மேஷம்

எதுக்கெடுத்தாலும் குழம்பிக்கிட்டிருந்த நிலை மாறும். தேவையான பணத்தை திரட்டுவதில் வெற்றி பெறுவீங்க. சிறு வியாபாரிகள் சீரான லாபம் பெறுவாங்க. உடலை வேதனைப்படுத்திக்கிட்டிருந்த சின்னச்சின்ன நோய் தொந்தரவுகள் அகலும். கட்டுமானப் பணிக்கு உதவக்கூடியி பொருட்கள் டீல்  செய்யும் வியாபாரிகள் சிறப்பான லாபத்தை பெறுவாங்க. விரோதிகளின் சூழ்ச்சிகளை துடைத்து தொழிலில் முன்னேற்றம் காண்பீங்க. அதிர்ஷ்டம் தரும் வாரமாக இருக்கும். எதிர்பாராத பணவரவுக்கும் வாய்ப்பு உண்டு. சிலருக்கு வெளியூர்ப் பயணமும் அதனால் ஆதாயமும் ஏற்படும். திருமண வயதில் உள்ள மகன் அல்லது மகளின் திருமணம் தொடர்பான முயற்சிகள் சாதகமாக முடியும். வாழ்க்கைத் துணைவழி உறவினர் களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும்.  குடும்பத்தில் சந்தோஷ ஆட்டம் பாட்டம் உண்டு.

ரிஷபம்

செலவுகள் கூடுவதால் சற்று சிரமப்பட்டே சமாளிக்க வேண்டி வரும். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகத்தில் சலுகைகள் எதையும் எதிர்பார்க்கமுடியாது.பிள்ளைகளால் உறவினர்களிடம் மதிப்பு அதிகரிக்கும். அரசாங்கக் காரியங்கள் முடிவதில் இருந்த இழுபறி யான நிலை மாறும். தந்தையுடன் ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடு நீங்கும். குட் நியூஸ் உண்டுங்க. நிறைய டிராவல் செய்த காலம் மாறும். சமூக சேவைல ஈடுபட்டு உங்க செல்வாக்கை உயர்த்திக்குவீங்க. முடிக்க முடியாத வேலைங்களை முடிச்சு மத்தவங்களை மூச்சுத திணற வெப்பீங்க. தொழிற்சாலைகளில் துடிப்புடன் வேலை செய்வீங்க. உற்பத்திப் பெருக்கத்தால் முதலாளிகள் மகிழ்ச்சி அடைவாங்க. தாராளமாக அரசு வேலைக்கான தேர்வு எழுதலாம். மேற்படிப்புக்காக வெளிநாடு போவீங்க.

சந்திராஷ்டமம் : நவம்பர் 16 முதல் 18 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள்

மிதுனம்

எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும், வியாபாரத்தை விரிவுபடுத்த நினைப்பவர்கள் அதற்கான முயற்சிகளைத் தொடங்கலாம். அனுகூலமாக முடியும். சக வியாபாரிகளுடன் இணக்கமான உறவு ஏற்படும். பார்ட்னர்ஸ் பக்குவமாக நடந்துக்கிட்டு லாபத்தை அதிகரிப்பாங்க. சிலருக்கு வேலை வாய்ப்புகள் வீடு தேடி வரும். அதை நழுவ விடாதீங்க. கணவருக்கும் மனைவிக்கும் நடுவில் இருந்துக்கிட்டிருந்த பிரச்னைங்க முழுவதும் மறந்தும் மறைந்தும் போகும். எந்தத் தொழிலாக இருந்தாலும் ஏற்றம் பெறுவீங்க. எதிர்ப்புகள் வரும்தான். இட்ஸ் ஓகே… வரட்டு மேங்க… அது உங்களை ஒன்றும் செய்யாது. உங்களை வெறுத்து ஒதுக்கிக்கிட்டிருந்தவங்ககூட வீடு வரைக்கும் வந்து உதவி செய்வாங்க. மனசில் உற்சாகமும் தன்னம்பிக்கையும் இன்கிரீஸ் ஆகும்.

சந்திராஷ்டமம் : நவம்பர் 18 முதல் 20 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள்

கடகம்

செலவு மட்டுப்படும்.. கட்டுப்படும். அலுவலகத்தில் சுமுகமான சூழ்நிலையே காணப்படும். புதிய வேலைக்கு விண்ணப்பிச்சிக்கிடு  இருக்கறவங்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை அமையும். வார முற்பகுதியில் அனைத்து விஷயங்களிலும் மிகுந்த பொறுமையுடன் இருக்க வேண்டியது அவசியம். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவைப்படும். பணவரவு அதிகரிக்கும். ஸ்மால் செலவுகளும் ஏற்படும். குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிடுவதை அனுமதிக்காதீங்க. சிலருக்கு நீண்டநாளாக நிறைவேற்றாமல் விடுபட்ட குலதெய்வப் பிரார்த்தனை களை நிறைவேற்றும் சான்ஸ் ஏற்படும். பிள்ளைகளால் பெருமையும் மகிழ்ச்சியும் உண்டாகும். தாய்வழி உறவினர்களால் சின்னதாய் சில சங்கடங்கள் ஏற்படக்கூடும். பட் அது கவலைப்படுமளவுக்கு உங்களை அசைக்காது.

சந்திராஷ்டமம் : நவம்பர் 20 முதல் 22 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள்

சிம்மம்

சொந்த பந்தங்கள் இடையே இத்தனைகாலமா இருந்துக்கிட்டிருந்த மனக்கசப்பு தீர்ந்து, அப்பாடான்னு நிம்மதி உண்டாகும்.  சில சொந்தங்களோட பொறாமை கமென்ட்ஸையெல்லாம் கேர் பண்ணாதீங்க. தானாய் வந்து கால்ல விழுவாங்க. பணவரவு அதிகம் இருந்தாலும் செலவுங்க கொஞ்சம் இருக்கத்தாங்க செய்யும். டோன்ட் ஒர்ரி. பிகாஸ் குடும்பத்துக்குத் தேவையான முக்கியப் பொருட்களை வாங்குவீங்க. இல்லாட்டி நல்ல முறைல இன்வென்ஸ்ட் செய்வீங்க. இல்லாட்டி சுப காரியங்களுக்காகச் செகவு செய்வீங்க. வியாபாரத்துல எதிர்பார்த்த அளவுக்கு லாபம் கெடைக்கும். முயற்சியை அதிகமாக்கினால்.  போட்டிகளைச் சமாளிக்க கடுமையாக உழைக்கவேண்டி வரும். புதிய முயற்சிகள் சற்றே தாமதித்துப் பலன் குடுக்கும். பெண்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான வாரம். செலவுகளைச் சமாளிக்கத் தேவையான பணம் கிடைக்கும்.

சந்திராஷ்டமம் : நவம்பர் 22 முதல் 42 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள்

கன்னி

ஆபீசுக்குப் போற பொண்ணுங்களுக்குப் பதவி உயர்வும் சம்பளய உயர்வும் கெடைக்கும். குடும்பத்தை நிர்வகிக்கும் பொறுப்பு சற்றே இன்கிரீஸ் ஆகும். ஆனா அதை ஹாப்பியா செய்வீங்க. புதிய வேலைக்கு முயற்சி செய்துகொண்டு இருப்பவர்களுக்கு நல்ல பதில் கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு அலுவலகச் சூழ்நிலை மகிழ்ச்சி தரும். சில சலுகைகளும் கிடைக்கும். குடும்பத்துல நிம்மதியும் மகிழ்ச்சியும் காணப்படும். பொருளாதார வசதிக்கு குறைவு எதுவும் இருக் காது. ஆனாலும் புதிய முயற்சிகளைத் தவிர்க்கவும். உடல்நலம் சீராகும். கணவன் – மனைவிக்கி டையே ஏற்பட்டிருந்த கருத்துவேறுபாடுகள் மறைந்து அந்நியோன்யம் ஏற்படும். தாயாரின் உடல் நலனில் கவனம் தேவை. தாய்வழி உறவினர்களால் சில பிரச்னைகள் ஏற்படக்கூடும் என்றா லும் அதனால் பாதிப்பு இருக்காது. வெளியூர்ப் பயணத்தின்போது எச்சரிக்கையாக இருக்கவும். தந்தையிடம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும்.

துலாம்

வியாபாரத்துல விற்பனையும் லாபமும் திருப்தி தருவதாக இருக்கும். பங்குதாரர்கள் ஒங்களோட முயற்சிங்களுக்கு உதவி செய்வாங்க. வாடிக்கையாளர்களுடன் ஏற்பட்டிருந்த பிரச்னைகள் நீங்கும். பற்று வரவு சுமுகமாக நடைபெறும். குடும்பத்துல செலவுகள் அதிகரிக்கும் என்றாலும் தேவையான பணவரவு இருப்பதால் சமாளிச்சுடுவீங்க. வேலைக்குப் போற லேடீஸ்க்கு ஆபீஸ் சூழ்நிலை மகிழ்ச்சி தருவதாக அமையும். அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீங்க. கட்டப்பஞ்சாயத்து பண்ணவே வேணாம். கலைத்துறைல உள்ளவங்க அதிக வருமானம் பெறுவாங்க. கணவன் மனைவி மற்றும் குழந்தைங்களுக்கிடையே இருந்துக்கிட்டிருந்த கசப்புணர்வு மறைஞ்சு வெள்ளைக் கொடி பறக்கும். பிள்ளைங்களோட நடவடிக்கைகள் பெற்றோர்களுக்கு கவலை அளிச்சாலும் பாதி கற்பனை பயங்கள்தான்.  கோபித்துக் கொண்டு சென்ற உறவினர்களின் மனதை சாந்தப்படுத்தி பிரச்சனையை தீர்ப்பீங்க

விருச்சிகம்

வேலை பிரெஷர் காரணமாக சரியான நேரத்திற்கு சாப்பிட முடியாமல் இருந்த நிலை மாறி நிம்மதியா ரிலாக்ஸ்டா இருப்பீங்க. குடும்பத்துல மருத்துவச் செலவுங்க கொறைஞ்சுடும். பிள்ளைங்களோட மேல் படிப்புக்காகப் பணம் கட்டுவீங்க. அது ஒருவேளை ஃபாரின் படிப்பா இருந்தாலும் இருக்க சான்ஸ் உண்டு. மங்கல காரியங்களுக்கான ஏற்பாடுகளை செய்வீங்க. தொழிலில் மாற்றங்கள்  உண்டாக சான்ஸ் உண்டுங்க. நீண்ட காலமாக வராமல் இருந்துக்கிட்டிருந்த பணம் கைக்கு வந்து கிடைக்கும். புதிய தொழில் தொடங்க சான்ஸ் வரும். ஆபீஸ்ல பண வெவகாரங்கள்ல எச்சரிக்கையோடு செயல்படுவீங்கள். எனவே நோ பிராப்ளம்ஸ். நீங்க பிசினஸ் செய்யறவராக இருந்தால், தொழிலுக்குச் சின்னச்சின்ன இடையூறுகள் ஏற்பட்டாலும் அதைத் தாண்டி வருமானத்திற்கு வழி வகுப்பீங்க. வாகனம் ஓட்டும்போது ஓவர் ஸ்பீடு வேணாங்க.

தனுசு

அரசாங்க ஊழியர்கள் ஆவணங்களில் கையெழுத்து போடும்போது கவனமாக இருக்க வேண்டும். திருமணமாகாமல் ஏக்கத்தோட இருந்துக்கிட்டிருந்த இளம் காளையர்க்கும் கன்னியர்க்கும் திருமண வாய்ப்பு கைகூடி வரும். தொழில் எதிரிங்க இருந்த இடம் தெரியாமல் மறைஞ்சு போவாங்க. கணவன் மனைவி உறவு ஹாப்பியா இருக்கும். நீண்ட காலமாக நிலுவையில் இருந்த சொத்து சம்பந்தப்பட்ட வழக்கு உங்களுக்கு சாதகமா முடியும். அலுவலகத்துல உற்சாகமான சூழ்நிலை காணப்படும். சக ஊழியர்கள் அனுசரணையாக இருப்பாங்க. ஒங்களோட ஆலோசனைக்கு நிர்வாகத்தினரின் பாராட்டுகள் கிடைக்கும். எதிர்பாராத சலுகை கிடைக்கும். ஆனா அது பற்றி அதிகமா வெளியில் பெருமையடிச்சுக்க வேணாம். பொருளாதார நிலை திருப்திகரமாக இருக்கும். எதிர்பாராத பணவரவுக்கு வாய்ப்பு உண்டு.

மகரம்

அரசாங்கத்துல உயர் பொறுப்பில் இருப்பவரின் அறிமுகமும் அவரால் ஆதாயமும் கிடைப்ப தற்கான சந்தர்ப்பம் ஏற்படும். தந்தைவழி உறவுக்காரங்க மூலமா எதிர்பாராத பொருள்சேர்க்கை ஏற்படும். கணவன் – மனைவிக்கிடையே அந்நியோன்யம் இன்கிரீஸ் ஆகும். வழக்குகளில் முன்னேற்றமான திருப்பம் ஏற்படும். சகோதரர்களிடம் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாக முடியும். குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றும் வாய்ப்பும் பொறுப்பும் ஏற்படும். குடும்ப நிர்வாகத்தில் இருக்கும் பெண்கள் மிகவும் பொறுமையாக இருக்கவேண்டியது அவசியம். வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு அலுவலகச் சூழ்நிலை சாதகமாக இருக்கும். நிர்வாகத் தினரிடம் எதிர்பார்த்த சலுகை கிடைக்கும். விவசாய உற்பத்தியில சாதனை படைப்பீங்க. லாட்டரி, பந்தயங்கள் அனுகூலமான பலனை தரும். நெருக்கமான நண்பர்களாக இருந்தாலும் கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையா இருங்க.

கும்பம்

கோபத்தை கட்டுப்படுத்துங்க. வியாபாரத்துல சில சிக்கல்கள் இருந்தாலும் அநாயாசமாய்ச் சமாளிச்சு வெளியே வந்துடுவீங்க. வெளியூர் பயணங்கள் கொஞ்சம் தாமதமாய் சக்ஸஸ் கொடுக்கும். ஆனாலும் சந்தோஷ வெற்றிதான். கவலை வேணாம். வியாபாரத்தில் கடையை விரிவுபடுத்துவதற்காக பாடுபடுவீங்க. அதிக உழைப்பின் காரணமாக அசதியும் சோர்வும் ஏற்பட்டு நீங்கும். விற்பனையும் லாபமும் கூடுதலாக இருப்பது உற்சாகம் தரும். உங்களுக்கு எதிரா செயல்படறவங்களையும் பேசறவங்களையும் சாமர்த்தியமா சமாளிப்பீங்க. கடனை திருப்பி செலுத்த முடியாமல் கவலைப்பட்டுக்கிட்டிருந்த காலம் மாறி நிம்மதி கொஞ்சம் கொஞ்சமாய் மீளும்  அளவுக்குத் திருப்பிச் செலுத்தியிருப்பீங்க. எது நடந்தாலும் அதிகமா வார்த்தைகளை விடாதீங்க. யார்கிட்டயும் பகை பாராட்ட வேணாம். யாரைப் பத்தியும் யார் கிட்டயும் குற்றம் சொல்லாம இருங்க.

மீனம்

தொழில்துறைகள் கொஞ்சம் ஸ்லோவா நடந்தாலும் கையைக் கடிக்காது. போட்டி பந்தயங்கள் இப்போதைக்கு வேணாமே. இன்னும் கேட்டால் எந்த ரிஸ்க்குமே வேணாம். மேலதிகாரிங்களோட உற்சாகமான பாராட்டு உங்களை ஹாப்பி ஆக்கும். ரிலேடிவ்ஸ் மற்றும் நண்பர்கள் ஒங்களோட மனக்கவலைக்கு மருந்தாக அமைவாங்க. பொருளாதாரம் முன்னேற்றம் ஏற்படும். வழக்குகளில் உங்களுக்கு சாதகமான முடிவு கெடைக்கும். வீடு கட்டுவதற்காக மனை இடம் வாங்குவீங்க. மனைவி பிள்ளைகளுக்காக நகைகள் வாங்கி சேமிப்பீங்க. அம்மாவோட சண்டை சச்சரவுகள் இல்லாம அனுசரிச்சுப் போங்க. முடிஞ்சா அவங்க மனசு குளிர்ற மாதிரி சந்தோஷப்படுத்துங்க. ஆபீசுல ஒங்களோட திறமைக்கு உரிய அங்கீகாரமும் அதிகாரிங்களோட பாராட்டும் கெடைக்கும். பதவி உயர்வோ அல்லது ஊதிய உயர்வோ கிடைக்கக்கூடும். வேலைக்கு முயற்சி செய்யறவங்களுக்கு நல்ல நிறுவனத்துல வேலை கெடைக்கும்.