மேஷம்

வேலையில் இருந்த பிராப்ளம்ஸ்லாம் முடிவுக்கு வரும் என்றாலும் கவனமும் நிதானமும் தேவை. பேச்சில் நிதானம் வெரி மச் அவசியம். அவசரப்பட்டு பிராமிஸ் செய்து மாட்டிக்க வேணாம். குடும்பத்துல உள்ளவங்களுடன் பேசும் போது நிதானம் தேவை விட்டுக்கொடுத்து செல்லவும். பிசினஸ்ல பெரிய அளவில் முதலீடுகள் செய்ய வேணாங்க. கூடுதல் விழிப்புணர்வு தேவை. ப்ளீ’ஸ். பி கேர்ஃபுல். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வு சேரும். தடைபட்டு வந்த காரியங்கள் தடைநீங்கி நல்லமுறையில் நடக்கும். பெண்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் தேர்ச்சியும் முன்னேற்றமும் காண்பார்கள்.தொட்டது துலங்கும் வாரம். விரயம் அதிகரிக்கும். நூதனப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீங்க. தொழிலில் புதிய பங்குதாரர்களைச்சேர்க்க முன்வருவீங்க. அம்மன்/ துர்க்கை/ அம்பாளைச் செவ்வாய்க் கிழமை சேவியுங்கள். மன நிம்மதி கிடைக்கும்.

சந்திராஷ்டமம் : பிப்ரவரி 13 முதல் பிப்ரவரி 15 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள்

ரிஷபம்

நீங்க கவலைப்பட்ட விஷயங்க ஒவ்வொண்ணா சரியாகி நிம்மதி தரும். எஸ்பெஷலி, பேரன்ட்ஸ்க்கு உடல்நலம் சீராகும். செய்யும் காரியங்களில் முன்னேற்றம் காணப்பட்டாலும், நிதானமாக செயல்படுங்க. உத்தியோகஸ்தர்கள், உயரதிகாரிகளின் விருப்பப்படி முக்கியமான வேலை ஒண்ணை செய்து முடிச்சு அவங்க கிட்ட நல்ல பெயர் எடுப்பீங்க. தொழிலில் லாபம் ஏற்பட்டாலும், வேலைப்பளு அதிகரிக்கும். குடும்பத்துல சிறுசிறு தொல்லைகள் ஏற்பட்டாலும், அவற்றுக்கு நல்ல தீர்வு காண்பீங்க. உடல்நலம் முன்பைவிட நல்லாயிருக்குங்க. உங்க வாழ்க்கைல சில நல்ல செய்திகளையும் பெறுவீங்க. உங்க மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வீங்க. ஃபைனான்ஸ் விஷயங்கள்லயும் நல்ல முன்னேற்றம் இருக்குங்க. பணத்தை நீங்க இரட்டிப்பாக்க முடியும். இந்த வாரம் வியாழக்கிழமை, தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக் கடலை மாலை சூட்டுங்கள்.

சந்திராஷ்டமம் : பிப்ரவரி 15 முதல் பிப்ரவரி 17 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள்

மிதுனம்

இந்த வாரம் நீங்க பயணத்திலிருந்து பயனடைவீங்க. உங்க பொழுதுபோக்குக்காக அதிகப் பணம் செலவழிப்பீங்க. தட் மீன்ஸ் சூப்பரா செலவு செய்வீங்க. டோன்ட் ஒர்ரி.. நிறையப் பணம் வரவும் செய்யும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். பெண்களுக்கு இழுபறியாக இருந்த சில காரியங்கள் நன்றாக நடந்து முடியும். உயர்கல்வி கற்கும் மாணவர்கள் மிகவும் கவனமுடன் படிப்பது நல்லது சொல்லைச் செயலாக்கிக் காட்டும் வாரம். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். எதிர்பார்த்த சலுகைகள் எளிதில் கிடைக்கும். உறவினர்களால் நன்மை ஏற்படும். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். நண்பர்களின் ஆதரவோடு, பொருளாதார வளர்ச்சி பெற்று மகிழ்வீங்க. உத்தியோகஸ்தர்கள், அலுவலகத்தில் கிடைக்கும் புதிய பொறுப்புகளால் பெருமிதம் அடைவீங்க. தொழில் செய்யறவங்களுக்கு, அந்தத் துறையில் வளர்ச்சி ஏற்படும். குடும்பத்தில் அன்பும், அமைதியும் இருக்கும். சுபகாரிய முயற்சி வெற்றிபெறும். இந்த வாரம் சனிக்கிழமை, சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபமிடுங்கள்

கடகம்

முயற்சிகளில் உண்டாகியிருந்த தடை தாமதங்கள் நீங்கி வேகம் பிடிக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். பிள்ளைகள் வழியில் இருந்த பிராப்ளம்ஸ் தீரும். முக்கிய நபர்களின் நட்பு உண்டாகும்.யோசித்துச் செயல்பட வேண்டிய வாரம். எந்தவொரு காரியத்தையும் எடுத்தோம், முடித்தோம் என்று செய்ய இயலாது. ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. விரயங்கள் குறையும். தனவரவுகள் எதிர்பார்த்ததைவிடவும் சற்றுத் தாமதமாக வந்து சேரும். உத்தியோகஸ்தர்கள், பணிகளில் கவனக்குறைவாக இருந்தால், உயரதிகாரிகளின் கேள்விக்கு ஆளாவீங்க. தொழில் செய்பவர், வாடிக்கையாளர்களின் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாமல் அவதிப்பட நேரிடும். குடும்ப உறவுகளிடையே சிறுசிறு சலசலப்புகள் தோன்றி மறையும். இந்த வாரம் செவ்வாய்க்கிழமை, நவக்கிரக சன்னிதியில் உள்ள அங்காரகனுக்கு நெய் தீபம் ஏற்றுங்கள்.

சிம்மம்

யோகமான வாரம். மன உறுதியோடு செயல்பட்டு மற்றவர்களை ஆச்சரியப்பட வைப்பீங்க. தொலைதூரத்திலிருந்து வரும் தகவல் குட் நியூஸ்னு சந்தோஷப்பட வைக்குங்க. நவீனப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீங்க. காரியங்கள் அனைத்திலும் முன்னேற்றமான பலன்களைப் பெறுவீங்க. உத்தியோகஸ்தர்கள், சக ஊழியர்களின் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. பிசினஸ் பீப்பிள், உற்சாகத்துடன் பணியாற்றினாலும், பலன்கள் தாமதமாகும். பொருளாதார முன்னேற்றமும், புதிய பொருள் வரவும் இல்லத்தில் மகிழ்வைத் தரும். செய்யும் முயற்சிகளில் முன்னேற்றமான பலன்களைப் பெறுவீங்க. உத்தியோகஸ்தர்கள், சக ஊழியர்களின் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. பிசினஸ் பீப்பிள், உற்சாகத்துடன் பணியாற்றி நல்ல பலனைப் பெறுவீங்க. இந்த வாரம் சனிக்கிழமை, விநாயகருக்கு அருகம்புல் மாலை சூட்டுங்கள்.

கன்னி

வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி நீங்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் தீர்ந்து நல்ல நிலை உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு செலவு குறையும். இடமாற்றம் உண்டாகலாம்.  நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும் வாரம். சமுதாயப் பணிகளில் அதிக ஆர்வம் காட்டுவீங்க. வாழ்க்கைத் துணை வழியே வந்த பிரச்சினை அகலும். வெளியுலகத் தொடர்பு விரிவடையும். உத்தியோகஸ்தர்கள், சுறுசுறுப்பாக பணியாற்றி, உயரதிகாரியின் பாராட்டைப் பெறுவர். தொழில் செய்பவர்கள், புதிய முறைகளைக் கையாண்டு வாடிக்கையாளரை திருப்திப்படுத்துவர். இல்லத் தலைவியின் சாமர்த்தியத்தால், குடும்பம் சீராக நடைபெறும். இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை, சூரியனுக்கு நெய் தீபமிட்டு வழிபாடு செய்யுங்கள்.

துலாம்

வீண் விவாதங்களால் அடுத்தவர்களுடன் ஏற்பட்டிருந்த தகராறு நல்ல முறையில் சரியாகும். உணர்ச்சி வசப்படுவதைத்தவிர்த்து உற்சாகத்துடன் செயல்பட வேண்டிய வாரம். பிள்ளைகளின் நலன் கருதி முக்கிய முடிவெடுப்பீங்க. பாதியில் நின்ற கட்டிடப்பணியை மீதியும் தொடருவீங்க. நீங்க செய்யும் காரியங்களுக்கு, நண்பர்களும், உறவினர்களும் ஆதரவளிப்பார்கள். குடும்பத்தில் நிலவிய  சிறுசிறு பிராப்ளம்ஸ் மறையும். இந்த வாரம் வெள்ளிக்கிழமை, துர்க்கைக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். பொருளாதார முன்னேற்றமும், புதிய பொருள் வரவும் இல்லத்தில் மகிழ்வைத் தரும். உத்தியோகஸ்தர்கள், அலுவலகப் பதிவேடுகளைக் கவனமாகப் பாதுகாப்பது அவசியம். தொழில் செய்பவர்கள், வாடிக்கையாளரின் பாராட்டைப் பெறுவீங்க. குடும்பத்தில் அமைதி நிலவும். குலதெய்வ வழிபாட்டுக்காக குடும்பத்துடன் செல்ல திட்டமிடுவீங்க. இந்த வாரம் திங்கட்கிழமை, சிவபெருமானுக்கு நெய் விளக்கு ஏற்றுங்கள்.

விருச்சிகம்

வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். தொழில், வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செய்வது வீண் சிக்கலில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க உதவும். வாரக்கடைசியில் மனக்கலக்கம் நீங்கும் வாரம். கொடுக்கல்-வாங்கல்களில் கூடுதல் கவனம் தேவை. இந்த வாரம் எதிர்பாராத சில நன்மைகள் ஏற்படும். சுப காரணங்களுக்காக திடீர் பணத்தேவை உண்டாகலாம். முன்யோசனையுடன் செயல்படுவது நல்லது. இடமாற்றம் உண்டாகலாம். உத்தியோகத்தில், உயரதிகாரியின் அறிவுரைப்படி புதிய பணியை செய்வீங்க. தொழிலில் ஈடுபடுபவர்கள், முன்னேற்றம் அடைய சில காலம் பொறுமையாக இருப்பது அவசியம். இல்லத்தில் சுப காரியங் களுக்கு செலவு செய்ய நேரிடும். இந்த வாரம் வெள்ளிக்கிழமை, துர்க்கைக்கு நெய் தீபம் ஏற்றிவைத்து வணங்குங்கள்.

தனுசு

பயணத்தால் லாபமும் நன்மையும் ஏற்படும். மற்றவர்களால் செய்ய முடியாத காரியத்தைச் செய்வீங்க. உத்தியோகஸ்தர்களில் சிலருக்கு பதவி உயர்வும், விரும்பிய இடமாற்றமும் கிடைக்கலாம். தொழில் செய்பவர்களுக்கு, லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் பண வரவும், ஒற்றுமையும் இருக்கும். கடன் தொல்லை பாதிப்பு ஏற்படுத்தாது. வழக்குகள் சாதகமாக முடியும். இந்த வாரம் வியாழக்கிழமை, தட்சிணாமூர்த்திக்கு வில்வ மாலை சூட்டி வழிபடுங்கள். உத்தியோகஸ்தர்களில் சிலர், நீண்ட காலமாக எதிர்பார்த்த சலுகைகளைப் பெறுவீங்க. தொழில் செய்பவர்கள், ஓய்வின்றி உழைப்பதால் வாடிக்கை யாளர்களை திருப்திப்படுத்துவீங்க. எனினும் தொழில் வியாபாரத்தில் நிலுவையில் இருந்த பணம் கைக்கு வந்து சேரும். பணவரவால் இல்லத்தில் சுப காரியங்களை நடத்துவீங்க. இந்த வாரம் சனிக்கிழமை, ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சூட்டி வழிபாடு செய்யுங்கள்.

மகரம்

பெண்களுக்கு இந்த வாரம் காரிய அனுகூலம் ஏற்படுவது  மட்டுமன்றி மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நீடிக்கும்.வரவும் செலவும் சமமாகும் வாரம். வருங்கால நலன் கருதி முக்கிய முடிவெடுப்பீங்க. குடும்பத்தினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வெளியூர் பயணமொன்றால் விரயம் ஏற்படும். உற்சாகத்துடன் வெற்றிப் படிகளில் முன்னேறி சாதனை படைப்பீங்க. ஸ்டூடன்ட்ஸ் கல்விக்காக வெளிநாடு கிளம்ப சான்ஸ் இருக்குப்பா. அதிலும் குறிப்பா நீங்க விரும்பிய பள்ளி அல்லது பல்கலைக்கழகத்தில் சீட் கிடைக்கப் போகுது பாருங்களேன். திடீர் அதிர்ஷ்டத்தின் மூலம் பண வரவு அதிகரிக்கும். வேலை விஷயமாக வெளியூர், வெளிநாடு பயணம் செய்ய வேண்டியிருக்கும். தொழில் விருத்தியடையும். வேலையில் இருந்த பிரச்னைகள் நீங்கும். யெஸ். குட். இந்த வாரம் சனிக்கிழமை விநாயகருக்கு மாலை சாற்றுங்கள்.

கும்பம்

புதிய வேலைக்கு முயற்சி செய்யலாம். தடைகளை தாண்டி சாதிப்பீங்க.  பண வருமானம் கூடும்.  பொருளாதார நெருக்கடிகள் நீங்கும். கடன் பிரச்னை தீரும்.  கிடைப்பதால் திருமணம் சுப காரியம் தொடர்பாக பேசலாம்.  அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. அலைச்சல் அதிகரிக்கும். வண்டி வாகனம் எதுவும் வாங்க முயற்சி செய்ய வேண்டாம் ஒத்திப்போடவும்.  வங்கி சேமிப்பு உயரும். மனதில் இனம் புரியாத பயம் உண்டாகும். வண்டி வாகனங்களில் செல்லும் போது வேகத்தை குறைத்து மெதுவாக செல்லவும். உங்களுடைய புதிய முயற்சிகளில் வெற்றிகள் கிடைக்க பொறுமையும் நிதானமும் தேவை. புதிய முயற்சிகள் இழுபறியாகவே நடைபெறும். உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனமும் அக்கறையும் தேவைப்படும். நம்பிக்கையுடன் முயற்சி செய்பவர்களுக்கு நினைத்தது நடக்கும். பெஸ்ட் விஷஸ். இந்த வாரம் புதன் கிழமை விஷ்ணு கோயிலில் துளசி மாலை சாற்றுங்கள்.

சந்திராஷ்டமம் : பிப்ரவரி 8 முதல் பிப்ரவரி 11 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள்

மீனம்

இந்த வாரம் திருமண சுப காரியங்கள் தொடர்பாக பேச வேண்டாம். வியாபாரம் சிறப்படையும். மனதில் குழப்பம் நீங்கித் தெளிவு உண்டாகும். அமைதியும் பொறுமையும் சகிப்புத்தன்மையும் தேவைப்படும். இந்த வாரம் பயணங்களுக்குச் சாதகமாக உள்ளது.  திடீர் அதிர்ஷ்டம் தேடி வரும். பண பிரச்னைகள் முடிவுக்கு வரும். வேலை விசயமாக அடிக்கடி வெளியூர் செல்லும் நிலை உண்டாகும். இருக்கிற வேலையை தக்க வைத்துக்கொள்ளுங்கள், வேலையை விட்டு விட்டு புதிய வேலைக்கு எதுவும் முயற்சி செய்ய வேண்டாம்.  வீட்டிற்குத் தேவையான அனைத்தையும் செய்வீர்கள். சகோதர உறவுகளுக்கு செலவு செய்வீர்கள். புதிய ஆர்டர்களைப் பெறுவதில் வெற்றி காண்பீர்கள். விளையாட்டுக்குப் பேசி வினையை விலைக்கு வாங்காதீர்கள். பெரிய மனிதர்கள் ஆசியால் வீட்டில் நல்ல காரியங்கள் நடக்கும். இந்த வாரம் செவ்வாய்க் கிழமை துர்க்கை கோயிலில் கருப்பு உளுந்து கொடுங்கள். வாழ்க்கை சிறக்கும்.

சந்திராஷ்டமம் : பிப்ரவரி 11 முதல் பிப்ரவரி 13 வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள்