மேஷம்

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

சமீப காலம் வரைக்கும் பேச்சினால் பிரச்னைங்க வந்துக்கிட்டிருந்தது  இல்லையா? இனி வாக்கு வன்மையால தொழில்/ பிசினஸ் நல்லாவே நடைபெறும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பாங்க. நீங்க வெளியில் கொடுத்திருந்த கடன் பாக்கிகள் வசூலாகும். நீங்க அப்ளை செய்திருந்த கடன் வசதி கிடைக்கும். உத்தியோகத்தில உள்ளவங்களுக்கு வேலைச் சுமை ஓரளவு குறையும். நீங்க எப்பவோ செய்த முயற்சிங்களுக்கு சாதகமான பலன் கெடைக்கும். கடினமாக காரியங்களையும், திறமையாகச் செய்து முடிச்சு நிம்மதிப் பெருமூச்சு விடுவீங்க. ஃபேமிலியில் கணவன் மனைவிக்கிடையே இருந்த டிஷ்யூம் டிஷ்யூம்கள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். கலைத்துறையினருக்கு காரிய வெற்றி பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். அரசியல்வாதிகளுக்கு லாபம் அதிகரிக்கும். ஸ்டூடன்ட்ஸ்க்கு கல்வியில் எதிர்பார்த்த முன்னேற்றம் கிடைக்கும். குட். வெரி குட்

சந்திராஷ்டமம்: ஏப்ரல் 18 முதல் 20 வரை. சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாய் இருங்க

ரிஷபம்

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

உறவினர் மற்றும் நண்பர்கள் கிட்ட நல்ல பெயர் எடுப்பீங்க. மத்ததவர்களுக்கு ஹெல்ப் செய்வதால் வீண் அலைச்சல் உண்டாகலாம்.. சந்திராஷ்டம தினங்களில் ரிஸ்க் எதுவும் எடுக்க வேணாம். ஆஃபீசில் அனுசரிச்சுக்கிட்டுப் போயி நல்ல நேம் எடுப்பீங்க. ஃபேமிலியில் பாதியில் நின்ற வீடுகட்டும் பணியை மீண்டும் தொடருவீங்க. சிலர் புதிய வீட்டுக்குப் புது மனை புகுவிழா செய்வீங்க.  கணவன் மனைவிக்கிடையே ஹாப்பி வீக் தான். பிகாஸ் திடீர்னு பழைய சண்டை முடிவுக்கும் வந்துரும்ங்க. லேடீஸுக்கு பணவரவு திருப்தி தரும். கலைத் துறைல உள்ளவங்களுக்கு இருந்து வந்த மந்த நிலை மாறும். நண்பர்களிடம் சுமுகமாகப் பேசிப் பழகுவீங்க.இதனால ஹாப்பி ஃப்ரெண்ட்ஷிப் நிலவும். என்றைக்கோ செய்த இன்வெஸ்ட்மென்ட்ஸ் இப்போ லாபம் தரும். பதற்றம் அவசரம் இன்றிச் செயல்கள் செய்வது நன்மை தரும். பி கேர்ஃபுல் பா. 

சந்திராஷ்டமம்: ஏப்ரல் 20 முதல் 23 வரை/சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாய் இருங்க

மிதுனம்

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

பிள்ளைங்களை மத்தவங்க பாராட்டுவதால் பெருமை உண்டாகும். திடீர் குட் நியூஸ் வருவதால், ஃபேமிலிக்குள்  இருந்துக்கிட்டிருந்த கருத்து வேற்றுமை நீங்கும். ஃபேமிலியில் சுப நிகழ்ச்சிகள் நடக்கும். வாழ்க்கையில் புதிய முன்னேற்றம் ஏற்படும். லேடீஸுக்கு வீண் செலவு குறையும். கலைத்துறையினருக்கு திறமையான செயல்கள் மூலம் எடுத்த காரியம் சாதகமாக நடந்து முடியும். அரசியல்வாதிகளுக்கு புதிய முயற்சிகள் காரணமா நல்ல ரிஸல்ட் கிடைக்கும். ஸ்டூடன்ட்ஸ்க்கு கல்வியில் இருந்த முன்னேற்றத்திற்கு இருந்த முட்டுக் கட்டைகள் விலகும். பயன் தரும் காரியங்களில் ஈடுபடுவீங்க. தொழில், பிசினஸ் தொடர்பா கொஞ்சம்  அலைச்சல்களும் ஏற்படும். சொல்லிலும், செயலிலும், மற்றவர்களை நம்புவதிலும் கேர்ஃபுல்லா இருப்பது அவசியம். டோன்ட் பிலீவ். சந்திராஷ்டம தினங்களில் ரிஸ்க் எதுவும் எடுக்காதீங்க.

கடகம்

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

செல்வம் சேரும். வாகனம் வாங்க எடுத்த முயற்சி கைகூடும். தொழில், பிசினஸில் மந்த நிலை காணப்படும். வரவேண்டிய பணம் தாமதமாக வரும். சரக்குகள் வருவதும் புதிய ஆர்டர்கள் கிடைப்பதும் எதிர்பார்த்ததை விடக் நல்லாவே இருக்கும். எனவே நீங்க ஹாப்பி ஆவீங்க.  பிள்ளைங்க நீங்க சொல்றதைக் கேட்டு நடப்பது மனதிருப்தியைத் தரும். ஜாலியா வெளியிலெல்லாம் போய் என்ஜாய் செய்வீங்க.  உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்கும். அந்தஸ்து உயரும். ஆனாலும் அதனால் பொறுப்பும் அதிகமாகும். கலைத்துறையினருக்கு உதவிகள் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு பணத்தேவை உண்டாகலாம். மத்தவங்களோட செயல்களுக்கு பொறுப்பேற்காமல் தவிர்ப்பது நல்லதுங்க. பணம் கொடுக்கல்வாங்கலில் கவனமா இருங்கப்பா. தொழில், பிசினஸ் மூலம் லாபம் அதிகம் வரும். யெஸ். யூ வில் கெட் மோர் பிராஃபிட்.

சிம்மம்

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

லேடீஸுக்கு காரிய அனுகூலம் உண்டாகும்.பண வசதி கூடும். தெய்வ சிந்தனை அதிகரிக்கும். வாழ்க்கையில் இருந்த அதிருப்தி நீங்கி, பிடிப்பு உண்டாகும். வாரக்கடைசியில் எதிர்பார்த்த குட் நியூஸ் வரும். இடமாற்றம் உண்டாகலாம். எதிர்பாராத திடீர் செலவு ஏற்படும். தொழில் பிசினஸ் விருத்தியடையும். தடைபட்ட நிதி உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களின் வேலைப்பளு, வீண் அலைச்சல் வார ஆரம்பத்தில் அதிகரித்தாலும் போகப்போகச் சரியாகும். ஃபேமிலியில் இருப்பவர்களுடன் இணக்கமான போக்கு காணப்படும். கணவன் மனைவிக்கிடையில் இருந்த மனவருத்தங்கள் நீங்கும்.  பிள்ளைகளின் எதிர்கால நலன் குறித்து கவலை உண்டாகலாம். லேடீஸுக்கு தடைபட்ட காரியங்களில் இருந்த தடைநீங்கி சாதகமாக நடக்கும். கலைத்துறையினருக்கு பணவரவு திருப்திகரமாக இருக்கும். ராசியைச் சேர்ந்த அனைவருக்குமே நல்ல மாற்றங்கள் வந்து சேரும். யெஸ். வெரி குட் சேஞ்சஸ்.

கன்னி

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

ஸ்டூடன்ட்ஸ்க்கு கல்வியில் எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும். ஆர்வமுடன் பாடங்களைப் படிப்பீங்க. இந்த வாரம் எதிலும் மிகவும் கேர்ஃபுல்லா ஈடுபடுவது நல்லதுங்க . பேச்சின் இனிமை, சாதுர்யம் இவற்றால் எடுத்த காரியங்கள் சாதகமாக முடிய உதவும். காரியங்களில் தாமதம் உண்டாகலாம். அடுத்தவர் பிரச்சினைகளில் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லதுங்க.  தொழில் பிசினஸ் சுமாராக நடக்கும். எதிர்பார்த்த பணவரவு இருந்தாலும் பிசினஸ் தொடர்பான செலவுகள் கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகம் தொடர்பான அலைச்சல் குறையும். ஃபேமிலியில் கணவன், மனைவிக்கிடையே திடீர் பூசல்கள் ஏற்பட்டு சரியாகும். குடும்பச் செலவுகள் கூடும். குடும்பம் பற்றிய கவலைகள் உண்டாகும். உறவினர்கள், நண்பர்களிடம் பேசும்போது நிதானமாகப் பேசுவது நன்மை தரும். உங்க செயல்களுக்கு இருந்த எதிர்ப்புகள் விலகும். யெஸ். யூ வில் பி ஹாப்பி.

துலாம்

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

கலைத்துறையினருக்கு பணவரவு திருப்தி தரும். அரசியல்வாதிகளுக்கு மனக்குழப்பம் நீங்கும். ஸ்டூடன்ட்ஸ்க்கு பாடங்கள் படிக்க வேண்டுமே என்ற கவலை குறையும். சக மாணவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். முக்கிய நபர்களின் சந்திப்பும் அவர்களால் உதவியும் கிடைக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். மனதில் தைரியம் கூடும். சுய நம்பிக்கை உண்டாகும். எடுத்த காரியங்களைச் செய்து முடிப்பதில் எதிர்பாராத திருப்பங்கள் ஏற்படும். தொழில் பிசினஸ் தொடர்பான முயற்சிகள் சாதகமான பலன் தரும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கடுமையான வேலை இருக்கும். உத்தியோகம் காரணமாக வெளியில் தங்க நேரிடும். அலுவலகத்தில் அனுசரித்துச் செல்வது நல்லதுங்க. ஃபேமிலியில் பாதியில் நின்ற வீடுகட்டும் பணியை மீண்டும் தொடருவீங்க. யெஸ். யூ வில் கன்டின்யூ.

விருச்சிகம்

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

சிலர் புதிய வீட்டிற்கு குடிபுகுவாங்க. கணவன் மனைவிக்கிடையில் திடீரென்று கருத்து வேற்றுமை உண்டாகலாம். லேடீஸுக்கு பணவரவு திருப்தி தரும். கலைத்துறையினருக்கு இருந்து வந்த மந்த நிலை மாறும். அரசியல்வாதிகள் தங்களது நண்பர்களிடம் சுமுகமாகப் பேசிப் பழகுவது நல்லதுங்க.  வாக்குவன்மையால் தொழில், பிசினஸ் நல்லா நடைபெறும். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பாங்க. பழைய பாக்கிகள் வசூலாகும். கடன் வசதி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலைச் சுமை குறையும். முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். கடினமாக காரியங்களையும், திறமையாகச் செய்து முடிப்பீங்க ஃபேமிலியில் கணவன் மனைவிக்கிடையே இருந்த மனஸ்தாபங்கள் நீங்கி ஒற்றுமை உண்டாகும். பிள்ளைகள் நீங்கசொல்வதைக் கேட்டு நடப்பது மனதிருப்தியைத் தரும். உறவினர் மற்றும் நண்பர்களிடம் நற்பெயர் எடுப்பீங்க. யூ வில் கெட் குட் நேம்.

தனுசு

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

எடுத்த காரியங்கள் கை கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்பட்டாலும் எடுத்த வேலையை அருமையாச் செய்து  பாராட்டு வாங்கிடுவீங்க. புதிய வேலைக்கு முயற்சிப்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும். ஃபேமிலியில் மகிழ்ச்சியான கொண்டாட்டங்கள் இருக்கும். குடும்ப சுகம் பூரணமாக கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே திருப்தியான நிலை காணப்படும். லேடீஸுக்கு மனக்குழப்பம் நீங்கி எதிலும் தெளிவான முடிவு எடுக்கும் மனநிலை ஏற்படும். கலைத்துறையினருக்கு காரியத் தடைகள் விலகும். அரசியல்வாதிகளுக்கு எதிர்பார்த்த பணம் வரலாம். ஸ்டூடன்ட்ஸ்க்கு தொழிற்கல்வி கற்பதில் ஆர்வம் உண்டாகும்.இந்த வாரம் பணவரவு அதிகரிக்கும். மனக் குழப்பம் உண்டாகலாம். எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்துச் செய்வது நல்லதுங்க. காரியத் தடைகள் விலகும். டோட்டலி.

மகரம்

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

ஸ்டூடன்ட்ஸ்க்கு கல்வியில் வேகம் காணப்படும்.பயணங்கள் மூலம் நன்மை கிடைக்கும். புதிய நண்பர்கள் கிடைப்பாங்க. தொலைதூரத்தில் இருந்து வரும் தகவல்கள் நல்லதாக இருக்கும். தொழில் பிசினஸ் தொடர்பான காரியங்களில் இருந்த தடைகள் விலகும். போட்டிகள் குறையும். புதிய ஆர்டர்கள் பெறுவதற்கான தடைகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எளிதாகப் பணிகளைச் செய்து முடிப்பாங்க. மேல் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். ஃபேமிலியில் திடீர் பிரச்சினை தலைதூக்கி பின்னர் சரியாகும். கணவன் மனைவிக்கிடையே ஒற்றுமை உண்டாகும். உறவினர்களிடம் அனுசரித்துச் செல்வது நன்மை தரும். பெண்களது ஆலோசனையைக் கேட்டு ஃபேமிலியில் இருப்பவர்கள் செயல்படுவாங்க. கலைத்துறையினருக்கு ஆன்மிக நாட்டம் உண்டாகும். அரசியல்துறையினருக்கு அதிர்ஷ்டம் ஏற்படும். குட் லக்.

கும்பம்

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

ஸ்டூடன்ட்ஸ்க்கு தொழில்நுட்ப கல்வியில் ஆர்வம் உண்டாகும். புதிய வகுப்புகளில் சேர முயற்சிகள் மேற்கொள்வீங்க. இந்த வாரம் வீண் செலவுகள் குறையும். பணவரவு அதிகரிக்கும். காரியங்களில் இருந்து வந்த தாமதம் அகலும். மிகவும் வேண்டியவரைப் பிரிய நேரிடும். கண்மூடித்தனமாக எதையும் செய்யாமல் யோசித்து செய்வது நல்லதுங்க. இருக்கும் இடத்தை விட்டு வெளியேற வேண்டி இருக்கும். தொழில் பிசினஸில் பார்ட்னர்கள் மூலம் நன்மை உண்டாகும். வியாபாரத்திற்கு தேவையான நிதி உதவியும் கிடைக்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எளிதாகப் பணிகளைச் செய்யும்படி இருக்கும். தற்காலிக பதவி உயர்வு கூடுதல் பொறுப்புகள் கிடைக்கப் பெறலாம். ஃபேமிலியில் இருப்பவர்களுக்கு இருந்து வந்த நோய் நீங்கும். அவர்களது நலனில் அக்கறை காட்டுவீங்க. கணவன் மனைவிக்கிடையே கருத்து வேற்றுமை ஏற்படலாம். டோன்ட் ஒர்ரி. யூ வில் சால்வ் இட்.

சந்திராஷ்டமம்: ஏப்ரல் 14 முதல் 16 வரை/ சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாய் இருங்க.  

மீனம்

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்

பிள்ளைகளிடம் கேர்ஃபுல்லா எதையும் எடுத்துச் சொல்வது நல்லதுங்க. பூர்வீகச் சொத்துக்களில் இருந்த பிரச்சினைங்க தீர்ந்துடும். லேடீஸுக்கு மனக்குழப்பம் தீரும். கலைத்துறையினருக்கு தைரியமாக எந்த காரியத்தையும் செய்து முடிப்பீங்க. அரசியல்துறையினருக்கு தேவையான உதவிகள் கிடைக்கும். ஸ்டூடன்ட்ஸ்க்கு பாடங்கள் படிப்பது எதிர்பார்த்ததுபோல் எளிமையாக இல்லாமல் கடினமாக இருக்கலாம். இந்த வாரம் பணவரவு கூடும். செய்யும் காரியத்தில் மனதிருப்தி கிடைக்கும். அடுத்தவர்களுக்காக எந்த பொறுப்பையும் ஏற்காமல் இருப்பது நல்லதுங்க. மற்றவர்களுக்காக வீண் அலைச்சல், செலவு செய்ய வேண்டி இருக்கும். கடன் பிரச்சினை தீரும். ஆர்டர் பிடிப்பதில் இருந்த கஷ்டம் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணி தொடர்பான சிக்கல்கள் நீங்கும். ஃபேமிலியில் இருந்து வந்த பிரச்சினைங்க குறையும். யெஸ்..  ஆல் பிராப்ளம்ஸ் வில் பி சால்வ்ட்.

சந்திராஷ்டமம்: ஏப்ரல் 16 முதல் 18 வரை/ சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாய் இருங்க