நன்மை  அடைவீங்க அலுவலகத்தில பல காலமாக நிலவி வந்த பிரச்சினைகளுக்கு நிரந்தரமான தீர்வு கிடைக்கும். பிரதர்ஸ் சிஸ்டர்ஸ் உதவி செய்வாங்க.

மிதுனம்

நிறையக் கோயில்களுக்கு நீங்க போகப்போறீங்க! கொஞ்சமாக நஞ்சமா? எத்தனையோ மாதங்களாக..ஏன்.. வருஷங்களாகவேகூட.. காத்திருந்த சுப விசேஷம் ஒண்ணு முடிவாயிருக்கே..  நீங்களே கொஞ்சம்கூட  எதிர்பார்த்திருக்கவில்லைதானே?  திருமண  முயற்சிகள் மெல்லப்  பலன்தர ஆரமபிக்கும்.  குடும்ப பிரச்னைகள் காரணமாய்த் தூக்கமின்றி அல்லல்பட்டுக்கொண்டிருந்தவர்களுக்கு நிம்மதிப்பெருமூச்சு வரும். இதனால் அப்பாவுக்கு திடீர் நன்மைகள் நிகழும்.ஊருக்குப் போறதுக்கு எல்லாம் பேக் பண்ணியாச்சா? ரெடியா இருங்க. நீங்க ஆவலுடன் எதிர்பார்த்திருந்த ட்ரிப் அது. படிப்புக்கோ உத்யோகத்துக்கோ திருமணமாகியோ வெளிநாடு போகப்போறீங்க. குட் லக். எல்லா விஷயத்திலும் ஜாக்கிரதையா இருக்கணுங்க.பேச்சிலும் செயலிலும் இரட்டிப்பு ஜாக்கிரதையா இருக்கணுங்க.

கடகம்

அலுவலகத்தில் உங்களுடைய வேலையை வேறு ஒருவரிடம் ஒப்படைத்து செய்ய முடியாமல் நீங்களே செய்ய வேண்டிய சூழ்நிலை அமையும். சில நல்ல விஷயங்கள் பற்றி அவசரம் அவசரமாய் முயற்சி செய்துட்டு வேக வேகமாய்ப் பலனை உடனடியாய் எதிர்பார்த்தா எப்பிடிங்க? வெயிட்டீஸ் ப்ளீஸ். அததுக்கு நேரம் வந்தால் நாலு கால் பாய்ச்சலில் நன்மை வந்தடையும். பொறுங்க.  உடனடிப் பலன் இல்லையேன்னு முயற்சி செய்வதை நிறுத்தி சமுத்திரத்தில் போட்டுடாதீங்க. மேரேஜ் பற்றிய பேச்சுக்கள் நல்லபடியாக முடியும்.  அப்பாடா எவ்ளோ காலமாய்க் காத்திருந்தீங்க.  ஆனாலும் திருமண நாள் சற்று போஸ்ட்போன் ஆக வாய்ப்பிருக்குங்க. அதனால்  என்ன? மணமகன்/ மணப்பெண் யாருன்னு தெரிஞ்சாச்சு, இரண்டு பேருக்கும் பலஸ்பரம் பிடிச்சுப்போச்சு., பிறகென்ன? ஜாலிதான்.

சிம்மம்

புதிய கார்.. ஃப்ளாட்..வில்லா..  வாங்குவதற்கு ஏற்பாடு செய்வீங்க. உறவிர் மத்தியில் எல்லா இடங்களிலும் முக்கியத்துவம் எதிர்பார்க்காதீங்க. மனதில் குடும்பம் சம்பந்தமான சிறு சிறு குறைகள் இருப்பதைத்  தவிர்க்க முடியாது.  வீடானாலும் சரி.. வாகனமாயினும் சரி.. அழகாகவும் கவர்ச்சிரகமாகவும் அமையும். நீங்களே எதிர்பார்க்காத அளவு சிறப்பாக இருக்கும். ஒரு வேளை வீடு வாங்கினால் அதில் சுற்றிலும் பசுமை இருக்கும். உங்க பட்ஜெட் சற்று பெரிய அளவில் இருக்கும்னா.. எஸ்டேட் போன்றவை வாங்கவும் சான்ஸ் இருக்குங்க. உழைப்பு எதுவும் வீணாகாது. அததற்குக் காலம் வரும்போது சிறப்பான பலன் கொடுக்கும். இப்பபோ அப்படிப்பட்ட நல்ல காலம் வந்திருக்குங்க. பயணங்களால் லாபம் ,நன்மை ஆகியவற்றை எதிர்பார்க்கலாம். எஸ்பெஷலி அலுகலகம் சம்பந்தமான பயணங்கள். நிதி சம்பந்தமான நன்மைகள் திடீர்னு நடைபெற்று சந்தோஷம் கொடுக்கும்.

கன்னி

உடல் நிலையில் இருந்து வந்த பிரச்சினைகள் எல்லாம் நல்லபடியாக உங்களைவிட்டுக் கிளம்பிப்போயிடுங்க. வெளிநாட்டிலிருந்து பரிசுகள் அல்லது அன்பளிப்பு அல்லது பண வரவு வரும். அது அனேகமாய் உங்க மனசுக்குப் பிடிச்சவங்ககிட்டேயிருந்ததோ சகோதர சகோதரிங்ககிட்டேயிருந்தோ வரும். அவங்கதான் இப்போ ரொம்பவும் உயரத்துக்குப் போயிக்கிட்டே இருக்காங்களே. நண்பர்களுக்கு பிரமோஷன் ஆகுமுங்க.. அவங்களைப் பார்த்துப் பொறாமைப்படாதீங்க. இது ஜயன்ட் வீல். இன்னிக்கு அவங்க போனால் நாளைக்கு அடுத்த ரவுண்டில் நீங்க போவீங்களே. அட ஆமாங்க. எந்த வழக்காக இருந்தாலும் (குறிப்பாகத் தந்தை வழிச்சொத்து சம்பந்தமானவை) சற்று டென்ஷன் கொடுக்கும். பயப்படாதீங்க, அது வெறும் தற்காலிக டென்ஷன்தான். கண்டிப்பாக  சீக்கிரத்தில் உங்களுக்குச் சாதகமான திருப்பம் ஏற்படும். டோன்ட் ஒர்ரி.

துலாம்

வெளிநாட்டிலிருந்து வருமானம் விமானம் ஏறிப்பறந்து வர வாய்ப்பு அதிகம் உண்டு.  அல்லது உத்யோக அழைப்பாவது வரும். நீங்க எதிர்பார்த்த அளவு சம்பளம் கொடுக்க ஒப்புக்கொண்டு மெயில் வரும்.  ஹாப்பிதானே? ஆரோக்யம் நல்ல முறையில் இருக்கும். சொத்து வாங்க செய்த முயற்சிகள் விருப்பப்படி நிறைவேறும். அப்பாடா எத்தனை காலம் கழிச்சு அது நிறைவேறியிருக்குங்க. வீட்டில் இத்தனை காலம் தடைப்பட்டுக் கொண்டு வந்த நல்ல காரியங்கள் நடக்க பிள்ளையால் சுழி போடப்படும். முன்பைவிட அதிகமாகப் பணம் வரும். புண்ணிய காரியங்கள் மற்றும் தர்ம காரியங்கள் செய்வீங்க. சிறிய அளவில் உடல் நலக் கோளாறுகள் ஏற்படக்கூடும். கவர்ச்சி அம்சம் அதிகரிக்கும். கணவருக்கு ஏற்பட்டிருந்த சிரமங்கள் தீர்ந்து மனசில் நிம்மதி பிறக்கும். திடீர் லாபங்கள் வாசல் கதவைத் தட்டி சர்ப்பிரைஸ் கொடுக்கும். குடும்பம் ஹாப்பியா இருக்கும்.

விருச்சிகம்

மம்மிக்கு சின்ன பிரச்னைன்னாலும் உடனே கவனியுங்க. அவங்க சொல்றதுக்கு முன்னாடி வண்டியில் பின்னால் உட்கார வெச்சு டாக்டர்கிட்ட விரைந்து கூட்டிக்கிட்டு போயிடுங்க. டாக்டர் ‘கவலைப்பட எதுவும் இல்லை’ ன்னுசொல்லுவார். தலைக்கு வந்தது கேப்-போடு போகும். உங்க கணவருக்கு / மனைவிக்கு எதிர்பார்த்த நன்மைகள் சீக்கிரத்தில் வரும். கொஞ்சம் அவசரப்படாமல் இருங்க…ப்ளீஸ். வேலை மாறணும்னு ஆசைப்படறீங்க. அவ்வளவுதானே. முயற்சியை முடுக்கிவிடுங்க. வியாபாரம் அல்லது தொழில் செய்யறவங்களுக்கும் கலைத்துறையில் உள்ளவங்களுக்கும் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். ஏற்கனவே உள்ளவற்றை விரைந்து முடிக்க வேண்டி வரும். ஆனாலும் மனசில் உற்சாகமும் தன்னம்பிக்கையும் நிறைஞ்சிருக்கும். புதுசாய் ஏதாவது கோர்ஸ் பாஸ் செய்வீங்க. பயணம் ஒன்று அமைய சான்ஸ் இருக்குங்க.

தனுசு

நல்ல வகையில் பணம் செலவழியுமுங்க. சந்தோஷமான மற்றும் சுபமான வகைகளில் செலவுங்க இருக்கும். பொழுது போக்கு விஷயங்களில் ஈடுபட முடியாது. அதுக்கெல்லாம் நேரம் இருக்காது. நல்ல முறைல உழைக்கப்போறீங்க. சூப்பரா சம்பாதிக்கப்போறீங்க. நல்ல வழில செலவு செய்யப் போறீங்க.  இதைவிடவா ஒரு நல்ல பொழுது போக்கு வேணும்?  நண்பர்கள் சந்திப்பு உண்டு. மனசு நெகிழும் சந்திப்பாக அது அமையுங்க. வீட்டில் புதிதாய் ஒரு கட்டில் அல்லது தொட்டில் வாங்க வேண்டி வரும். வாங்குங்க வாங்குங்க. திருமணம், குழந்தைன்னு வீட்டில் நல்வரவு உண்டு. ஏற்கனவே எல்லோரையும் பேச்சாலும், செயலாலும், அழகாலும், திறமையாலும் கவர்ந்திழுப்பது உங்களிடம் இயல்பாக அமைந்திருக்கும். இப்போது அது பல மடங்கு பெருகும். ஆடை அலங்கார்ங்களிலும் காதல் விவகாரங்களிலும் கூடுதல் கவனம் செல்லும். சருமம் சம்பந்தமான சில சிறு பிரச்னைகள் வந்து சரியாகும்.

மகரம்

வீட்டில் மகிழ்ச்சியும் கலகலப்பும் படிப்படியா.. நாளுக்கு நாள் அதிகரிச்சுக்கிட்டே போகுங்க. கவர்ச்சி அம்சம் காரணமாக முக்கியத்துவம் அதிகரிக்கும். அதைவிட உங்களுடைய செல்வாக்கு கூடுதலாகும். வீடு மனைகளினால் ஆதாயம் ஏற்படும். அது ஒரு வேளை பூர்வீக வீடாகவோ, தந்தை வழி சொத்தாகவோகூட இருக்கலாம். மிகவும் லாபமான காலம்.சிலருக்கு  என்றைக்கோ போட்ட முதலீடுகள் இப்போ வளர்ந்து கனிந்து பெருகும். உங்களில் பலருக்கு மனு செய்து விருப்பத்துடன் காத்திருப்பின் வெளி நாட்டில் வேலை கிடைக்கும். வெகு காலம் கழித்துப் பழைய நண்பர்களைச் சந்திப்பீங்க. ஒங்களோட திறமை கவனிக்கப்படும். மேலதிகாரிகள் உங்களின் நீண்டகால நேர்மையையும் உழைப்பையும் கவனித்து ஆதரவு காட்டுவாங்க, சூப்பர்தான் போங்க. பேச்சினால் நன்மை வரும். எதை எடுத்தாலும் இத்தனை ஸ்லோவாய்ப் போகுதேன்னு டென்ஷன் வேணாம். முடிவு நல்லபடியா இருக்கும். அதானே வேணும்?

சந்திராஷ்டமம் ஆகஸ்ட் 26 முதல் ஆகஸ்ட் 29 வரை

கும்பம்

ஆபீஸ்ல உங்களுக்கு நன்மை அதிகரிக்கும். உத்யோகம் சம்பளம் இரண்டும் உயரவும் வாய்ப்பு உள்ளது. நீங்க செய்யும் முயற்சிகள் எல்லாம் சக்ஸஸ் ஆகும். சிரமங்களிலிருந்து நல்ல முறையில் விடுபட்டுட்டீங்க. பல காலம் நிறைவேற்றாத திட்டங்கள் நிறைவேறும். பிரார்த்தனைகளை நிறைவேற்றக் கோயில்களுக்குப் போவீங்க. நிறையப் புண்ணிய காரியங்கள் செய்வீங்க. பாப்பாவுக்கு உடம்பு சரியில்லாமல் போனால் உடனே சாமியைத் திட்ட வேண்டாம். நீங்க திட்டி முடிக்குமுன் குழந்தை ஜாலியா சிரிச்சுப் பேசி விளையாட ஆரம்பிக்குங்க. எந்த முயற்சியும் உங்களுக்கு வெற்றியாய்த்தான்முடியும் . ஆனால் எடுத்த வேலைகளில் சோம்பல் உள்ளே புகுந்து வேலைகளைத் தாமதப்படுத்தாமல் பார்துக்குங்க. திடீர் நன்மைகளையும் லாபங்களையும் ஷ்யூரா எதிர்பார்க்கலாம். பிரதர்ஸ், சிஸ்டர்ஸ்க்கு நன்மை உண்டாகும். விருந்து சாப்பிடுவீங்க. என்ஜாய்.

சந்திராஷ்டமம் ஆகஸ்ட் 29 முதல் ஆகஸ்ட் 31 வரை

மீனம்

உங்களுக்கு எண்ணம் இருந்தால் வீடுகளை வாங்க, விற்க இது கரெக்டான டைம்தான். லாபம் வரும். உழைப்பினால் நன்மைகளைக் காணப்போகிறீர்கள் பாருங்களேன். உங்க ஆபீசில் இத்தனை நாளா இருந்து வந்த  பிரச்னைங்களுக்குத் தீர்வு கிடைக்கும்.  மாணவர்கள் ஸ்காலர்ஷிப் கிடைக்க முயற்சி செய்யலாம். கூடிய விரைவில் பலன் கிடைக்கும். மாணவர்களுக்குப் படிப்பில் அக்கறை கூடுதலாயிக்கிட்டு வரும்.  குழந்தை வேணும்னு ஏங்கிக் காத்திருந்தவர்களுக்கு, அந்த பேபிக்காக விளையாட்டுப் பொருட்கள் வாங்கும் வேளை வந்துவிட்டதுங்க. கிட்டத்தட்ட ஒரு வருஷத்துக்கு மேலாகவே  நீங்க கிடப்பில் போட்டிருந்த பெண்டிங் வேலைப் பட்டியலை எடுத்துத் தூசி தட்டி நிறைவேத்துவீங்க. நடக்கட்டும்! எவ்ளோ சந்தோஷமா இருக்கில்லைங்க. உத்யோகம் மற்றும் கல்வி சம்பந்தமான முயற்சிகளுக்கான நல்ல பலன்கள் ஏற்படும்.

சந்திராஷ்டமம் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 2 வரை