வார ராசிபலன் 24-11-17 முதல் 30-11-17 வரை – வேதா கோபாலன்

Must read

மேஷம்

வெளிநாட்டுக்குப் போயி வேலை  பார்க்கப்போறீங்களா? அதில் சில பல தடைகள் ஏற்படுதா? ஸோ வாட்னு கேட்கறேன்… எதுவும் நன்மைக்குன்னு உங்களுக்குத் தெரியாதா என்ன? இப்ப போனால் சிரமம் வரும்னுதானே இயற்கையும் இறைவனும் நவகிரகங்களும் அப்படி செய்யறாங்க. புரிஞ்சுக்குங்கப்பா. ப்ளீஸ். மம்மியோட எப்பவும் புரிதல் இல்லை. உங்களை என்னதான் செய்ய, இப்பவாவது அவங்பகளைப் புரிஞ்சுக்குங்க. குழந்தைங்க சற்று டென்ஷன் செய்தால் முப்பத்திரெண்டு பற்களையும் கடிச்சுக்கிட்டுப் பொறுமையைப் பூசிக்குங்க. மிக தற்காலிகம்தான்.
ரிஷபம்

சகோதர சகோதரிகள் ஃபாரின்ல இருக்காங்களா? சூப்பர். உங்களுக்கு அவங்களால நன்மைகள் ஏற்படப்போகுதுங்க. பல காலத்துக்கு .. அல்லது ஆயுள் முழுக்க அவங்களை நீங்க நன்றியோட நினைக்கும்படி அவங்க உங்களுக்கு  நன்மை செய்வாங்க. டாடிக்குப் புகழும் பெருமையும் கைதட்டல்களும் கிடைக்கும். அவருக்கும் உங்களுக்கும் சின்னச்சின்ன உரசல்கள் ஏற்பட விடாமல்  பணிஞ்சு போங்களேன். குழந்தைங்க வீரதீர சாகசங்கள் செய்வாங்க. அவங்களைப் பலர் பாராட்டும்போது அகமகிழ்ந்து போவீங்க. என்ஜாய். என்ஜாய்

மிதுனம்

காத்திருந்த நல்ல விஷயங்கள் எல்லாமே அடுத்தடுத்துக் கைகூடித் திணற வைத்து சந்தோ ஷப்படுத்தும். கணவருக்கு/ மனைவிக்கு நன்மைகள் தேடி வரும். குடும்பத்தினருடன் வெளியூர் வெளிநாடு என்று செம ஜாலியா ஒரு சுற்றுப் பயணம் போய் ஒரு சுற்றுப் பெருத்துடுவீங்க. குழந்தை இல்லாதவங்க வாழ்வில் தொட்டிலுக்கு லைட் போட்டாச்சு. குழந்தைங்க போட்டிகளில் கலந்துகிட்டா நீங்க விரும்பிய  அல்லது எதிர்பார்த்த நல்ல ரிசல்ட் கிடைக்கலைன்னா நீங்களும் துவளாதீங்க… அவங்களையும் துவள அனுமதிக்கா தீங்க

சந்திராஷ்டமம் : நவம்பர் 23 முதல் நவம்பர் 25 வரை

கடகம்

மம்மிக்கு ஏராளமான புகழும் பெருமையும் கிடைக்கும். அவங்களுக்கும் உங்களுக்கும் இருந்துக்கிட்டிருந்த சின்னச்சின்னப் பிரச்சினைகள் தீர்ந்து சந்தோஷமான சூழல் நிலவும். கணவருக்கு/ மனைவிக்கு வர வேண்டிய நன்மை கொஞ்சம் நத்தை வேகத்திலோ ஆமை வேகத்திலோ போனால் உடனே டென்ஷன் ஆகவே வேணாம். கண்டிப்பா நல்லபடியா முடியும். வேகமா ஓட வேண்டியது முக்கியமா? வின்  பண்ண வேண்டியது முக்கியமா? குழந்தைங்க வாழ்விலும் சின்ன சறுக்கல்களும் கடுகு சைஸ் டென்ஷன்களும் இருக்கத்தான் செய்யும். வெயிட். சரியாகும்னா சரியாகும். கண்டிப்பா சரியாகும் .

சந்திராஷ்டமம் : நவம்பர் 25 முதல் நவம்பர் 28 வரை

சிம்மம்

ஆரோக்யம் சூப்பரா  இருக்கும். மெகா வெற்றிகளும் சந்தோஷக்கூச்சல்களும் என்று டைட்டில் போடக்கூடிய சமயம் இதுதான். இதுவேதான். வீட்டில் விழாக்கோலம் உங்களை  செம சந்தோஷமாக்கும். மம்மிக்கு சின்னத் தடைகள் வரும், எனினும் அடிப்படை சறுக்கல் எதுவும் இருக்காது. நண்பர்கள் மம்மிக்கு நிறைய உதவுவதால்  சிரமங்களும் இருக்காது..  நன்மைகளும் அதிகமாகும். எடுத்த காரியத்தை முடிச்சே ஆகணும்னு கையில் ஒரு கங்கணம் கட்டிக்குங்க. சோம்பலுக்கு டாட்டா சொல்லணும்.

சந்திராஷ்டமம் : நவம்பர் 28 முதல் நவம்பர் 30 வரை

கன்னி

உங்க மம்மிக்கு அரசாங்க சம்பந்தப்பட்ட ஏதாவது உதவிக்கோ நன்மைக்கோ வெயிட் பண்ணிக்கிட்ருக்கீங்களா, இதோ வந்தாச்சே! குழந்தைங்க மேடை ஏறிப் பாராட்டும் பரிசும் வாங்குவாங்க. சீக்கிரத்தில் வெளி நாடு சம்பந்தப்பட்ட நியாயமான செலவுகளுக்கு வேற கார்ட்டைத் தேய்ப்பீங்க. எது எடுத்தாலும் தடை.. தாமதம்னு டென்ஷன் ஆக வேண்டாம். தானாய் இயல்பாய் நடக்கும். புது வண்டி வாங்கப் போறீங்க.  சபாஷ். ஆல் த பெஸ்ட். வேலை பார்க்கும் இடத்தில் உங்கள் கடுமையான உழைப்பும் , செய்யும் பொறுப்புணர்வும் செம நல்ல பெயர் வாங்கித்தரும்

துலாம்

நண்பர்கள் எதிரிகளாகலாம். மிக கவனமாயிருங்க. இத்தனை காலம் இல்லாத ஆர்வம் படிப்பில் துள்ளும். உத்யோக விஷயத்தில் அரசாங்கத்தின் உதவி கிடைக்கும், மருத்து வர்களுக்கும்  கட்டடத் துறையினருக்கும் லாபம்ஸ் உண்டுங்க. செலவுகளுக்கு ஒரு பெரிய நோ சொல்லுங்க. நண்பர்களைத் தேர்ந்தெடுக்கும்போது கொஞ்சம் கேர்ஃபுல்லா இருந்தா நல்லது. குழந்தை குட்டிகள்னா சின்னச் சின்னக் கவலைகள் இருக்கத்தான் செய்யும். அதுக்குப் போய் டென்ஷன் ஆவீங்களா என்ன?

விருச்சிகம்

கல்யாணம் கச்சேரி  கொண்டாட்டம் எல்லாமே இதே வந்தாச்சு. மாலை சூடும் மணநாள் கண்ணில் தென்படும். விறுவிறுவென்று சுப நிகழ்ச்சிகள் நிறைவேறும். லோன் போடுவதைச் சற்றுத் தள்ளிப்போடப்பாருங்க. வீட்டில் உள்ளவங்க வெளிநாடு போவாங்க. பாவம். கணவருக்கு வெளியூர் வெளிநாட்டு வாய்ப்புக்கள் கிடைக்கும்.  எந்த விஷயத்திலும்அதீர கவனமும் ஜாக்கிரதையுணர்வும் தேவை. யாரையும் பகைச்சுக்கவே வேண்டாங்க.

தனுசு

குழந்தைங்களை சும்மா திட்ட வேண்டாம், அவங்க வேணும்னு எந்தத் தப்பும் செய்யலையே. குடும்பத்தில் இவ்வளவு நாளாய்க் காணாமல் போயிருந்த சந்தோஷமும் மகிழ்ச்சியும் உற்சாகமும் ஒரு வழியாய் இந்த வாரம் மீண்டுவிடும். வீட்டில் கட்ட மாவிலைத்தோரணம் தயார் செய்ங்க. எல்லாம் திடீர் நிகழ்வுகளாக இருக்கும். நினைத்தீர்களா இது நடக்கும் என்று? நினைக்குமுன்னே எல்லாம் கனியும். அலுவலகத்தில் அனைவரையும் மூக்கில் விரல் வைக்கச்செய்வீர்கள்.

மகரம்

பெட்டி படுக்கை பேக் பண்ணி ரெடியா  வெச்சிருக்கீங்களா? வெளிநாடு போகத் தயாரா? வண்டி ஒட்டும்போது பாட்டு கேட்கவோ ஃபோன் பேசவோ வேண்டாங்க.  குழந்தைங்க பற்றிக் கடந்த ஒரு வருஷமா இருந்து வந்த டென்ஷன் இந்த வாரம் முதல் படிப்படியாகக் குறைந்து முழு நிம்மதி நிலவும். பயணங்களை இன்னும் கொஞ்ச காலத்திற்குத் தவிர்க்க முடியாது. ஆனால் அது அலுவலகத்தில் உங்கள் புகழை அதிகரிக்குத் உங்களுக்குக் கிடைக்க வேண்டிய பாராட்டை இரட்டிப்பாக்கி எதிர்கால முன்னேற்றத்துக்கு உதவும்.

கும்பம்

சகோதர்கள் கோபம் கலந்து  பேசினால் பேசிவிட்டுப் போகட்டும். ஆஃப்டரால் ஒரே வயிற்றில் பிறந்திருக்கிறீர்கள்.விட்டுக் கொடுத்துத்தானே போவோமே! அவங்களால நன்மைகளும் உண்டே!! புதிதாக பூஜைகள் அல்லது விரதங்கள் ஆரம்பிப்பீர்கள். சாதித்துவிட்டீர்கள். கொஞ்சம் அடக்கி வாசியுங்களேன்! அப்பாவுக்கும் உங்களுக்கு இருந்துக்கிட்டிருந்த சின்னச்சின்ன உரசல்கள் சரியாகி சுமுகமான நட்புணர்வும் அன்பும் பரஸ்பரம் நிலவும். அவரும் உங்களைப் புரிந்து கொள்வார். நீங்களும் அவரைப் புரிந்து கொள்வீர்கள்.

மீனம்

இனி வரும் நாட்கள் முழுக்க கல்யாண பர்ச்சேஸ்தான். ஆத்திரம் கோபம் ஆகியவற்றை ஒரு மூட்டையில் போட்டுக் கட்டிக் கடலில் வீசி எறிங்க. எல்லாருக்கும் இனிமையாய் இருந்து விட்டுப் போங்க முன்பு போல. செலவு ஆரம்பிக்கும். ஆனால் எல்லாமே ஹாப்பி செலவுகள்தான். ஒவ்வொரு செலவும் சந்தோஷம்தான் கொடுக்கும். ஏனெனில் அவை எல்லாமே சுபிட்சமான காரணங்களுக்காகச் செய்யப்படும் செலவாய் இருக்கும். கவரும்படி பேசுபவ்ர் நீங்க!! மேடையில் பேசுவீ்ங்க…

More articles

Latest article