சென்னை

மிழக ஊரக உள்ளாட்சித் தேர்தல் குறித்துத் தேர்தல் ஆணையர் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரைகள் அளித்துள்ளார்.

கடந்த ஆட்சியில் பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் உச்சநீதிமன்ற உத்தரவுக்கிணங்க தற்போது நடைபெற உள்ளன.  இரண்டு கட்டமாக நடைபெற உள்ள இந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு தற்போது தேர்தல் பிரச்சாரம் தீவிரமாக நடந்து வருகிறது.  இந்த தேர்தல் தொடர்பாக மாநில தேர்தல் ஆணையர் ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மாநில தேர்தல் ஆணையர் பழனிக்குமார் மற்றும் 37 மாவட்ட ஆட்சியர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் கலந்துக் கொண்டனர்.  இந்த கூட்டத்தில் வாக்குச் சாவடிகளில் கொரோனா நெறிமுறைகள் கடைப்பிடிப்பதை உறுதி சேயுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும் வாக்காளர்களுக்கு வாக்குச் சாவடி சீட்டுக்கள் விநியோகம் செய்வது குறித்தும் மாதிரி நன்னடத்தை விதிகளைத் தவறாது கடைப்பிடிக்க வேண்டும் எனவும் அறிவுரைகள் அளிக்கப்பட்டன.  பதற்றமான வாக்குச் சாவடிகளில் பாதுகாப்பு அதிகரிப்பு மற்றும் வாக்கு எண்ணும் மையம், பாதுகாப்பு அறைகளில் சிசிடிவி காமிரா பொருத்த வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.