ஆத்திரம் கோபம் ஆகியவற்றை ஒரு மூட்டையில் போட்டுக் கட்டி வங்காள விரிகுடாவில் வீசுங்க. உங்க உடம்புதானே கெட்டுப் போகுது?  நண்பர்கள் அட்டகாசமான உதவிகளை செய்வார்கள். ஹூம். குடுத்து வெச்சவங்க நீங்க. புது வாகனம் வாங்கியே ஆகணுமா? கொஞ்சம் பொறுங்களேன். வேலை பளுவைப் பொருட்படுத்தாதீங்க. குழந்தைங்க.. கணவர் அனைவருமே அநுசரணையா இருப்பாங்க!! ஹூம்ம்ம்.. வேறென்ன வேணும்!! தம் கட்டி இழுத்துப் பிடிச்சு நிலைக்கு வந்துட்டீங்க. இன்னும் 2 மாசம்தான். வெற்றிக்கொடிதான் போங்க. அலைச்சலும் பயணமும் இருந்தாலும் அலுத்துக்கும்படி இருக்காது. வெளி நாட்டு வேலைக்கு முயற்சி செய்துக்கிட்டிருந்தவங்களுக்கும் பாஸ்போர்ட் விசாவுக்காகக் காத்திருந்தவங்களுக்கும் பால் பாயசம்தான். மகன் மகள் ஃபாரின்ல இருந்தால் ஒரு விசிட் அடிப்பீங்க, 

அனுமனை வணங்குங்கள்.

சந்திராஷ்டமம் : 17.03.2017 முதல் 20.03.2017 வரை  

எல்லாம் திடீர் நிகழ்வுகளாக இருக்கும். நினைத்தீர்களா இது நடக்கும் என்று? நினைக்குமுன்னே எல்லாம் கனியும்! மனைவி /கணவர் கொஞ்சம் சண்டை கிண்டை போட்டால் காதில் இயர் ஃபோன் வைத்துப் பாட்டுக் கேட்கலாமே தவிர பதிலுக்குப் பேசக்கூடாது. மூச்! அலுவலகத்தில் அனைவரையும் மூக்கில் விரல் வைக்கச்செய்வீர்கள். வண்டி ஒட்டும்போது பாட்டு கேட்கவோ ஃபோன் பேசவோ வேண்டாம், மம்மியுடைய முழு ஆதரவுடன் காரியங்களை சாதிச்சுப்பீங்க. வேலை கீலை மாறணும்னா நல்லவங்க.. நலம் நாடறவங்க கிட்ட நல்லா கன்சல்ட் செய்து அறிவுரை வாங்கித்தான் தீர்மானிக்கணும்.  (உங்கள் ஜாதகத்தையும் உங்க ஜோதிடர் கிட்ட காண்பித்து ஒரு பச்சை சிக்னல்வாங்கிடுங்க). குழந்தைங்க பற்றிய டென்ஷனை மனதில் போட்டுக் குழப்பிக்காதீங்க.

ஸ்ரீராகவேந்திரரை வணங்குங்கள்

சந்திராஷ்டமம் : 20.03.2017 முதல் 22.03.2017 வரை

அப்பாடா. அம்மாடி. தீமித்து சேதமில்லாமல் வெளியே வந்துட்டீங்க. பேச்சில் மட்டும் கண்ணியம் கட்டாயம் இருக்கும்படி பார்த்துக்குங்க. கவரும்படி பேசுபவ்ர் நீங்க!! மேடையில் பேசுவீ்ங்க…மம்மிக்கு அரசாங்கத்தின் உதவி கிடைக்கும். நீங்க எந்தெந்த நன்மைகளுக்குக் காத்திருந்தீங்களோ அத்தனை யும் கிடைக்கும். திடீர் செலவுகள் வரும். அதனால் என்ன திடீர் வரவுகளும் வருமே! குழந்தைகளுக்குப் படிப்பில் அல்லது உத்யோகத்தில் முன்னேற்றம் உண்டு. வீட்டில் சுப காரியங்களுக்கான அறிகுறி தென்படும். நண்பர்களிடம் ஏழெட்டு அடி தள்ளியே இருங்க. கொடுக்கவும் வேண்டாம். வாங்கவும் வேண்டாம். நீங்களாய் மனமுவந்து செலவு செய்யறீங்க. அப்புறம் ஏன் புலம்பல்? ஸ்டாப் இட் மா. ப்ளீஸ்.

ராமரை வணங்குங்கள்.

சந்திராஷ்டமம் : 22.03.2017 முதல் 25.03.2017 வரை

அலுவலகத்தில் துணி பிழிவது போல் பிழியறாங்களா? அவர்களே அழைத்து மாலை மரியாதையுடன் விருதும் பாராட்டும் பரிசும் பணமும் கொடுக்கப்போறாங்க… அப்ப இந்தப் பிழியல் மறந்து போகுமில்ல! தன்னம்பிக்கை ஃபவுன்டனாய் உயரும். சகோதர சகோதரிகளுக்கு நன்மை நடப்பதற்கான அறிகுறிகள் தென்படும். மம்மிக்கு திடீர் அதிருஷ்டம் கிடைக்கும். கணவர் மனைவி சண்டையை ஏதோ இந்திய பாக்கிஸ்தான் பகை மாதிரிக் கற்பனை செய்துக்க வேண்டாம். அதை  பி பி சி மாதிரி அனைவருக்கும் அறிவிக்கவும் வேண்டாம், மிஞ்சிப் போனால் நாலு எமோடிக்ஸ் கிடைக்கும். அதிருஷ்ட வாய்ப்புக்களை நம்பி மங்காத்தா (சரி கேசினோ) ஆடாதீங்க. இப்போதைக்குக் குருட்டு அதிருஷ்டமெல்லாம் இல்லை. உழைச்சா மட்டுமே நன்மை. சிலருக்கு 2 வித லாபங்கள் உண்டு.

விஷ்ணுவை வணங்குங்கள்.

பராபரியாய்க் காதில் விழுந்த நல்ல  செய்திகள் கன்ஃபர்ம் ஆகி மகிழ்ச்சியில் டிஸ்கோ ஆடுவீங்க. குழந்தைகள் பற்றி இருந்து வந்த டென்ஷன்கள் மேகங்கள் போல் கடந்து செல்லும். பயணங்களை இன்னும் கொஞ்ச காலத்திற்குத் தவிர்க்க முடியாது. ஆனால் அது அலுவலகத்தில் உங்கள் கிரீடத்தில் எத்தனை இறகுகளை சேர்க்கப் போகிறது தெரியமா? தடைகளூம் தாமதங்க ளும் இருக்கத்தான் செய்யும்! எல்லாம் சரியாகும்!! உங்க பொறுமைக்கு சாமி எவ்வளவு நல்ல பரிசு குடுத்தாரு பார்த்துக்குங்க. பக்தி அதிகரிக்கும். மகிழ்ச்சியான நிகழ்வுகள் புன்னகையை அகலமாக்கும். மம்மி/ டாடிக்கு சிறு பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. நீங்கள் மிகவும் மதிப்பவர்கள் உங்களைக் கண்டுக்கலையா? ஆக்கப் பொறுத்தீங்க. ஆறப் பொறுங்க.

 மகாலட்சுமியை வணங்குங்கள்.

எங்கும் பயம்; எதற்கும் பயம்; எதிலும் பயம்னு தெனாலி மாதிரி இருந்தால் எப்படி. உங்களால் முடியும். நம்புங்க. கட்டுப்படுத்த முடிந்த செலவுகளைக் கட்டுப்படுத்தப்பாருங்க. யாருக்கும் மானாவாரியாய் வாக்குறுதிகளைக் கொடுக்க வேண்டாம். உங்களால் அவற்றைக் காப்பாற்ற முடியுமா என்ன? திருமணம் முடியும். கவலை வேண்டாம். நீங்க உண்டு உங்க வேலை உண்டுன்னு இருந்தா கோடி புண்ணியம்.. தலையிடாதீங்க.. தலையிட அனுமதிக்காதீங்க… டாடியை டென்ஷன் பண்ணாதீங்க. என்னது? அவர்தான் உங்களை டென்ஷனுக்கு உள்ளாக்கறாரா? ஒரு முறை ஃப்ளாஷ் பேக் பாருங்க. அவரை நீங்களாகவும் உங்களை அவராகவும் கற்பனை செய்துக்குங்க. புரியும். பேச்சில் கவர்ச்சி அம்சமும் புத்திசாலித்தனமும் ஏற்பட்டு வெளியில் உங்கள் கட் அவுட்டுக்குப் பாலபிஷேகம்தான்!

துர்க்கையை வணங்குங்கள்

புது வேலைக்காகக் காத்திருந்தவர்களுக்கு நல்ல காலம் பிறக்குது; நல்ல காலம் பிறக்குது. பேச்செல்லாம் புகழ் வாங்கித் தரும். குழந்தைகளா அவர்கள், நீங்கள் பெற்ற ரத்தினங்கள். உங்களின் புண்ணியங்களின் மறுவடிவு.  அவர்களால் எத்தனை பெருமை! அவார்ட்..ரிவார்ட் என்று எதிர்பாராத நன்மைகளை எதிர்பார்க்கலாம்! நலம் தரும் செலவுகள் உண்டு. நம்பிக்கை யைக் கைவிடாதீங்க. ஒவ்வொரு அடியையும் கவனமாய் எடுத்து வைக்க வேண்டிய சமயம் இது.வீடு வாங்கறது, கம்பெனி மாறுதல், மோதிரம் மாற்றுதல் அல்லது தாலி கட்டுதல் எதையும் இப்போதைக்குச் செய்ய வேண்டாம் அதது தானாக நடக்கட்டும். டாடிக்குப் பதவி உயர்வு உங்களுக்குப் பாக்கெட் மனி உயர்வு எல்லாம் கிடைக்கும். டாலர், யூரோ, பவுண்ட், யென் என்று ஏதாவது கையில் வந்து விழும். ஹூம்.நடக்கட்டும்.

விநாயகரை வணங்குங்கள்.

திருமணம் தள்ளிப்போவதற்கு டென்ஷனே வேண்டாம். நடந்திருந்தால்தான் டென்ஷன் ஏற்பட்டிருக்கும். அரசாங்கம் மூலம் கிடைக்க வேண்டிய நன்மை கள் இதோ அதோன்னு இழுக்கடிச்சுக்கிட்டிருந்த நிலை மாறி இதே கிடைச்சாச்சு! கையை நீட்டுங்க. இந்தாங்க பிடியுங்க…வெளிநாட்டு வேலை. சகோதரர்களின் நிலை மிக உயரும். வேலை பளு குறையும். சம்பளம் மிகும்!! செம!! குழந்தைங்களைப் பற்றிக் கவலை வேண்டாம். பிரச்சினைகள் ப்யூர்லி தாற்காலிகமானவைதான். குடும்பத்தில் அமைதி மகிழ்ச்சி ஒற்றுமை என்று எல்லாமும் நிலவும். அதோட ஒரு விசேஷ சுப காரியமும் இருக்குமேங்க… சிறு சிறு பயணங்கள் உண்டு. முதலீடுகளை அதிகப்படுத்துவீங்க. பரிசுகள் கிடைக்கும். வரவு அதிகரிக்கும். செலவும்தான்.  ஸோ வாட்? 

முருகரை வணங்குங்கள்.

சகோதர்கள் சுள்ளென்று மிளகாய் கடித்ததுபோல் பேசினால் பேசிவிட்டுப் போகட்டும். ஆஃப்டரால் ஒரே வயிற்றில் பிறந்திருக்கிறீர்கள்.விட்டுக் கொடுத்துத்தானே போவோமே! அவங்களால நன்மைகளும் உண்டே!! குழந்தைகள் முகம் பார்க்கும் கண்ணாடி மாதிரி! சிரியுங்கள். சிரிப்பார்கள். அதைவிட்டுவிட்டு முறைக்கிறீர்களே! புதிதாக பூஜைகள் அல்லது விரதங்கள் ஆரம்பிப்பீர்கள். சிஸ்டர்ஸ் பிரதர்ஸ் எல்லாம் எப்பவும் போலத்தான்மா இருக்காங்க. நீங்களா மாறிட்டாங்கன்னு நினைச்சா… வாட் டு டூ?  நாட்டில் இருக்கும் அரசியல் மாற்றங்கள் போதும்ப்பா, வீட்லயுமா? போதுமே..! புது டிரெஸ் கொண்டாட்டங்கள் என்று லைஃப் நல்லாத்தான் போகுது, கொண்ட கடமையில் தூங்கியவன் புகழ் இழந்தான் என்று பட்டுக் கோட்டையார் சொன்னதை நினைவு படுத்திக்குங்க.

ஐயப்பனை வணங்குங்கள்

குட்டிப் பாப்பா வரப்போகுது அல்லது புது மணமகளாவீங்க. சின்னச்சின்ன உடல் உபாதைகளைப் பொருட்படுத்தாதீங்க. எல்லாம் சீக்கிரத்தில் டெலிட் ஆகும். மம்மிக்கு ஜாக்பாட்தான். குழந்தைகளின் புத்திசாலித்தனம் அதிகரிப்பதால் பாராட்டு கிடைக்கும். எனவே உங்களுக்குப் பெருமிதம் ஏற்படும். வேலை பார்க்கும் இடத்தில் மலைபோலே வரும் பிரச்சினைகள் பனி போல் விலகும். திடீர்னு கோயில் குளம்னு விஸிட் அடிச்சு எஃப் பியிலும் வாட்ஸாப்பிலும் ஃபோட்டோ போடுவீங்க. வெளிநாட்டில் உள்ள நெருங்கிய உறவினர் சந்தோஷ செய்தி மட்டுமல்லாமல் பணமும்கூட அனுப்புவாங்க. அவசிமில்லாமல் யாரிடமும் ஒரு வார்த்தையும் பேசக்கூடாதுன்னா பேசவே கூடவே கூடாதுன்னு நினைவு வெச்சுக்குங்க. ஒவ்வொரு ஃப்ரெண்டும் தேவை!  மம்மியுடன் மல்யுத்தம் குத்துச்சண்டைன்னு பயிற்சி செய்ய வேண்டாம். முடிஞ்சா அவங்களை வணங்குங்க. அதெப்பிடி முடியாம போகும்?

சிவனை வணங்குங்க

சின்ன சின்ன மீன்களை பூதக்கண்ணாடி வைத்துப் பார்த்துத் திமிங்கலம்னு பயப்பட வேண்டாம். சில விஷயங்களில் குறிப்பாய் சுப காரியங்களில் சிறு தாமதங்கள் இருந்தாலும் எல்லாம் நல்லா முடியும். எதிர்பார்த்த இடங்களிலிருந்த வராத பணம் .. நன்மைகள்.. அல்லது உதவி…எதிர்பாராத இடங்களிலிருந்து வரும். சகோதரர்களுடன் சண்டை போடாதீங்க. பாவம். பிழைச்சுப் போகட்டும். திடீர் நண்பர்கள் உதவுவார்கள். அனுமனை வணங்குங்கள். கவர்ச்சி அம்சம் உங்களின் முக்கியத்துவத்தை ஹைலைட் செய்து காட்டும். உறவினர் நண்பர்கள் வீட்டு விசேஷங்களில் உள்ளங்கால் தேயும் அளவுக்கு ஓடி ஓடி உழைப்பீங்க. பல நாள் காத்திருந்த சஸ்பென்ஸ் ஒன்று சந்தோஷமாய் முடியும். ஆரோக்யமே சிறந்த செல்வம்னு ஒரு ஆங்கிலப்பழமொழி இருக்கு, அதை மனசுக்குள் ஃப்ரேம் பண்ணி மாட்டிக்குங்க. மம்மியை நல்லா கவனிச்சுக்குங்க. படிப்பில் முழு வீச்சில் கவனம் செலுத்துங்க.

அம்மனை வணங்குங்கள்.

தற்பெருமை அடித்துக் கொள்கிறீர்கள். கூடாது என்று சொல்ல மனம் வரவில்லை. அந்த அளவு சாதித்துவிட்டீர்கள். கொஞ்சம் அடக்கி வாசியுங்களேன்! வார்த்தைகளுக்கு பதில் அக்னியை வீச வேண்டாம். இன்று நீங்கள் மற்றவர்களுக்கு அளிப்பதெல்லாம் பூமராங் மாதிரி உங்களுக்கே வரும். பேச்சில் ஐஸ்க்ரீமும் வைத்து அனலும் வைக்கறீங்க.. என்னம்மா இப்படிப்பண்றீங்களேம்மா/ நண்பர்கள் / நண்பிகள் உதவி உங்களுக்கும் கிடைக்கும். உங்கள் உதவி அவங்களுக்கும் உண்டு. குழந்தைகளால்  சமீபத்தில் இருந்துக்கிட்டிருந்த  டென்ஷன்ஸ்  போயே போச். இன்ஃபேக்ட் எந்த பிரச்சினையுமே உடனுக்குடன் சரியாயிடும். உங்களுக்கு உள்ளுக்குள்ள உதைப்பு இருந்தாலும் உழைப்பும் இருக்கறதால அலுவலகத்தில் புகழ் மற்றும் பாராட்டுக் குவியும். அவார்டு/ ரிவார்ட் கிடைக்கும்

திருப்பதி பெருமாளை வணங்குங்கள்.