வார ராசிபலன்: 1.10.2021  முதல்  7.10.2021 வரை! வேதாகோபாலன்

Must read

மேஷம்

யோகமான வாரம். மன உறுதியோடு செயல்பட்டு மற்றவர்களை ஆச்சரியப்பட வைப்பீங்க. தொலைதூரத்திலிருந்து வரும் தகவல் தொழிலுக்கு உறுதுணை புரியும். நவீனப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீங்க. காரியங்கள் அனைத்திலும் முன்னேற்றமான பலன்களைப் பெறுவீங்க. உத்தியோகஸ்தர்கள், சக ஊழியர்களின் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. பிசினஸ் பீப்பிள், உற்சாகத்துடன் பணியாற்றினாலும், பலன்கள் தாமதமாகும். பொருளாதார முன்னேற்றமும், புதிய பொருள் வரவும் இல்லத்தில் மகிழ்வைத் தரும். செய்யும் முயற்சிகளில் முன்னேற்றமான பலன்களைப் பெறுவீங்க. உத்தியோகஸ்தர்கள், சக ஊழியர்களின் விஷயங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. பிசினஸ் பீப்பிள், உற்சாகத்துடன் பணியாற்றி நல்ல பலனைப் பெறுவீங்க. இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை, விநாயகருக்கு அருகம்புல் மாலை சூட்டுங்கள்.

ரிஷபம்

இந்த வாரம் உங்களுக்கு எல்லா கஷ்டங்களும் நீங்கி நிம்மதி உண்டாகும். எதிர்ப்புகள் அகலும். முயற்சிகள் சாதகமான பலன் பெறும். ஆனால் வாகனங்களில் செல்லும் போதும் எந்திரங்களை கையாளும்போதும் தீ, மின்சாரம் ஆகியவற்றிலும் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. வீட்டில் சுபகாரியங்கள் நடக்கலாம். மேரேஜ் முயற்சிகள் கைகூடும்.துணிச்சலோடு செயல்பட்டு தொல்லைகளை அகற்றிக் கொள்ளும் வாரம். தொழில் தொடங்கும் திட்டங்களை நிறைவேற்றிக் கொள்வீங்க. குடும்பத்தில் கலகலப்பான சூழ்நிலை உருவாகும். புதிய திட்டங்கள் தீட்டி அதில் வெற்றியும் அடைவீங்க. தொழில் செய்பவர்களுக்கு, வேலைப்பளு அதிகரித்தாலும், வருமானம் சீராக இருக்காது. குடும்பத்தில் நிலவி வத்  சிறுசிறு பிரச்னைகள் மறையும். இந்த வாரம் வெள்ளிக்கிழமை, துர்க்கைக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். பொருளாதார முன்னேற்றமும், புதிய பொருள் வரவும் இல்லத்தில் மகிழ்வைத் தரும்.

மிதுனம்

குடும்ப வாழ்க்கையில் சுகமும், நிம்மதியும் கிடைக்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் விலகும். பார்ட்னருடன் இருந்த பிரச்சினைகள் தீர்ந்து வியாபாரம் வளர்ச்சி பெறும். உத்தியோகஸ்தர்கள் உயரதிகாரிகளின் ஆலோசனைப்படி அவசரப் பணிஒன்றை செய்து பாராட்டுப் பெறுவீங்க. இல்லத்தில் இனிய சம்பவங்கள் நடைபெறும் வாரம். எதிர்பார்ப்புகள் அனைத்தும் நிறைவேறும். வி.ஐ.பி.க்களின் சந்திப்பு உண்டு. புதிய வாகனம் வாங்கும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். முக்கியமான பிரச்சினை ஒன்றில், நல்ல முடிவெடுப்பீங்க. உத்தியோகஸ்தர்கள், பணியில் ஏற்பட்ட தவறுக்காக உயர் அதிகாரியின் கோபத்திற்கு ஆளாக நேரிடும். தொழில் செய்பவர்கள், வாடிக்கையாளரை திருப்திப்படுத்த ஓய்வின்றி உழைக்க வேண்டியதிருக்கும். குடும்பம் நன்றாக நடந்தாலும், சிறுசிறு பிரச்சினைகளும் வரத்தான் செய்யும். இந்த வாரம் புதன்கிழமை, பெருமாளுக்கு துளசி மாலை சூட்டி வணங்குங்கள்.

கடகம்

எவ்வளவு சிக்கலான ஒரு விஷயத்திலும் குழப்பம் இல்லாமல் சட்டென்று ஒரு முடிவு எடுப்பதன்மூலம் உங்களுக்கும் பணியிடத்துக்கும் நிம்மதியும் பெருமையும் உண்டாகும். உடன்பிறப்புகள் வழியில் ஒத்துழைப்பு கிடைக்கும் வாரம். நீண்டநாள் ஆசை நிறைவேறும். வழக்குகள் சாதகமாகும். சொத்து சம்பந்தமாக எடுத்த முயற்சி வெற்றி பெறும். நட்பால் நல்ல காரியம் நடைபெறும். இந்த வாரம் வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீங்க. மேரேஜ்ம் தொடர்பான முயற்சிகள் கைகூடும்உறவினர்களும், நண்பர்களும் தக்க சமயத்தில் ஆதரவாக இருப்பார்கள். உத்தியோகஸ்தர்கள், அலுவலகப் பதிவேடுகளைக் கவனமாகப் பாதுகாப்பது அவசியம். தொழில் செய்பவர்கள், வாடிக்கையாளரின் பாராட்டைப் பெறுவீங்க. குடும்பத்தில் அமைதி நிலவும். குலதெய்வ வழிபாட்டுக்காக குடும்பத்துடன் செல்ல திட்டமிடுவீங்க. இந்த வாரம் திங்கட்கிழமை, சிவபெருமானுக்கு நெய் விளக்கு ஏற்றுங்கள்.

சிம்மம்

வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். பணவரத்து அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி நீங்கும். தொழில் வியாபாரத்தில் இருந்த பிரச்சினைகள் தீர்ந்து நல்ல நிலை உண்டாகும். உத்தியோகஸ்தர்களுக்கு செலவு குறையும். இடமாற்றம் உண்டாகலாம்.  நண்பர்கள் மூலம் நல்ல தகவல் கிடைக்கும் வாரம். சமுதாயப் பணிகளில் அதிக ஆர்வம் காட்டுவீங்க. வாழ்க்கைத் துணை வழியே வந்த பிரச்சினை அகலும். வெளியுலகத் தொடர்பு விரிவடையும். உத்தியோகஸ்தர்கள், சுறுசுறுப்பாக பணியாற்றி, உயரதிகாரியின் பாராட்டைப் பெறுவர். தொழில் செய்பவர்கள், புதிய முறைகளைக் கையாண்டு வாடிக்கையாளரை திருப்திப்படுத்துவர். இல்லத் தலைவியின் சாமர்த்தியத்தால், குடும்பம் சீராக நடைபெறும். இந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை, சூரியனுக்கு நெய் தீபமிட்டு வழிபாடு செய்யுங்கள்.

கன்னி

கொடுக்கல் வாங்கலில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. பெண்களுக்கு மேரேஜ்ம் கைகூடும். மாணவர்கள் தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற அதிக நேரம் படிப்பது நல்லது. வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதும் நன்மை தரும்.நண்பர்கள் உங்களுக்கு எதிராக செயல்பட்டதால் ஏற்பட்ட மன இறுக்கத்தை அவரே விளக்கமளித்து நீக்குவார். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும் வாரம். தொழில் ரீதியாக விலகிச் சென்ற கூட்டாளிகள் மீண்டும் வந்து சேரலாம். உடல்நலம் சீராகி உற்சாகப்படுத்தும். வாங்கல்- கொடுக்கல்கள் ஒழுங்காகும். பூர்வீக சொத்துக்களைப் பெற, பெரியவர் களின் உதவியை நாடுவீங்க. உத்தியோகஸ்தர்கள் பதவி உயர்வு பெற்று வெளியிடங் களுக்கு மாறுதலாக வாய்ப்புள்ளது. தொழில் சீராக நடை பெற்றுவரும். எதிர்பார்க்கும் லாபம் கிடைக்கும். குடும்பத்தில் தனவரவு இருக்கும். தடைபட்டிருந்த சுபகாரியங்களை நடத்த முயற்சிப்பீங்க. இந்த வாரம் புதன்கிழமை, பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபட்டு வாருங்கள்.

துலாம்

இந்த வாரம் எதிர்பாராத சில நன்மைகள் ஏற்படும். சுப காரணங்களுக்காக திடீர் பணத்தேவை உண்டாகலாம். முன்யோசனையுடன் செயல்படுவது நல்லது. இடமாற்றம் உண்டாகலாம். வீண் விவாதங்களால் அடுத்தவர்களுடன் ஏற்பட்டிருந்த தகராறு நல்ல முறையில் சரியாகும். உணர்ச்சி வசப்படுவதைத்தவிர்த்து உற்சாகத்துடன் செயல்பட வேண்டிய வாரம். பிள்ளைகளின் நலன் கருதி முக்கிய முடிவெடுப்பீங்க. பாதியில் நின்ற கட்டிடப்பணியை மீதியும் தொடருவீங்க. நீங்க செய்யும் காரியங்களுக்கு, நண்பர்களும், உறவினர்களும் ஆதரவளிப்பார்கள். உத்தியோகத்தில், உயரதிகாரியின் அறிவுரைப்படி புதிய பணியை செய்வீங்க. தொழிலில் ஈடுபடுபவர்கள், முன்னேற்றம் அடைய சில காலம் பொறுமையாக இருப்பது அவசியம். இல்லத்தில் சுப காரியங் களுக்கு செலவு செய்ய நேரிடும். இந்த வாரம் வெள்ளிக்கிழமை, துர்க்கைக்கு நல்லெண்ணெய் தீபம் ஏற்றிவைத்து வணங்குங்கள்.

விருச்சிகம்

முயற்சிகளில் உண்டாகியிருந்த தடை தாமதங்கள் நீங்கி வேகம் பிடிக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும். பிள்ளைகள் வழியில் இருந்த பிரச்சினைகள் தீரும். முக்கிய நபர்களின் நட்பு உண்டாகும்.யோசித்துச் செயல்பட வேண்டிய வாரம். எந்தவொரு காரியத்தையும் எடுத்தோம், முடித்தோம் என்று செய்ய இயலாது. ஆரோக்கியத்தில் அக்கறை காட்டுவது நல்லது. விரயங்கள் குறையும். தனவரவுகள் எதிர்பார்த்ததைவிடவும் சற்றுத் தாமதமாக வந்து சேரும். உத்தியோகஸ்தர்கள், பணிகளில் கவனக்குறைவாக இருந்தால், உயரதிகாரிகளின் கேள்விக்கு ஆளாவீங்க. தொழில் செய்பவர், வாடிக்கையாளர் களின் தேவையைப் பூர்த்தி செய்ய முடியாமல் அவதிப்பட நேரிடும். குடும்ப உறவுகளிடையே சிறுசிறு சலசலப்புகள் தோன்றி மறையும். இந்த வாரம் செவ்வாய்க்கிழமை, நவக்கிரக சன்னிதியில் உள்ள அங்காரகனுக்கு நெய் தீபம் ஏற்றுங்கள்.

தனுசு

வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். தொழில், வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செய்வது வீண் சிக்கலில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க உதவும். வாரக்கடைசியில் மனக்கலக்கம் நீங்கும் வாரம். கொடுக்கல்-வாங்கல்களில் கூடுதல் கவனம் தேவை. பணப்பற்றாக்குறை ஏற்படும். விலைஉயர்ந்த பொருட்களை விற்க நேரிடலாம். பயணத்தால் தொல்லையுண்டு. மற்றவர்களால் செய்ய முடியாத காரியத்தைச் செய்வீங்க. உத்தியோகஸ்தர்களில் சிலருக்கு பதவி உயர்வும், விரும்பிய இடமாற்றமும் கிடைக்கலாம். தொழில் செய்பவர்களுக்கு, லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் பண வரவும், ஒற்றுமையும் இருக்கும். கடன் தொல்லை பாதிப்பு ஏற்படுத்தாது. வழக்குகள் சாதகமாக முடியும். இந்த வாரம் வியாழக்கிழமை, தட்சிணாமூர்த்திக்கு வில்வ மாலை சூட்டி வழிபடுங்கள்.

சந்திராஷ்டமம்: செப்டம்பர் 30 முதல் அக்டோபர் 2 வரை

மகரம்

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கலாம். பெண்களுக்கு இழுபறியாக இருந்த சில காரியங்கள் நன்றாக நடந்து முடியும். உயர்கல்வி கற்கும் மாணவர்கள் மிகவும் கவனமுடன் படிப்பது நல்லது சொல்லைச் செயலாக்கிக் காட்டும் வாரம். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். எதிர்பார்த்த சலுகைகள் எளிதில் கிடைக்கும். உறவினர்களால் நன்மை ஏற்படும். துணிவும், தன்னம்பிக்கையும் கூடும். நண்பர்களின் ஆதரவோடு, பொருளாதார வளர்ச்சி பெற்று மகிழ்வீங்க. உத்தியோகஸ்தர்கள், அலுவலகத்தில் கிடைக்கும் புதிய பொறுப்புகளால் பெருமிதம் அடைவீங்க. தொழில் செய்பவர்களுக்கு, அந்தத் துறையில் வளர்ச்சி ஏற்படும். குடும்பத்தில் அன்பும், அமைதியும் இருக்கும். சுபகாரிய முயற்சி வெற்றிபெறும். இந்த வாரம் சனிக்கிழமை, சனி பகவானுக்கு நல்லெண்ணெய் தீபமிடுங்கள்.

சந்திராஷ்டமம்: அக்டோபர் 2 முதல் அக்டோபர் 5 வரை

கும்பம்

பெண்களுக்கு இந்த வாரம் காரிய அனுகூலம் ஏற்படுவது  மட்டுமன்றி மதிப்பும், மரியாதையும் அதிகரிக்கும். குடும்பத்தில் அமைதியும் மகிழ்ச்சியும் நீடிக்கும்.வரவும் செலவும் சமமாகும் வாரம். வருங்கால நலன் கருதி முக்கிய முடிவெடுப்பீங்க. குடும்பத்தினர்களை அனுசரித்துச் செல்வது நல்லது. வெளியூர் பயணமொன்றால் விரயம் ஏற்படும். உற்சாகத்துடன் வெற்றிப் படிகளில் முன்னேறி சாதனை படைப்பீங்க. உத்தியோகஸ்தர்களில் சிலர், நீண்ட காலமாக எதிர்பார்த்த சலுகைகளைப் பெறுவீங்க. தொழில் செய்பவர்கள், ஓய்வின்றி உழைப்பதால் வாடிக்கையாளர்களை திருப்திப்படுத்துவீங்க. எனினும் தொழில் வியாபாரத்தில் நிலுவையில் இருந்த பணம் கைக்கு வந்து சேரும்.பணவரவால் இல்லத்தில் சுப காரியங்களை நடத்துவீங்க. இந்த வாரம் சனிக்கிழமை, ஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சூட்டி வழிபாடு செய்யுங்கள்.

சந்திராஷ்டமம்: அக்டோபர் 5 முதல் அக்டோபர் 7 வரை

மீனம்

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு சம்பள உயர்வு சேரும். தடைபட்டு வந்த காரியங்கள் தடைநீங்கி நல்லமுறையில் நடக்கும். பெண்களுக்கு பணப்புழக்கம் அதிகரிக்கும். மாணவர்கள் கல்வியில் தேர்ச்சியும் முன்னேற்றமும் காண்பார்கள்.தொட்டது துலங்கும் வாரம். விரயம் அதிகரிக்கும். நூதனப் பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீங்க. தொழிலில் புதிய பங்குதாரர்களைச்சேர்க்க முன்வருவீங்க. மாற்று மருத்துவத்தால் உடல்நலம் சீராகும். செய்யும் காரியங்களில் முன்னேற்றம் காணப்பட்டாலும், நிதானமாக செயல்படுங்கள். உத்தியோகஸ்தர்கள், உயரதிகாரிகளின் விருப்பப்படி முக்கியமான வேலையை செய்வீங்க. தொழிலில் லாபம் ஏற்பட்டாலும், வேலைப்பளு அதிகரிக்கும். குடும்பத்தில் சிறுசிறு தொல்லைகள் ஏற்பட்டாலும், அவற்றுக்கு நல்ல தீர்வு காண்பீங்க. இந்த வாரம் வியாழக்கிழமை, தட்சிணாமூர்த்திக்கு கொண்டைக் கடலை மாலை சூட்டுங்கள்.

More articles

Latest article