மேஷம்

தொழில் தொடங்கும் திட்டங்களை நிறைவேத்திக்குவீங்க. லோன் போட்டுக் காத்துக்கிட்டிருந்தா அது பற்றி இந்த வாரம் நல்ல நியூஸ் வரும். உத்தியோகஸ்தர்களில் சிலருக்கு, அலுவலகத்தில் பொறுப்புகளுடன் பதவி உயர்வும் கிடைக்க சான்ஸ் இருக்குதுங்க. சக நண்பருங்க ஹெல்ப் செய்வாங்க. தொழில் செய்பவர்கள், ஓய்வின்றி பணிகளில் கவனம் செலுத்துவீங்க. உழைப்புக்கேற்ற பலன் அடைவீங்க. மனசுல இருந்த கவலைகள் நீங்கி நிம்மதி நிலவ ஃப்ரெண்ட்ஸ்லாம் உதவுவாங்க. ஸ்டூடன்ட்ஸ் ரொம்பவும் அதிக முயற்சியுடன் கவனத்தைக் குவிக்க வேண்டி யிருக்கும். பேசுவதற்கு வாயைத் திறக்குமுன் ரெண்டு முறை யோசிச்சுக்குங்க. அதையும் விட பெட்ர் என்ன தெரியுமா? சைலன்ட் மோட்ல இருந்துடுங்க. உங்க கணவர் (அல்லது அல்லது மனைவி) நிறைய நன்மைகள் அடையப் போறாரு/ போறாங்க. அதுக்குக் காரணமா நீங்க இருக்கப் போறீங்க. இதனால தம்பதிங்களுக்குள்ள சந்தோஷம் நிலவும்.

ரிஷபம்

வியாபாரிங்களுக்கும் ஜாப்ல உள்ளவங்களுக்கும் உழைப்புக்கேற்ற பலன் கிடைக்கும். ஆகவே சற்று சோம்பலைப் பொருட்படுத்தாமல் அலைந்து திரிந்து பிசினஸ்ஸை / உத்யோகத்தை கவனிங்க. ப்ளீஸ். அது மட்டுமில்லைங்க, எதைச் செய்தாலும் ஒரு முறைக்கு ரெண்டு முறை சரிபார்த்துடுங்க.  இந்த வாரம் எதையும் சாதிக்கும் திறமையும், சாமர்த்தியமும் இன்கிரீஸ் ஆகும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். பல காலமாக உங்க பர்சனல் முன்னேற்றம் அல்லது நன்மை பற்றி இருந்துக்கிட்டிருந்த எதிர்ப்புகள் விலகும். புது ஃப்ரெண்ட்ஸ் கிடைப்பாங்க. அவங்களால நன்மையும் உண்டாகும். ஹாப்பி ஆயிடுவீங்க. ஆனா அவங்க கிட்டேயெல்லாம் ஓரளவுக்கு மேல உரச வேணாம். அப்பதான் அவங்களுக்கு உங்க மேல உள்ள மரியாதை கூடும். மனசுல துணிச்சல் அதிகரிக்கும். எதுவுமே நிதானப் போக்குலதான் நடக்கும். ஆனால் ஃபைனல்  வெற்றி உங்களுக்குத்தான். ஹாப்பிதானேங்க?

சந்திராஷ்டமம்: மே மாதம் 15ம் தேதி முதல் 17ம் தேதி வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமா இருங்க.

மிதுனம்

யோகமான வாரம்.  முன்னேற்றத்துக்கான முயற்சிகள் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியாகி, லாபமும் தரும். பிசினஸ் பீப்பிள், உற்சாகத்துடன் பணியாற்றி நல்ல பலனைப் பெறுவீங்க. திட்டம் எதுவாச்சும் போட்டிருந்தீங்கன்னா அது நல்லபடியா நிறைவேறுங்க. பிகாஸ் அதுல நீங்க ஈடுபாட்டாரோட முனைப்பா செயல்படுவீங்க. அக்கறையா இருப்பீங்க. முன்பைவிட இப்போ மெல்ல மெல்ல சேமிப்பு அதிகரிக்கும். இந்த வாரம் சனிக்கிழமை, உங்களுக்கு ஒரு குட் நியூஸ் வரப்போகுது. மனசை அதுக்கு ஹாப்பியா தயார் செய்துக்குங்க. நீங்க ஸ்டூடன்ட்டா இருந்தால் டீச்சர்ஸ் பாராட்டுவாங்க. பணவரவு திருப்தி தரும். அடுத்தவங்களோட பிரச்னைங்கள்ல தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. வீட்ல சுபகாரியங்கள் நடக்கலாம். மேரேஜ் முயற்சிகள் கைகூடும்.துணிச்சலோடு செயல்பட்டு தொல்லைகளை அகற்றிக் கொள்ளும் வாரம். எதிர்பாராத மகிழ்ச்சியான விஷயங்கள் அடுத்தடுத்து நடக்கப் போகுதுங்க.  நிம்மதியா இருங்க.

சந்திராஷ்டமம்: மே மாதம் 17ம் தேதி முதல் 20ம் தேதி வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமா இருங்க.

கடகம்

இந்த வாரம் தன்னம்பிக்கையுடன் செயலாற்றுவீங்க. அப்பா அம்மாவின் மனசு சந்தோஷப்படும்படியான விஷயங்களைச் செய்வீங்க. ஆரோக்கியம் பத்தி இருந்துக்கிட்டிருந்த டென்ஷன்ஸ் எல்லாம் காணாமல் போயி நிம்மதி அனுபவிப்பீங்க. குலதெய்வ வழிபாடு செய்யத் திட்டமிடுவீங்க. அந்தத் திட்டம் நல்லபடியா நிறைவேறுங்க. டாடிக்கும் உங்களுக்கும் இடையே டென்ஷன் ஏற்படாமல் கவனமா இருங்கீங்க. வெரி குட்.  உத்தியோகத்துல உள்ளவங்க மேலதிகாரிகள்  சொல்வதை சரியான முறைல செய்து அதன் மூலம் நன்மை கிடைக்க பெறுவீங்க. குடும்பத்துல அமைதி ஏற்படும். குடும்பத்தினருக்கு தேவையான பொருட்கள் வாங்கி கொடுத்து மகிழ்வீங்க. நெருங்கிய நண்பர்களின் பிரச்னைகள் தீரும். அதுக்கு நீங்களும் ஒரு காரணமா இருப்பீங்க என்பதால் அவங்க நன்மை பாராட்டுவாங்க. நல்ல நல்ல செலவுங்க வரும். அது குடும்பத்துக்கே சந்தோஷம் தரும்.

சந்திராஷ்டமம்: மே மாதம் 20ம் தேதி முதல் 22ம் தேதி வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமா இருங்க.

சிம்மம்

புதிதாக செய்யும் காரியங்களில் கவனம் தேவை. கலைத்துறையினருக்கு இனிமையான வார்த்தைகளால் பேசுவதன் மூலம் மற்றவர் மத்தியில் உங்களோட மதிப்பு கூடும். அம்மாவுக்கும் உங்களுக்கும் இடையே இருந்த ஃபைட்டிங் முடிஞ்சு சந்தோஷமாப் பேசிக்குவீங்க. தொழில் வியாபாரம் முன்னேற்ற பாதையில் செல்லும். தேவையான பண உதவியும் கிடைக்கும். உங்களோட பெருமுயற்சி காரணமாய்க் கடன் தொல்லை குறையும். தொழில் போட்டிகள் நீங்கும். குழந்தைங்களோடயும் அவங்களோட குழந்தைங்களோடயும் சந்தோஷமா இருப்பீங்க. கல்யாணமாகாதவங்களுக்குக் கல்யாணமும், குழந்தை வரம் வேண்டுபவர்களுக்கு அந்த பாக்கியமும் கெடைக்கப்போகுது. கடந்த சில காலமாய்க் கணவன் மனைவிக்கடையே நிலவிய பனிப்போர் முழுமையாக் காணாமல் போகும். பிசினஸ் பார்ட்னர்கூட நல்லுறவு மட்டுமின்றி நம்பிக்கையும் அதிகரிக்கும். மன நிம்மதி அதிகரிக்கும்.

கன்னி

மகன் அல்லது மகள் உங்களை சந்தோஷப்படுத்தப்போறாங்க. வழிபடும் இடங்களுக்குப் போவீங்க. அந்த இடத்தில் உங்க வாழ்க்கையைத் திசை திருப்பும் நன்மை ஒன்று நடக்கப் போகுது. யாரையேனும் சந்திக்கக்கூடும். அவர் உங்களுக்கு வழிகாட்டுவார். இது வரை சந்திக்காத புதிய முகமாக அவர் இருக்கவும் வாய்ப்பு உள்ளது. மத்தவங்களோட வெவகாலத்துல தலையிடாம இருக்கறது ரொம்பவே நல்லது. பணத்தைக் கையாளும்போது மிகுந்த கேர்ஃபுலா இருங்க. நிறைய வருமானம் வரும். செலவுகளும் குறையும்.ஸோ.. சேமிப்பு இன்கிரீஸ் ஆகும். சின்னச் சின்ன ஸ்கின் பிரச்னைங்க வரலாம். அதை ரொம்ப ஈஸியா எதிர்கொள்ளுவீங்க.  விரைவில் சரியாகவும் செய்யும். வெளியூர் அல்லது வெளிநாடு செல்ல  வேண்டி வரலாம். அனைத்து விஷயங்களிலும் கவனமா இருந்தால் அந்தப் பயணங்கள் முழு வெற்றி அளிக்கும். நோ டவுட். ஆபீசில் உங்களுக்கு ஒரு வழி காட்டி அமைவார்.

துலாம்

ஒவ்வொரு செயலிலும், பேச்சிலும் ரொம்பவே கவனமா இருக்கீங்க. அருமை. குடும்பத்துல நிம்மதியும், மகிழ்ச்சியும் உண்டாகும். மன வருத்தத்தில் விலகிய ரிலேடிவ்ஸ்ஸும் ஃப்ரெண்ட்ஸும் மறுபடியும் வந்து சேருவாங்க. கணவன், மனைவிக்கிடைல  சந்தோஷமான உறவு இருக்கும். பிள்ளைங்க, கல்வியில் மேன்மை அடைவது பற்றித் தீவிரமாக முனைவாங்க. அரசியல்துறையினருக்கும் அரசாங்க உத்தியோகம் பார்க்கறவங்களுக்கும் நிம்மதியான காலமாக இருக்கும். சிறு சிறு பயணங்களாய் வெளியூர் அல்லது ஃபாரின்  பயணங்கள் சென்று வருவீங்க. மாணவர்களுக்குக் கல்வியில் இருந்த போட்டிகள் குறையும். மறைமுக எதிர்ப்புகள் நீங்கும். மனதில் நம்பிக்கை உண்டாகும். செலவுகள் கொஞ்சம் ஜாஸ்தியாத்தான் இருக்கும். ஆனா அதனாலெ கெடைக்கப்போற சந்தோஷத்தோட ஒப்பிட்டா அது நத்திங். உறவினர் சம்பந்தமான விஷயங்களில் அலட்சியமின்றிச் செயல்படுவது நல்லது.

விருச்சிகம்

வீட்டில் உற்சாக சூழல் நிலவும். அக்கம் பக்கத்தினரிடையேயும், பப்ளிக் இடங்கள்லயும் பேச்சினால பிரச்னைங்கள்ல மாட்டாமல் இருக்கப் பாருங்க. ஆனா, சந்தோஷம் என்னன்னா, நண்பர்கள்கூட இருந்துக்கிட்டிருந்த மனவருத்தங்கள் நீங்கும். சொன்ன சொல்லை காப்பாத்துவீங்க. வேலையை விடலாம்னு நினைக்கவே நினைக்காதீங்க. கொஞ்சம் பின்னால் திரும்பிப் பாருங்க. நீங்க வெளியே வந்தால் உள்ளே முண்டியடிச்சு நுழைய நூறு பேர் காத்திருக்காங்க. விமானத்தில் பறக்கப்போறீங்க. கார் வாங்கப் போறீங்க. கலைத்துறையினர் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு காரிய வெற்றி காண்பீங்க. ஆரோக்கியத்தில் இருந்த பிரச்னைங்க நீங்கும். சாப்பிடும் விஷயத்துல மட்டும் கவனமா இருங்க. நேரம் தவறிச் சாப்பிடுவது/ ஆரோக்கியம் இல்லாத இடங்களில் உணவை உண்பது/ வயிற்றுக்கு ஏற்புடையதா இல்லாத விஷயங்களைச் சாப்பிடுவது கூடாதுன்னு கவனமா இருங்க.

தனுசு

தொழில் பிஸினஸில் சுமாரான முன்னேற்றம் காணப்படும். ஆனாலும் மோசமில்லை. எதிர்பார்த்த லோன் வசதி கிடைப்பதில் துரிதமான பலன் இருக்கும். செலவு பாட்டுக்கு சுனாமி கணக்கா உங்களை விழுங்கிகிட்டிருந்தாலும் அதற்கெல்லாம் அசந்து போறவங்களா நீங்க! இந்த வாரம் வாக்கு வன்மையால் காரிய அனுகூலம் உண்டாகும். மனதில் ஏதாவது சஞ்சலம் இருந்து கொண்டே இருந்த நிலைமை மாறி நிம்மதியாத் தூக்கம் வரும். திடீர் பணதேவை ஏற்படலாம். தேவையான நேரத்தில் மற்றவர்களின் உதவி கிடைக்கும். புதிய சொத்து வாங்குவதில் கவனம் செல்லும். தொழில் வியாபாரம் முன்னேற்றமடைய தேவையான உதவிகள் கிடைக்கும். திறமையான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்வீங்க. மம்மி டாடி ஆதரவா இருப்பாங்க. காதல் விஷயங்களில் ஈடுபாடு வந்தால், சரியான நபர்தானா என்பதை உறுதி செய்துக்குங்க.

மகரம்

பணம் வருவது தடைபடாது என்றாலும் பெரிய அளவில் லாபங்களையோ வருமானத்தையோ எதிர்பார்க்க வேணாம். பார்ட்னர்கள் தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன் கெடைக்குங்க. பணியில் இருப்பவர்கள் வேலைப்பளு இருந்தாலும் சக ஊழியர்கள் ஒத்துழைப்பால் அது குறையும்.  கணவரால்/ மனைவியால் நன்மைகள் நிகழும். உங்களுடைய வருமானம் நன்கு உயரப்போகுது. ஒன்றா இரண்டா எடுத்து சொல்ல? இந்த வாரம் ஹாப்பியா டூயட் பாடுவீங்க. திருமணம் ஆனவர்களும் ஹனி மூன் முடிச்சவங்களும் அடுத்த ஹனி மூனுக்குத் தயாராயிடுவீங்க. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். குடும்பத்துல இதமான சூழ்நிலை நிலவும். குடும்பத்துல இருந்த கருத்து வேற்றுமை நீங்கி ஒற்றுமை உண்டாகும். உறவினர்கள் மூலம் நன்மை உண்டாகும். நன்றி சொல்லுங்க. தப்பில்லை!

கும்பம்

மனசுல தைரியம் கூடும் தன்னம்பிக்கை இன்கிரீஸ் ஆகும். பழைய நண்பர்களைச் சந்திச்சுப் பேசி சந்தோஷப்படுவீங்க. புதிய திட்டமெல்லாம் தீட்டி அதுல வெற்றியும் அடைவீங்க. தொழில் செய்பவர்களுக்கு, வேலைப்பளு அதிகரித்தாலும், கவலை வேணாம். அதற்கு ஏற்ற வருமானம் வந்து சந்தோஷப்படுத்தும்.  திட்டமிட்ட பணவரவுகள் சிறிது தாமதமாக வந்துசேரும். உத்தியோகத்தில் சிலருக்கு புதிய பொறுப்புகள் கிடைக்கும். மனதிற்கு பிடிச்ச இடமாற்றம் வரலாம். தொழில் செய்யறவங்களுக்கு, பொருளாதார உயர்வு ஏற்படும். அதே நேரம் வேலைப்பளு அதிகரிக்கும். இட்ஸ் ஓகே தானே? வாகனங்கள் பயன்படுத்தும் போது கொஞ்சம் கேர்ஃபுல்லா இருங்க. நல்ல மனிதர்களோட முன்பு விட்டுப்போயிருந்த நட்பு இப்போ மீண்டும் துளிர்க்கும். குல தெய்வம் கோயில் உள்பட பல தலங்களுக்குப் போவீங்க. மனசுல முன்பைவிட நிம்மதி கூடும். பணம் பற்றிப் பிரச்சினை இல்லை.

மீனம்

என்னது? வேலை பிடிக்காமல் கம்பெனியில் பேப்பர் போடப்போறீங்களா? இப்பவா? நோ…நோ. இன்னும் கேட்டால், பணியாளர்கள் கொஞ்சம் கவனமாய்ப் பணிகளை கவனிப்பது நல்லது. இன்னும் கொஞ்சம் பொறுமை.  சிலருக்கு இடமாற்றம் உண்டாகலாம். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கும். வாழ்க்கை தரம் உயரும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்தநிலை நீங்கும். உங்களது பொருட்களை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை. சின்னச் சின்ன ஆரோக்கியப் பிரச்னைங்க வந்தாலும் சுலபமா அதை எதிர்கொண்டு மீண்டு ஹாப்பியாயிடுவீங்க. உத்யோகம், பிசினஸ் சார்ந்த விஷயங்களைவிடவும், பொழுது போக்கு ஜாலி சமாசாரங்களில் கவனம்  போகும். சினிமா, மால்னு சுற்றுவீங்க. கொஞ்சம் பொறுப்பாவும் இருக்கறது நல்லதுங்க. உடற்பயிற்சி, ஜிம் அது இதுக்கு கவனமா இருப்பீங்க. சந்தோஷமான மாற்றம்தான். நிரந்தரமா இருக்கட்டும்.