வார ராசிபலன்: 17.12.2021 முதல் 23.12.2021 வரை! வேதா கோபாலன்

Must read

மேஷம்

யோகமான வாரம். மன உறுதியோடு செயல்பட்டு மற்றவர்களை வியக்க வைப்பீங்க. நாளைக்குச் செய்துக்குவோம்.. நாளன்னிக்குப் பார்த்துக்கு வோம்னு எதையும் போஸ்ட்போன் செய்யாதீங்க. சொல்றதை சொல்லிட்டேன். அதுக்கு மேல உங்க இஷ்டம். கலைத்துறை.. எழுத்துத்துறை ஆகியவற்றில் உள்ளவங்களுக்கு அதிருஷ்டம் அடிக்கும் தொழில் தொடங்கும் திட்டங்களை நிறைவேற்றிக் கொள்வீங்க.. வி.ஐ.பி.க்களின் சந்திப்பு உண்டு. புதிய வாகனம் வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும் . சமுதாயப் பணிகளில் அதிக ஆர்வம் காட்டுவீங்க. ஹஸ்பெண்ட் அல்லது ஒய்ஃப் மூலம் பிரச்னை ஒன்று முழுமையாகத் தீரும். நினைத்தபடி லாபங்களும் வருமானமும் வரும். வேளை பளு அதிகமாக இருக்கும். இந்த வாரம் செவ்வாய்க்கிழமை, நவக்கிரக சன்னிதியில் உள்ள அங்காரகனுக்கு நெய் தீபம் ஏத்துங்க.

ரிஷபம்

பொழுது போக்குக்கு நிறைய நேரம் செலவிடுவீங்க. கண்டிப்பா அதுவும்தான் தேவைதாங்க. இல்லைன்னு யாரு சொன்னாங்க.. ஆனா முக்கியமான விஷயங்களைக் கோட்டை விட்டுப்புடாதீங்க. ஃப்ரெண்ட்ஸ்க்குக் கடன் குடுக்கறேன் பேர்வழின்னு வாரி இறைக்காதீங்க.  ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். தொழில் ரீதியாக விலகிச் சென்ற பார்ட்னர்கள்/ வாடிக்கையாளர்கள் மீண்டும் வந்து சேரலாம். உடல்நலம் சீராகி உற்சாகப்படுத்தும். பிள்ளைங்களின் நலன் கருதி முக்கிய முடிவெடுப்பீங்க. அதில் குடும்பத்தினரின் ஆதரவு இருக்கும். பாதியில் நின்ற ஏதேனும் ஒரு பணியை எடுத்து மீதியும் தொடருவீங்க. யோசித்துச் செயல்பட வேண்டிய வாரம். எந்தவொரு விஷயத்தையும் விரைவில் செய்து முடிக்க இயலாவிட்டாலும் நல்லபடியாக முடிந்து நிம்மதியளிக்கும். இந்த வாரம் வியாழக்கிழமை குருவாயூரப்பனுக்கு நெய்தீபம் ஏற்றி வழிபடுங்க.  

மிதுனம்

சந்தோஷமாகப் புதுப்புது வேலைகள் கிடைக்கும். புகழ் அதிகரிக்கும். லாபம் … சம்பளம்.. வருமானம் எல்லாம் நிறைய வரும்னாலும் சும்மா வந்துடாதுங்க.. உங்க கிட்டேயிருந்து நிறைய உழைப்பை விலையாய் வாங்கிக்கிக்கிட்டுதான் கிடைக்கும். இட்ஸ் ஓகே. உழைப்பதற்கு உடம்பில் தெம்பு இருக்கு. எனவே நோ பிராப்ளம். பயணத்தால் முன்பு ஏற்பட்ட தொல்லை நீங்கி நிம்மதி ஏற்படும்.  சொன்ன சொல்லைச் செயலாக்கிக் காட்டி உங்களைப் பழித்தவர்களும் பாராட்டும்படி நிமிர்வீங்க. துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். உறவினர்களால் நன்மை ஏற்படும். துணிவும், தன்னம்பிக்கையும் அதிகரிப்பதால் செயல்திறன் கூடும். வரவும் செலவும் சமமாக இருந்த நிலை மாறி வருமானம் அதிகரித்து சேமிப்புக் கூடும். எதிர்கால நன்மையைக் கருதி முக்கியமான தீர்மானம் ஒன்றை எடுப்பீங்க.  இந்த வாரம் சனிக்கிழமை, சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபம் ஏத்துங்க.

கடகம்

தொட்டது துலங்கும். விரயம் அதிகரித்தாலும் நிம்மதி குறையாது. வித்தியாசமான, புதிய பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீங்க. தொழிலில் புதுப் பங்குதாரர்களைச் சேர்க்க முன்வருவீங்க. மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும். செய்யும் காரியங்களில் முன்னேற்றம் காணப்பட்டாலும், நிதானமாக செயல்படுங்கள். தேவையில்லாத பயங்கள் எதுவும் வெச்சுக்காதீங்க. தைரியமாய் இருங்க. உங்களுக்கு எது அவசியம் எது அநாவசியம்னு கரெக்ட்டாய்த் தெரியும். எறும்பைப் பார்த்துக் காட்டுப்புலின்னு பயந்துக்குவாங்களா என்ன? ப்ளீஸ் டோன்ட்.  அலுவலகத்தில் கொஞ்சமும் எதிர் பார்க்காத உயர்வு ஒன்று உடனடியாய்க்  கிடைக்கும். உணவு சாப்பிடும்போது அது சுத்தமான சுகாதாரமான உணவா என்று பார்த்துச் சாப்பிடுங்கள். இந்த வாரம் வியாழக்கிழமை, தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக் கடலை மாலை சூட்டுங்க.

சிம்மம்

மற்றவர்களால் செய்ய முடியாத ஒரு கஷ்டமான விஷயத்தைச் செய்து சாதனை படைப்பீங்க. உற்சாகத்துடன் வெற்றிப் படிகளில் முன்னேறி வெற்றி இலக்கை அடைவீங்க. புதுப்புது லாபங்கள் கட்டாயம் கண்ணுக்குத் தென்படும். வெளிநாட்டில் உள்ளவங்களுக்குக்கூடுதலாய்ச் சில நன்மைங்க உண்டு. ஷ்யூர் பெனிஃபிட்ஸ்.  பண வரவால் இல்லத்தில் சுப காரியங்களை நடத்துவீங்க. நண்பர்கள் மற்றும் உறவினர்களின் ஆதரவோடு, பொருளாதார வளர்ச்சி பெற்று மகிழ்வீங்க. உத்தியோகஸ்தர்கள், அலுவலகத்தில் கிடைக்கும் புதிய பொறுப்புகளால் பெருமிதமும் தனலாபமும் அடைவீங்க. தொழில் செய்பவர்களுக்கு, அந்தத் துறையில் வளர்ச்சி ஏற்படும். குடும்பத்தில் அன்பும், அமைதியும் இருக்கும். சுபகாரிய முயற்சி வெற்றிபெறும். இந்த வாரம் சனிக்கிழமை, ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சூட்டி வழிபாடு செய்யுங்க.

கன்னி

தனவரவுகள் தாமதமாக வந்தாலும் உங்களுக்குத் தேவையான நேரத்துக்கு வந்து சேரும். டோன்ட் ஒர்ரி. உத்தியோகஸ்தர்கள், பணிகளில் கவனக்குறை வாக இருந்தால், உயரதிகாரிகளின் கேள்விக்கு ஆளாவீங்க. எனவே மிகுந்த கவனத்துடன்… மனசைக் குவித்து உங்கள் பணிகளை கவனியுங்கள். தொழில் செய்யறவங்க, வாடிக்கையாளர்களின் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாமல் அவதிப்பட நேரிடும் இப்போ இருக்கிற பெயர்ச்சிகளின்படி உங்களக்கு இந்த அளவு கிடைச்சதே பெரிய விஷயங்க. மேலதிகாரிங்ககிட்ட கொஞ்சம் பணிவாய்த்தாங்க போகணும். அதைவிட்டுப்புட்டு ரொம்பத்தான் முறுக்கிக்கிட்டும் முறைச்சுக்கிட்டும் இருந்தால் என்னங்க அர்த்தம்? தொழில் செய்பவர்களுக்கு, லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் பண வரவும், ஒற்றுமையும் இருக்கும். கடன் தொல்லை பாதிப்பு ஏற்படுத்தாது. வழக்குகள் சாதகமாக முடியும். இந்த வாரம் வியாழக்கிழமை, தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள்நிற மாலை சூட்டி வழிபடுங்க.

 துலாம்

உத்தியோகத்தில், உயரதிகாரியின் அறிவுரைப்படி புதிய பணியை செய்து பாராட்டுப்பெறுவீங்க. தொழிலில் ஈடுபடுபவர்கள், முன்னேற்றம் அடைய அருமையான வழி இல்லத்தில் சுப காரியங்களுக்கு செலவு செய்ய நேரிடும். பூர்வீக சொத்துக்களைப் பெற, பெரியவர்களின் உதவியை நாடுவீங்க. உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வு பெற்று வெளியிடங் களுக்கு மாறுதலாக வாய்ப்புள்ளது. கவர்ச்சி அம்சம் உங்களுக்கு அதிகமாகும். தொட்டதெல்லாம் வெற்றியாகும் பக்தி சிந்தனை இன்கிரீஸ் ஆகும்.  உங்களின் குடும்ப வாழ்க்கை அமோகமாக இருக்கும். கணவன் மனைவிக்குள் நல்ல காரணத்துக் காகப் பிரிவு ஏற்படலாம். இட்ஸ் ஓகே.  உத்தியோகஸ்தர்கள், சுறுசுறுப்பாக பணியாற்றி, உயரதிகாரியின் பாராட்டைப் பெறுவர். தொழில் செய்பவர்கள், புதிய முறைகளைக் கையாண்டு வாடிக்கையாளரை திருப்திப்படுத்துவர். இந்த வாரம் வெள்ளிக்கிழமை, துர்க்கைக்கு மூன்று எண்ணை கலந்து தீபம் ஏற்றிவைத்து வணங்குங்க.

சந்திராஷ்டமம் : டிசம்பர் 16 முதல் டிசம்பர் 19 வரை

விருச்சிகம்

மிக திடீர் செலவுகள் வரும். கவனமா.. ரெடியா இருங்க. அம்மா வெளியூர்  அல்லது வெளிநாடு போவாங்க. திடீர்னு உங்களை எல்லாரும் மதிக்க ஆரம்பிப்பாங்க. குறிப்பா எதிர்பாலினத்தினர் உங்களிடம் அதிகம் இழைவாங்க. சற்றே கவனமாயிருங்க. பணம் புரளும். சேமியுங்களேன். வெளிநாடு போக விரும்பறவங்களுக்கு திடீர் குட் நியூஸ் ஷ்யூரா உண்டுங்க. அப்புறம் அப்புறம் என்று தள்ளிப்போடாமல் எந்த வேலையையும் விரைந்து முடிங்கப்பா. ரிலேடிவ்ஸ்ஸூம், ஃப்ரெண்ட்ஸும் தக்க சமயத்தில் ஆதரவாக இருப்பாங்க. உத்தியோகஸ்தர்கள், அலுவலகப் பதிவேடுகளைக் கவனமாகப் பாதுகாப்பது அவசியம். தொழில் செய்பவர்கள், வாடிக்கையாளரின் பாராட்டைப் பெறுவீங்க. குடும்பத்தில் அமைதி நிலவும். குலதெய்வ வழிபாட்டுக்காக குடும்பத்துடன் செல்ல திட்டமிடுவீங்க.  நீங்கள் செய்யும் காரியங்களுக்கு, நண்பர்களும், உறவினர்களும் ஆதரவளிப்பாங்க. இந்த வாரம் செவ்வாய்க்கிழமை, முருகர் சன்னிதியில் நெய் தீபம் ஏத்துங்க.

சந்திராஷ்டமம் : டிசம்பர் 19 முதல் டிசம்பர் 21 வரை

தனுசு

முக்கியமான பிரச்சினை ஒன்றில், நல்ல முடிவெடுப்பீங்க. உத்தியோகஸ்தர்கள், பணியில் ஏற்பட்ட தவறுக்காக உயர் அதிகாரியின் கோபத்திற்கு ஆளாவதற்கு முன் அதைச் சரிசெய்துவிடுவீங்க. குடும்பம் நன்றாக நடந்தாலும், சிறுசிறு பிரச்சினைகளும் வரத்தான் செய்யும்.  எனினும் அவற்றை நல்ல முறையில் சமாளிப்பீங்க. குடும்பத்தினரை மட்டுமின்றி, நண்பர்களையும் பணியிட சகாக்களையும்கூட அனுசரித்துச் செல்வது நல்லது. தடைபட்டி ருந்த சுபகாரியங்களை நடத்த முயற்சிப்பீங்க. காசு மேல காசு வந்து கொட்டும்னு கனவு கண்டுக்கிட்டு உழைப்பைக் கைவிட்றாதீங்கப்பா. அதே சமயம், என்றைக்கோ உழைத்த உழைப்பெல்லாம் இன்றைக்கு வங்கி இருப்பாக உருமாறி உட்காரும். நிறைய அலைச்சல்ஸ் அண்ட்  ஏகப்பட்ட பயணம்ஸ் இருக்கும்.  இந்த வாரம் புதன்கிழமை, பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுங்க.

சந்திராஷ்டமம் : டிசம்பர் 21 முதல் டிசம்பர் 23 வரை

மகரம்

குடும்பத்தில் மேரேஜ், அல்லது டெலிவரி மூலம் ஒரு புதிய நபர் இணைந்து ரேஷன் கார்டில் இடம் கேட்பாங்க. எதிர்பாலினத்தினரின் நட்பு திடீர்னு அதிகமாகும். தொழில் செய்பவர்கள், வாடிக்கையாளரை திருப்திப்படுத்த ஓய்வின்றி உழைக்க வேண்டியதிருக்கும். இல்லத் தலைவியின் சாமர்த்தியத்தால், குடும்பம் சீராக நடைபெறும். வேலைப்பளு அதிகரித்தாலும், உங்களுக்கு அதில் சிரமமம் இருக்காது. குடும்பத்தில் சிறுசிறு பிரச்சினை தோன்றி மறையும். பணப் பற்றாக்குறையால் கடன் வாங்குவீங்க. பிரதர்ஸ் மற்று சிஸ்டர்ஸிடம் அப்படி ஒண்ணும் பிரமாதமான நட்புறவை எதிர்பார்க்க முடியாது என்றாலும் நீங்க அட்ஜஸ்ட் பண்ணிக்கிட்டா பெரிய அளவில் சண்டை சச்சரவெல்லாம் வராமல் அவாய்ட் செய்யலாம் என்பதே பெரிய குட் நியூஸுங்க. இஸ் இட் நாட்? இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை, சூரியனுக்கு நெய் தீபமிட்டு வழிபாடு செய்யுங்க.

கும்பம்

ஓரிரு விருப்பங்கள் நிறைவேறும். வீடு மாற்றம் பற்றிச் சிந்திப்பீங்க. குடும்பத்தினர்களுக்காக கொள்கையைக் கொஞ்சம் தளர்த்திக் கொள்வீங்க. ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நிதானமான நன்மைகள் நடைபெறும் வாரம். பக்கத்தில் இருப்பவர்கள் பக்கபலமாக இருப்பர். கைமாற்றாகக் கொடுத்த பணம் திரும்பக் கிடைக்கலாம். வெற்றிகரமான வாரம் இது. உங்களுக்கு வழிகாட்டி போல் இருக்கும் ஒருவரால் இந்த வாரம் நன்மைகள் அதிகரிக்கும். எஸ்பெஷலி மாணவர்களுக்கு அவரின் வழி காட்டுதல் பெரிய தூண்டுதலாக இருக்கும். அரசாங்க உத்யோகம் கிடைக்கும். ஒரு வேளை நீங்க ஏற்கனவே கவர்ன்மென்ட் வேலையில்தான் இருக்கீங்கன்னு வெச்சுக்குங்க…  அரசு அதிகாரிங்களின் / அரசியல்வாதிகளின் கருணைப்பார்வை உங்க மேல விழும். அதனால பெனிபிட் கிடைக்கும். இந்த வாரம் வெள்ளிக்கிழமை, துர்க்கைக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுங்க.

மீனம்

வளர்ச்சி மேலோங்கும். வாகனம் வாங்கும் முயற்சி கைகூடும். நீண்ட நாளைய எண்ணங்கள் நிறை வேறுவதற்கு நண்பர்கள் ஒத்துழைப்புச் செய்வர். அன்னிய தேசத்திலிருந்து அனுகூலச் செய்தி வந்து சேரும். தாழ்வு மனப்பான்மையை தகர்த்தெறிய வேண்டியிருக்கும். தனவரவு திருப்தி தரும். அரைகுறையாக நின்ற வேலைகளை ஒவ்வொன்றாகச் செய்து முடிப்பீங்க. வெளிநாட்டிலிருந்து பணவரவு நீங்க எதிர்பார்த்த மாதிரியும் எதிர்பாராதவிதமாகவும் கிடைக்கும். குழந்தைங்க வெளிநாட்டில் இருக்காங்களா. குட். அவங்க உங்ககிட்ட ரொம்பவும் அன்பாவும் ஆதரவாகவும் நடந்துப்பாங்க. ஒரு வேளை உள்நாட்டில் இருக்கும் மகன் அல்லது மகள் என்றால் அவங்களுக்கு வெகுநாட்களாய்க் காத்திருந்த வெளிநாட்டு வாய்ப்புக்கிடைக்கும். யெஸ். ஃபாரின் சான்ஸ். சகோதரர் வழியில் உதவிகள் கிடைக்கும். தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். இந்த வாரம் சனிக்கிழமை, விநாயகருக்கு அருகம்புல் மாலை சூட்டுங்க.

More articles

Latest article