வார ராசிபலன் (12 ராசிகளுக்கும்) – வேதா கோபாலன்

Must read

மேஷம்

கவர்ச்சி அம்சம் கூடுதலாகும். மேடை ஏறிப் பேசிக் கைதட்டல் வாங்கு வீங்க. கல்யாணம் காட்சின்னு சென்ட் போட்டுக்கிட்டுக் கிளம்புவீங்க. குடும்பத்தில் ஒரு சின்ன சைஸ் மேள மாவது கொட்டும். நண்பர்கள் உண்மையான நண்பர்கள் என்று நினைக்கவும் வேண்டாம் பகைவர்க ளைப் பார்த்து பயப்படவும் வேண்டாம். இரண்டும் தலைகீழாகப் போகுது.  என்ன துங்க? உங்க மேரேஜா? இதோ கண்ணுக்கெட்டிய தொலைவில் தெரிஞ்சாச்சே, சும்மாவா! கொஞ்ச நஞ்சமாகவா உழைச்சீங்க! சின்னச் சின்னதாய் எறும்புக்கடி மாதிரி ஆரோக்யம் கடிக்கும். கண்டுக்காதீங்க. அது பாட்டுக்கு அதுன்னு

ரிஷபம்

தற்காலிகமாக, ஸ்பீட் பிரேக்கர் போட்டாற்போல் வேகம் குறையும்.மனசில் நல்ல சிந்தனை கள் விதைப்பீங்க. மகனோடு/ மகளோடு உலக யுத்தம் வேண்டாம். வாக்கினில் கொஞ்சம் சர்க்கரை தடவறது நல்லது.  இந்தப் பக்கத்திலிலுந்து ஒரு லாபம் அந்தப் பக்கத்திலிருந்து ஒரு லாபம் என்று வரும். அரசாங்கத்திடமிருந்தும் பைசா வரும். சகோதரர்களுடன் குருக்ஷேத்திர யுத்தமெல்லாம் வேண்டாமே. ஆமா…அதெப்பிடிங்க கடன்களை இத்தனை சீக்கிரம் முடிச்சீங்க! எதிலுமே கையெழுத்துப் போடுவதற்கு முன் பேனாவை சரி பார்ப்பதை விட உங்க தீர்மானத்தை சரிபாருங்க.

மிதுனம்

முன் ஒரு காலத்தில் செய்தீங்களே முயற்சி…அது இப்போ பலன் கொடுக்கும். கவர்ன்மென்ட் வேலை கிடைக்கும். ஆனால் அதை ஒப்புக்கறதுக்கு முன்னால் நல்லவங்களோடு கலந்து நாலையும் யோசிங்க. ஜாலியான பொழுது போக்குக்காக வயலில் விதை நெல் தூவுவது போல் பணத்தை இறைக்க வேண்டாம். வள்ளுவர் சொன்னமாதிரிக் குழந்தைங்களால் பெரிய சந்தோஷம் கெடைக்கப் போகுது. ஆரோக்யம் பற்றி இருந்து வந்த பயமெல்லாம் போயே போச். பயணத்துக்கு ரெடியாம்மா? இல்லாட்டியும் யார் விட்டாங்க!

கடகம்

மனதறிந்து எந்தத் தப்பும் செய்யாதீங்க. முடிந்தேவிட்டது என்று நீங்க கைவிட்ட மேட்டர்கள் திடீர்னு  துளிர்விட்டுக் காற்றில் ஆடி வயிற்றில் பல லிட்டர் குளிர் பால் வார்க்கும். கணவ ருக்கு உயர்வுகள் தன்னிச்சையாய்க் கிடைக்கும். குழந்தைகளால் ஏற்பட்டிருந்த கோபங்களும் ஆத்திரங்களும் மகிழ்ச்சி சுனாமியால் இருந்த இடம் தெரியாமல்  போயிருக்கும். ஏற்க னவே கபாலிடீ ரேஞ்சுக்கு அலுவலகத்தில் புகழ், இன்னும் உயர்வீங்க. அலுவலகம் பற்றி மனதில் அலையடித்துக் கொண்டிருந்த டென்ஷன்கள் டாட்டா பை பை சொல்லிட்டுக் கிளம்பி டும். விடாதீங்க மம்மியை. நிறையப் பணம் வரப்போகுது. ஜாலிதான்.

சிம்மம்

புத்திசாலி என்று நிரூபிக்கும் செயல்கள் செய்வீங்க,  மெயில்பாக்ஸில் உங்களை மகிழ்ச்சி யில் துள்ளச் செய்யும் செய்தி வரும். உங்க ஆரோக்யம் உங்க கையில்தான் இருக்கு. பேச்சு சாப்பாடு இரண்டையும் சி சி டி வி காமரா போடாத குறையாக் கண்காணியுங்க. உங்க வாழ்க்கைப் பிரச்சினைகளை மத்தவங்க தீர்மானிப்பதற்கு மறந்தும் அனுமதிக்கா தீங்க. நம் வாழ்க்கை வாகனத்தின் ஸ்டியரிங்கை அடுத்தவங்க பிடிச்சு ஓட்ட அனுமதிக்க முடியுமா என்ன?  சின்னப் பயணம் முதல் பெரிய பயணம் வரை மாற்றி மாற்றி இருக்கும். ஒவ்வொன் றும் லாபம் அருளும். பிள்ளையாரை பின்பற்றி வணங்குங்க

கன்னி

தைரியமாய்த் தன்னம்பிக்கையுடன் அலுவல விஷயங்களைத் தீர்மானிக்கிறீங்க. நன்மை தான் விளையும். மன சாட்சியை மட்டும் அப்பப்ப கன்சல்ட் செய்துக்குங்க. எதற்கெடுத்தாலும் கோபப்படணும்னு வெச்சிருக்கீங்களே அந்த  பாலிசியை மட்டும் மாத்திக்குங்க. நீங்க எது செய்தாலும் உங்களுக்கும் சரி மத்தவங்களுக்கும் சரி நன்மையில்தான் முடியும்.

குழந்தைங்களுக்கும் சகபாதிக்கும் நன்மைகள் கூடுதலாகும். உக்கும்… ஆஹா.. ஊஹுன்னு சலிச்சுக்காதீங்க. போன மாசம்  இந்த நாளில் இருந்த நிலைக்கு இப்போ எவ்வளவோ தேவலைதானே? திருமண ஏற்பாடுகள் வேகமாய் நடக்குதா? வாழ்த்துக்கள். புதிய ஆடைகள். நகைகள், பொருட்கள், வாகனங்கள் கிடைக்கும். செலவுகள் அதிகமாகாமல்பார்த்துக் கொள்ள வேண்டியது உங்க கையில்தான் இருக்கு.

துலாம்

கோயில் குளம்னு ஜாலியாய் சூட்கேஸைத் தூக்கிக்கிட்டு கிளம்பிட்டீங்க. பாப்பாவைக் கொஞ்சப்போறீங்க. கங்கிராட்ஸ். திருமணம் பற்றி எதுக்காக  இத்தனை கவலைப்படறீங்க. எல்லாம் தன்னிச்சையாய் நல்லபடியாய் இதோ முடிஞ்சாச்சு. எதற்கெல்லாம் பல காலம் காத்திருந்தீங்குளோ அதெல்லாம் வெற்றிகரமாகத்தான் முடியும்.  செலவு செலவுன்னு ஃப்ரெண்ட்ஸ் கிட்ட புலம்பறீங்களே,, எவ்ளோ சந்தோஷம் தரும் செலவுன்னு உணர்ந்து தானே இருக்கீங்க? போதுமே உங்க  இமாஜினேஷன்….பெரிசாய் ஏதோ வந்துடுச்சு போல இருக்குன்னு ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரி வரைக்கும் போயிடாதீங்க. இந்த வாரக் கடைசிக்குள்  பட்டுப் போல் சரியாகி கிண்ணுன்னு எழுந்து உட்கார்ந்துடுவீங்க. காசு மேல காசு வந்து கொட்டுகிற நேரமிது. என்றைக்கோ உழைத்த உழைப்பெல்லாம் இன்றைக்கு வங்கி இருப்பாக உருமாறி உட்காரும்.

விருச்சிகம்

சற்று அல்லாட்டமும் செலவுகளும் இருந்தாலும் சமாளிச்சு நிமிர்ந்துடு வீங்க. கணவருக்குப் பதவியும் சம்பளமும் உயரு. உங்களுக்கும் வெளி நாட்டு ட்ரிப்பும் இருக்கு. அலுவலகத்தில் கடந்த சில வருடங்களாக ஏற்பட்டிருந்த பிரச்சினைகள் எல்லாம் துண்டைக் காணோம் துணியைக் காணோம் என்று ஓடி ஒளிஞ்சுக்கும் மேடம். போன வருஷம் இருந்த டென்ஷன் கள் இனி இல்லை, அரியர் தொகைகள் உங்களை நாடி ஓடி வரும். எப்பப்பார்த்தாலும் எதுக்கு டென்ஷன்.. சோகம்? உங்க குழந்தைகள் பற்றி நீங்க சந்தோஷப்படும்படியான செய்தி உண்டு. மெயில் பாக்ஸ் வழியா சந்தோஷம் வழிந்து குடும்பத்தை நிரப்பப் போகுது. அலுவலகத்தில் வெளியூர்ப் பயணம் அனுப்புவாங்க. வெற்றி வீரராய் (வீராங்கனையாய்?) திரும்பி வாருங்கள். சிறு சிறு டென்ஷன்களை குப்பை லாரிக்கு அனுப்புங்க.

தனுசு

வெளிநாட்டுப் பயணம் நிர்ணயமாகும். சாப்பிட நேரமில்லை. தூங்க நேரம் இல்லைன்னு அலவலகத்தில் வேலை அழுத்தும். (இல்லைன்னா லும் அலுவலகத்தில் என்றைக்குத் தூங்கியிருக்கீங்க!) மம்மி கூட சண்டை. டாடி கூட சண்டை. நண்பர்கள் கூட சண்டை. கத்திச் சண்டை. கத்தாமல் சண்டை. எதுக்குங்க இதெல்லாம். கின்னஸ்? உழைப்புக்கேத்த ஊதியம் இல்லைன்னு டென்ஷனா, இதோ சரியாப்போகப் போகுதே. அதென்ன அவ்ளோ அகல வாயச்சவடால்? கொஞ்ச நாளைக்கு வாயை செலோர் டேப் போட்டு ஒட்டிக்குங்க. யாருக்காவது ஹலோ சொன்னால்கூட பகைச்சுக்க வாய்ப்பு இருக்கு. நீங்க ஹல்லோவோட நிறுத்தப் போறதில்லை. கண்டபடி பேசத் தோன்றும். வேண்டாமே. ப்ளீஸ். அப்புறம் அவங்க வருத்தப்படுவாங்களோ இல்லையோ…கட்டாயமாய் நீங்க ஃபீல் பண்ணுவீங்க.

மகரம்

சிஸ்டர்ஸ் மற்றும் சகோதரர்கள் அனுசரணையா இருப்பங்க.. பல காலம் முடங்கியிருந்த வியாபாரம் சோம்பல் முறிச்சு எழுந்து சந்தோஷ நடனத்துக்குத் தயாராய் இருக்கு. நீங்களும் அதற்கு சரியாய் ஈடு கொடுக்க ணும். எழுமின். விழிமின். சின்னப் பயணம் முதல் பெரிய பயணம் வரை மாற்றி மாற்றி இருக்கும். ஒவ்வென்றும் லாபம் அருளும். பிள்ளையாரை பின்பற்றி வணங்குங்க, கிரிக்கெட் விளையாடுங்க.. டென்னிஸ் விளையா ங்க… உடனுக்கு உடன் வேறு வேறு வேலை மாறுவதைப் பொழுது போக்கு மாதிரியோ விளையாட்டுப் போலவே செய்யாதீங்க. கணவரோடு /மனைவியோட உளுஉளுவாக் கட்டிக்குக்கூட சண்டை வேண்டாம். மம்மி பற்றி நீங்கள் பட்ட கவலைகள் கற்பூரம் மாதிரிக் காணாமல் போயிருக்குமே! வெளியூர்ப் பயணங்கள் செல்வதாக இருந்தால் நன்றாகத் திட்டமிடுங்கள்.

சந்திராஷ்டமம் : 10.03.2017 முதல் 12.03.2017 வரை

கும்பம்

கணவருக்கும் உங்களுக்கும் கொஞ்ச நாளாய் ஃபைட்டிங் ஃபைட்டிங். விட்டுக் கொடுத்துடுங்க ளேன்? தட்டிக் கொடுத்து வேலை வாங்கப் பழகுங்க. பணம் புழங்கும் இடத்தில் வேலை பார்க்கறவங்க கண்ணை விரிச்சுக்கிட்டுப் பணம் எண்ண வேண்டும். கார் வாங்கப் போறீங்க. வீடு வாங்கவும் உகந்த சமயம் இது. பயணம் போவீங்க. நிறையப் பயணம்! பெரிய பயணம்! ஆரோக்யமான உணவை சுகாதாரமான இடத்துல சாப்பிடுங்க… எனில் நோ பிரச்சினைஸ்.

சந்திராஷ்டமம் : 12.03.2017 முதல் 15.03.2017வரை

மீனம்

ஹப்பாடான்னு ரிலாக்ஸ் பண்ணுவீங்க. வீட்டில் யாருக்கோ திருமணம் நடக்கலைன்னு கவலைப் பட்டுக்கிட்டிருந்தீங்களே. கவலை தீர்ந்ததா? கணவர் வீட்டாரிடம் நல்ல பெயர் எடுப்பீங்க.எதற்கும் அவசரம் வேண்டாம். பதறாதீங்க. போனவை எல்லாம் வரும். திருமணத் தடை உடனடியாய் நீங்கும். அதை இதை சாப்பிட்டு ஆரோக்யத்துக்கு எதிரியாயிடாதீங்க. உடனே மேரேஜ் இதோ.. வந்தாச். வந்தாச். வேண்டாத விஷயங்களில் நிறைய கவனம் செலுத்தறீங்களே….மம்மி பற்றி அதிகப்படி கவனம் செலுத்துங்க. போற்றுவார் போற்றட்டும் மற்றவர்கள் எப்படி வேண்டுமானாலும் தூற்றட்டும். நீங்கள் மட்டும் வாயைத்திறந்து எதுவும் பேசிவிடாதீர்கள். காரணம் உங்களுக்கு விடிகிறபோது விளங்கும். உங்கள் புத்திசாலித்தனத்திற்கும் நிர்வாகத் திறமைக்கும் கொஞ்சமும் பொருந்தாத சில குணங்கள் உங்களிடம் உள்ளன. தூக்கி எறியுங்க.

சந்திராஷ்டமம் : 15.03.2017 முதல் 17.03.2017 வரை

More articles

Latest article