வாராந்திர ராசி பலன்:  21.05.2021 முதல்  27.05.2021 வரை!  வேதாகோபாலன்

Must read

மேஷம்

புதிய தொழில் செய்வதானால் மிகவும் கேர்ஃபுல்லா இருங்க கணவன் மனைவி உறவு நல்ல ஹாப்பியாய்த்தான் இருக்கும். ஆனாலும் அப்பப்ப சின்னச் சின்ன சண்டைகள் வந்தாலும் டோன்ட் ஒர்ரி. உடனுக்குடன் சரியாகி, சமாதானமாகி உங்களுக்கிடையே உள்ள நெருக்கம் அதிகமாக்கும். பேச்சில் ரெம்ப ரெம்ப கவனமாக இருங்க. பகலில் பக்கம் பார்த்து பேசுங்க இரவில் அதுவும் பேச வேண்டாம். சுருங்கச் சொன்னால் யார் கிட்டயும் எதுவும் வம்பு வெச்சுக்க வேணாம். யாரைப் பற்றியும் யார் கிட்டயும் தப்பாகப் பேசவே வேணவே வேணாம். நீங்க ஸ்டூடன்ட்டா. எனில் தேவையற்ற விஷயங்களில் தலையிடாமல் படிப்பை ஒழுங்காக படித்தால் லட்டு மாதிரி மார்க் கிடைக்கும். யார் கண்டது பிரைஸ் ஏதாச்சும் வாங்கி.. கைதட்டல் வாங்கக்கூட வாய்ப்பு இருக்குங்க. ஆனால்.. உங்க பேச்சிலும் நடத்தையிலும் ரொம்பவே கவனமாய் இருக்கணும். தட்ஸ் ஆல்.

சந்திராஷ்டமம்: மேமாதம் 25ம் தேதி முதல் மேமாதம் 27 வரை

ரிஷபம்

காதல் திருமணம் பெற்றோர் சம்மதத்துடன் ரொம்பவும் சிம்ப்பிளாய் நடைபெறும். அதிகத் தாமதத்துக்குப் பிறகுதாங்க எந்த  வாய்ப்புகளும் கிடைக்கும். தொழில் வியாபாரிகளுக்கு ஜஸ்ட் சுமாரான முன்னேற்றம் கிடைக்கும். மாணவர்கள் பொழுது போக்கு அம்சங்களை கொஞ்சம் தியாகம் பண்ணுங்க. ப்ளீஸ். வேலையில் உள்ளவங்க கவலையைவிடுங்கப்பா.  நல்லதே நடக்கும். அலுவலகத்தில் உங்களை அடிச்சுக் கேட்டால்கூட யாரைப் பற்றியும் கோள் எதுவும் சொல்லாதீங்கம்மா. உங்கள் மனதில் நீங்கள் எவ்வளவு அன்பானவர் என்று உங்களுக்கே தெரியும் அதை மற்றவர்களும் புரிஞ்சிக்கிற மாதிரி வார்த்தையாலும் அன்பை வெளிப்படுத்துவது நல்லதுங்க. உங்க அன்பை நீங்க சொன்னால்தான் மற்றவங்களுக்குப் புரியும். பெண்களுக்கு இதுநாள் வரை திருமணம் தட்டிப்போனதல்லவா?  இனி மனசுக்குப் பிடித்த வரன் அமையும். குட் லக்.

மிதுனம்

வீட்டில் இதுவரை தள்ளிப் போயிக்கிட்டிருந்த ஹாப்பியின விஷயங்களெல்லாம்  நடப்பதற்கு இன்டிகேஷன்ஸ் தெரியுமுங்க.  குறிப்பா உங்க  சிஸ்டர்  அல்லது பிரதருக்கு நடக்காமல் தள்ளிப் போயிக்கிட்டிருந்த திருமணம் அல்லது குழந்தைப் பேறு நடக்கப்போகுது என்ற தகவல் உறுதியாகும்.  இதுவரை உங்ககிட்ட இருந்த மந்த நிலை அல்லது சோம்பல் நிலை காணாமல் போயிடும். அரசு வேலைக்கு முயற்சி பண்ணுங்க. கிடைக்கும்.  நல்லதே நடக்கும். புதிய தொழில் ஆரம்பிக்கற ஐடியாவைக் கொஞ்சம் தள்ளிப்போடலாமே? நல்லவங்களைக் கலந்தாலோசிச்சு எதையும் டிஸைட் செய்ங்கப்பா. நீங்க புத்திசாலிகள் என்பதால் பிரச்சினைக்குள் போய்ச் சிக்கிக்கொள்ள மாட்டீங்க.  நல்ல வேலைவாய்ப்பு கிடைக்க கொஞ்சம் பொறுமை தேவை. வீட்டில் உள்ள சூழ்நிலை உங்களுக்கு சந்தோஷத்தையும் நிம்மதியையும் கொடுக்கும். திருமண முயற்சிகள் கை கூடி வரும். ஆல் த பெஸ்ட்.

கடகம்

இந்த வாரம் கூடுமானவரை இடம் மாற்றம் எதுவும் வேண்டாம்ங்க. திருமண வாய்ப்பு உறுதியாகும். எனவே மனதுக்கு நெருக்கமானவருடன் பயணம் செல்ல வாய்ப்பு உள்ளது. மனோதிடம் மிக்கவர்கள் என்று மற்றவர்கள் உங்களைப் பாராட்டுவதற்குப் பொருத்தமாகத்தான் நடந்துகொள்வீங்க.  பட்.. உள்ளுக்குள்ள பயந்துகிட்டிருப்பது உங்களுக்குத்தானே தெரியும். மெல்ல மெல்ல உங்களின் கஷ்டங்கள் விடுபடுகிறது. பிலீவ் மீ. மாணவர்களுக்குப் பழைய பிரச்சினைகள் தீர்ந்து நிம்மதி ஏற்படும். காதல் விஷயங்கள் ரொம்பவே ஹாப்பியா அமையும். இதுவரை ஃபேமிலியில் தள்ளிப்போன சுபகாரியங்கள் சுபநிகழ்ச்சிகள் நல்லபடியா நடந்தேறும். குழந்தை பாக்யம் இல்லாமல் இருந்தவங்களுக்குத் தொட்டில் வாங்கும் செலவு வரும். நாலா வழிகளிலும் இன்கம் வரும்.எனவே செலவு பற்றிய பயம் இருக்காது கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுத்து போங்க.. அதனால உங்களுக்கு எந்தக் குறையும் வந்துவிடாது. நல்லதுதாங்க நடக்கும். ஷ்யூர்லி.

சிம்மம்

புதிய  வீடு பொலிவுடன் ரெடியாகும். குடும்பத்தில் உள்ள பெரியவங்களை நல்லமுறையில் நடத்தி நல்ல பெயர் எடுப்பதோடு ஆசீர்வாதமும் கிடைக்குங்க. பாக்கெட் காலியாகும் காலம் இது. ஏற்கனவே ரொம்ப நாளாய் அப்படித்தான் இருந்துக்கிட்டிருக்கு மேடம் என்கிறீர்களா. சரியாகும். இதோ சரியாகிவிடும். விவேகம் மிக்க செயல்கள் செய்வீங்க. சமூகத்தில் உங்கள் புகழ் இன்கிரீஸ் ஆவதற்கு வாய்ப்பும் சந்தர்ப்பமும் அமையும். இதுவரை இருந்த வந்த கவலை தீரும். புது வாழ்க்கையை எதிர்நோக்கி உங்கள் பிசினஸ் அல்லது ஜாப் தொடரும். இதுவரை தேவையற்ற அதிருஷ்டத்தை எதிர்பார்த்தீங்க. அதனால் உழைப்புகேற்ற பலன் இல்லாமல்  இருந்தது. இனிமேல் நல்லபடியா உழைப்பை அதிகரிப்பீங்க. 100 பர்சன்ட் லாபம் .. நன்மை.. வருமானம் வரணும்னு நினைச்சீங்கன்னா.. 150 பர்சன்ட் உழைக்க வேண்டியிருக்கும். உழைப்புக்கு அஞ்சுபவர் இல்லை நீங்க. எனவே ஜமாயுங்க. என்ஜாய்.   

கன்னி

டென்ஷனை குறைங்கப்பா. எதுக்காகத்தேவையே இல்லாமல் குரலை உயர்த்தறீங்க. ப்ளீஸ் இந்த வாரம் யார்கிட்டயும் வாக்குவாதமே செய்யாதீங்க. அதுகூடப் பரவாயில்லை.. உங்க பெருமையைப் பேசாதீங்க, கெளரவம் பார்க்காதீங்க. மத்தவங்களையும் கொஞ்சம் மதிச்சு நடங்க. குடும்பத்தில் அனுசரித்து போங்க. எஸ்பெஷலி ஆண்கள்.. எப்பவும் புலம்பாதீங்க. பெண்களே.. உங்க பக்கம் நியாயம் இருக்கும் என்றால் நீங்க எதுக்கும்.. யாருக்கும் பயப்படாதீங்க. ஆசிரியர் தொழில்ல உள்ளவங்க தவிர மற்றவங்க உங்க பேச்சில கவனமாக இருக்கணும். எதிர்பாலினத்தவர் விஷயத்தில் நிதானமாகவும் கவனமாகவும் இருக்க வேணுங்க. மாணவர்கள் படிப்பில் கவனமாக இருங்கப்பா.  ரிஸ்க்கியான மற்றும் தப்பு வழிக்குத் தூண்டும் நட்புகளை தவிர்த்து விடுங்கள். கணவருக்கு.. மனைவிக்கு சின்ன டென்ஷன்ஸ் ஏற்பட்டுச் சரியாகும். தாங்க் காட்.

துலாம்

பயணங்களில் வெற்றி கிடைக்கும். எஸ்பெஷலி அலுவலக சம்பந்தமான டூர்களில். திருமணம் நடைபெறுவதற்கான பேச்சுவார்த்தைகள் நடைபெறும். உறவினர்களால் பொருள் வரவு அல்லது ஹெல்ப் கிடைக்கும். தங்க நகைகள் வாங்குவீங்க. குடும்பத்தில் குழப்பம் ஏற்பட்டு விலகும். ஏற்படாமலேயே காப்பது உங்க சாமர்த்தியம். கண்,பல்,சார்ந்த பிரச்சினைகள் வந்தாலும் தகுந்த ட்ரீட்மென்ட் எடுத்து சரியாகிவிடும். மனதிற்கு மகிழ்ச்சியான செய்திகள் வந்து சேரும். அரசியலில் உள்ளோர் மக்களுடன் கலந்து பணியாற்ற வேண்டிய சூழல் உருவாகும். குடும்பத்தில் வர வேண்டிய தொகை காரணமாக ஒருவருக்கொருவர் மனத்தாபம் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். நினைத்தது ஒன்றும் நடப்பது ஒன்றுமாக இருந்த நிலை மாறி இப்போதுதான் நிலைமை சீராக ஆரம்பிக்கும். நண்பர்கள் பகைவர்களை இனம் கண்டுகொள்ளும் திறன் வரும்.  தந்தைக்கு நன்மை ஏற்படும். ஹாப்பி?

விருச்சிகம்

எக்காரியத்திலும் தடையும் தள்ளிபோடும் நிலையும் உருவாகி இருந்தது. அதெல்லாம் இனி மாறியாச்சுங்க. இவ்ளோ காலமாய்க் காதல் விஷயங்கள் மகிழ்ச்சியாக இருந்தது. திருமணம் என்று வரும்பொழுது சற்று போராட்டம் இருக்கும். பொறுமை. பொறுமை. குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகள் ஏற்பட்டு விலகும். எதிர்பாலினத்தினரிடம் பழகும்போது கொஞ்சம் கவனமாய் இருங்க.  ரொம்ப மன நிறைவோடு இருப்பீங்க. அரசு தேர்வுகள் எழுதலாம். உங்கள் வீட்டில் நெருங்கிய உறவினர் ஒருவர் நிறைய லாபத்தைப் பெற்றுத் தருவார்.  இந்த வாரத்தில் அதிர்ஷ்டம் அதிகமாகும். உறவினர்களுடன் அல்லது மிக நெருங்கிய நண்பர்களுடன் இன்பச்சுற்றுலா செல்ல வாய்ப்பு உள்ளது. வெளிநாட்டு யூனிவர்சிட்டிகளில் முயற்சி செய்யறீங்களா? நல்லபடியாக்கிடைக்கும். ஆனால் எல்லாமும் கொஞ்சம் தடை தாமதத்துக்குப் பிறகுதான் நடக்குங்க. உங்க அவசரப்போக்கை இப்போதைக்கு மூட்டை கட்டி வையுங்க. ப்ளீஸ்.

தனுசு

சுறுசுறுப்பும்  வேகமும் உடம்புக்குள் புகுந்து கொள்ளும்.  கணவன் மனைவி உறவில் விரிசல் ஏற்பட வாய்ப்பு வந்து.. நல்ல வேளையாய் வெள்ளைக் கொடி பறக்க விட்டு சமாதானம் ஆயிடுவீங்க. தேவையற்ற விஷயங்களைப் பற்றிப் பேசி உங்க பார்ட்னரை ஹர்ட் செய்யாதீங்க. ஒரு விஷயம் நல்லா நினைவு வெச்சுக்குங்க. அநாவசியமா மூன்றாவது மனிதரை குடும்ப விஷயத்தில் தலையிட அனுமதிக்கவே செய்யாதீங்க. உங்களுக்கு சின்ன பயம் இருந்தாலும் தைரியத்தோடு எதையும் செய்து முடிப்பீங்க. மாணவர்களுக்கு அற்புதமான வாரம் இது. நன்றாக படித்து தேர்வுகளை எழுதுவீங்க. வண்டி வாகனத்தில் போகும் போது கவனமாக போங்க. ப்ளீஸ் நல்லதே நடக்கும். டவுட் வேணாம். லோன்கள் எதிர்பார்த்தபடி கிடைக்காமல் கொஞ்சம் டிலே ஆகக்கூடும். எதிர்பார்த்த பள்ளி, கல்லூரிகளில் இடம் கிடைக்க  அதிகக் கஷ்டப்பட வேண்டியிருக்கும். ஆனால் கடைசியில் ஒரு வழியாய் சக்ஸஸ்தான்.

மகரம்

முன் எப்போதோ கொடுத்து மறந்தே போயிருந்த கடன் வசூலாகும். நீங்க எந்த வகையிலும் எதிர்பார்க்காமல் இருந்த தொகைகள் வந்து சேரும். வேலையில் அதிக முன்னேற்றம் அமையும். சுய தொழில்கள் செய்துக்கிட்டிருந்தவங்களுக்கு நன்மை ஏற்படும். பங்கு சந்தைகள் ஓரளவு சாதகமான பலன் தரும். அதுல ஓரளவு இன்வெஸ்ட்மென்ட் செய்ய இது உகந்த நேரம். நல்ல லாபம் வரும். ஆனால் பெரிய அளவில் ரிஸ்க் எடுத்து எதையும் செய்துடாதீங்க. மேரேஜ் ஆகி பாப்பாவுக்காக வெயிட் பண்ணிக்கிட்டிருக்கறவங்களுக்குப் புத்திரபாக்கியம் கிடைக்கும். வேலை செய்பவர்களுக்கு சம்பள உயர்வு இப்போதைக்கு எதிர்பார்க்க வேண்டாம். எனினும் கைவசம் பணப்புழக்கம் அதிகமாகும். கலைத்துறையினரின் திறமைகள் வெளிப்படும். அதற்கான வருமானம் சிறிது காலத்துக்குப் பிறகே கிடைக்கும். எப்டியோ… உற்சாகம் குறையாது.  நெவர்.   

கும்பம்

உங்க தொழிலில் சின்னச் சின்னப் பிரச்னைகள் வரலாம் கவனமாக இருங்க. அது போதும். இந்தப் பிரச்சினை பர்மனென்ட் இல்லைன்னும் புரியும்.  மாணவர்கள் படிப்பில் கவனமாக இருங்க.  சற்றே முயற்சி எடுத்தால் போதும். நல்லபடியா எக்ஸாம் எழுதுவீங்க. வெளிநாட்டு வேலை வாய்ப்பு கிடைக்க நிறைய முயற்சி எடுக்கணுங்க. மன அமைதிக்காக  வெளியூர் போக நினைச்சீங்க. அது தடைப்படக்கூடும். வீட்டுக்குள்ள நல்ல விஷயங்கள் நடக்கும். சகோதர சகோதரிகளால் எதிர்பாராத பண வரவும், பொருள் வரவும் கிட்டும்.  அவங்ககூட இருந்த சண்டையெல்லாம் முடிஞ்சுடும். உங்களுக்கு எந்த வயசானாலும்.  புதிய விஷயங்களைக் கற்க ஆர்வம் ஏற்படும். எது பற்றியும் அடிக்கடி சற்று அதிகமாய் முயற்சிகள் செய்ய வேண்டி வரும். நல்ல வேளையாய் அதில் டயர்ட் ஆக மாட்டீங்க. இத்தனைகாலம் இருந்து வந்த சோம்பல் நிலை மாறி சுறுசுறுப்பாகவும் வேகமாகவும் செயல்பட வேண்டிய நேரம் இது. வம்புகளில் மாட்டிக்காம இருந்துடுங்க. போதும். பி கேர்ஃபுல்பா.

சந்திராஷ்டமம்: மேமாதம் 21ம் தேதி முதல் மேமாதம் 23 வரை

மீனம்

நண்பர்/ சிநேகிதி ஒருவருடன்… அல்லது காதலன்/ காதலியுடன் ஏற்பட்டிருந்த சண்டை ஒன்று  அசட்டுச் சிரிப்புடன் சரியாகி இப்போத ஜாலியாப் பேச ஆரம்பிப்பீங்க. மிஸ்டேக் உங்க பேர்லதானே? நீங்கதானே வம்பு செய்து சண்டை போட்டீங்க. எனில் நீங்கதான் காலில் விழுந்து ஸாரி சொல்லணும். சொல்லுங்க. கணவன் மனைவி இடையே ஏற்பட்ட பிரச்சினைகள் தன்னிச்சையாய்க் காணாமல் போயிடுங்க. வெளிநாடு வேலைக்கு முயற்சி பண்ணினீங்களே. கொஞ்சம் வெயிட் பண்ணுங்க.  மகன் அல்லது மகளுக்குத் திருமணம் நிச்சயமாக அதிகம் முயற்சி எடுத்து சிரமப்படுவீங்க. மது, போதை பழக்கத்திற்கு அடிமையாகிவிட வேண்டாம். ஒரு நிமிடத்தில் கெட்ட பழக்கம் உள்ளே புகுந்துவிடும். பிறகு துரத்துவது இம்பாஸிபிள். உங்களுக்காகவோ மற்ற யாருக்கோ கடன் வாங்காதீங்க. யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போட்டு பணம் வாங்கி கொடுக்காதீங்க. ப்ளீஸ் டோன்ட்.

 சந்திராஷ்டமம்: மேமாதம் 23ம் தேதி முதல் மேமாதம் 25 வரை

 

More articles

Latest article