மேஷம்

இசை ஆர்வத்தால் சங்கீத சபா களுக்குச் சென்று இசை கேட்டு மகிழ்வீங்க. வீட்ல அமைதியும், நிம்மதியும் நிலவும். மனைவியின் -கணவரின் உடன் பிறந்தவங்க பேச்சைக் கேட்டு நடக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். அதனால என்னங்க. சந்தோஷமான சமாசாரம்தான். அவசியமற்ற, அலைச்சல் தரும் பயணங்கள் ஏற்படும். நெருங்கின சொந்தக்காரங்க வீட்ல திருமண வைபவங்களை எதிர்பார்க்கலாம். குடும்பத்தில மகிழ்ச்சி பொங்கும். சரளமான பண வரவால் சந்தோஷம் அடைவீங்க. நம்பிக்கையோட உங்க பணிகளில் ஈடுபடுவீங்க. ஃப்ரெண்ட்ஸ்க்கும் உற்றார் உறவினர்களுக்கும் தேவையான உதவிகளைச் செய்து மன நிறைவு அடைவீங்க. பழைய கடன்களும் வசூலாகும். எதிரிகளோட பலம் குறையும். வீடு, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும்.

ரிஷபம்

ஒங்க ஹஸ்பெண்ட் அல்லது ஒய்ஃப் கூட உங்களுக்கு அன்யோன்யம் அதிகரிக்கும். பெரியவங்க ஆசியால நீங்க எடுக்கும் அனைத்து முயற்சிங்களும் வெற்றி அடையும். அக்கம்பக்கத்து வீட்டுக்காரங்க, நண்பர்கள் மற்றும் சகோதரரால் உங்க பிரச்சனைங்களுக்கு ஒரு முடிவு வரும். எதிர்பாராத இடத்தில இருந்து வந்த பணவரவால் மனம் மகிழும். அழகிய ஆடை ஆபரணங்கள் வாங்குவீங்க. இந்த வாரம் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் கிடைக்கும். திட்டமிட்டு எதையும் செய்து முடிச்சு வெல்வீங்க. மனதில் இருந்த வீண்கவலைகள் நீங்கும். மற்றவர்கள் உங்களிடம் கொடுத்த எந்த வேலைகளையும் சிறப்பா செய்து முடிப்பீங்க. தொழில் வியாபாரம் முன்னேற்றம் காணக் கொஞ்சம் கடுமையா உழைக்க வேண்டி இருக்கும். இட்ஸ் ஓகே. ரிசல்ட் சூப்பரா இருக்குமேங்க. உங்க மம்மி ஒங்களுக்கு ஒரு ஹாப்பி நியூஸ் சொல்லுவாங்க.

மிதுனம்

அதிகாரிங்களோட நட்பால ஆதாயம் பெறுவீங்க. நீங்க எடுக்கற அத்தனை முயற்சிகளும் வெற்றி பெறும். சிலருக்கு உடலில் சுறுசுறுப்பு அதிகரிக்கும் ; சோம்பல் காணாமல் போகும். மத்தவங்களோட முன்னேற்றத்தைப் பார்த்துப் பொறாமை கொள்ளாம இருக்கறது நல்லது. புதிய தொழில் முயற்சிகள் கவர்மென்ட் உதவியுடன் வெற்றி பெறும். சிலருக்கு டாடி அல்லது மம்மி காஸ்ட்லியான வாகனங்கள் வாங்கிக் கொடுப்பாங்க. பார்ட்னர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் எதிர்பார்த்தபடி பணிகள் முடியாமல் மனசங்கடத்திற்கு ஆளாகியிருந்த நிலை மாறும். குடும்பத்துல இருப்பவங்களின் தேவைகளை பூர்த்தி செய்ய பாடுபட்டு, அதில் வெற்றி கண்டு மகிழ்ச்சியடைவீங்க. குடும்பத்துல இதமான சூழ்நிலை காணப்படும். ரிலேடிவ்ஸ் வருகையும் அதனால் நன்மையும் இருக்கும். கணவன், மனைவிக் கிடையில் நெருக்கம் அதிகரிக்கும்.

கடகம்

பிரபலமானவங்களோட ஆறுதலும், அன்பும் கெடைக்கும். புத்தக வெளியீடு மாதிரியான தொழில்களில் முன்னேற்றம் ஏற்பட்டு, ஆதாயம் அதிகரிக்கும். உத்தியோகம் மற்றும் தொழிலில் அபிவிருத்தி ஏற்படும். இந்த வாரம் சிலருக்குத் திருமணப் பேச்சுக்கள் ஆரம்பமாகும். சந்ததி விருத்தி ஏற்படும்.  மனோதைரியம் அதிகரிப்பதன் காரணமாக எவரையும் எதிர்த்து வெற்றி பெறுவீங்க. தொழிலில் எதிர்பார்த்த படி பல வழிகளிலும் தனவரவு அதிகரிக்கும். தந்தை வர்க்கத்தினரால் நன்மைகள் பல ஏற்படும்  அரசுப் பணியாளர்களுக்கு புதிய பதவியும், பொறுப்பும் கெடைக்கும். வயசுல இளையவங்களுக்கு வாகன வசதியும், நல்ல கல்வியும் கிடைக்கும். இத்தனை காலம் வெளியில் சொல்ல முடியாதபடி இருந்து வந்த மனக்குறைகள் நீங்கும். பிள்ளைகள் கல்வி மற்றும் அவங்க எதிர்காலம் பற்றிய கவலை ஏற்பட்டு நீங்கும். மனம் விரும்பியபடி பயணம் செல்ல நேரிடலாம்.

சந்திராஷ்டமம் : ஜூலை 6 முதல் ஜூலை 8 வரை  சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள்

சிம்மம்

சிலருக்கு அரசாங்க விருதுகள் கெடைக்கும்.  வாக்கு வன்மை ஜாஸ்தியாகும்.   புதிய வியாபார யுக்திகளால் அதிக இலாபம் அடைவீங்க. சிலருக்கு வீடு, மனை ஆகியவை கிடைக்கும். வாழ்க்கை வசதிங்க ஏற்படும்.  மத்தவங்களுக்கு ஹெல்ப் செய்யற நல்ல எண்ணம் மேலோங்கும். இந்த வாரம் சுபச் செய்திங்களை எதிர்பார்க்கலாம். உங்களுக்கு ரொம்பவே அனுகூலமான வாரங்க இது. பல வழிகளிலும் தனவரவு ஏற்படும். எந்தக் காரியத்தையும் திறம்படச் செய்யும் ஒங்களோட செயல்திறன் கூடும். கலைத்துறைல உள்ளவங்களுக்குப் பணவரத்து அதிகரிக்கும். அதிகமாக உழைக்க வேண்டி இருக்கும். அலைச்சல் இருக்கும். புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். வாழ்க்கைல முன்னேறத் திட்டமிடுவதால வளர்ச்சி காண்பீங்க. எந்த விஷயமும் கொஞ்சம் ஸ்லோவாக இருந்தாலும் பெஸ்ட் ரிஸல்ட் கெடைக்குங்க.

சந்திராஷ்டமம் : ஜூலை 8 முதல் ஜூலை 10 வரை சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள்

கன்னி

உங்களோட பணி இலக்கை அடைஞ்சு சந்தோஷப்படுவீங்க. சிலருக்கு மற்றவர்களுக்கு ஆணையிடும் உயர் பதவி கிடைக்கும். புதுசா வேலை தேடறவங்களுக்கு நல்ல காலம் பிறக்கும்.  ஸ்டூடன்ட்ஸ் தங்களோட கிரகிப்புத் தன்மையால கல்வியின் தரத்தை உயர்த்திக்குவீங்க. பொருளாதார நிலைகள் திருப்திகரமாக இருக்கும். பழைய கடன்கள் சீக்கிரமா வசூலாகும். உங்க சகோதரனின்/ சகோதரியின் நடவடிக்கைகள் உங்களுக்கு உதவிகரமாக இருக்கும். புதிய பெண்களின் நட்பினால நன்மை ஏற்படும். மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் அதிகரிக்கும். பாடங்கள் எளிமையாக தோன்றினாலும் கவனமாக படிப்பது அவசியம். பிணிகள் நீங்கும். காரிய தடை, எதிர்ப்புகள் அகலும். உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கிடைக்கும். முயற்சிகள் நல்ல பலன் தரும். கலைத்துறையினர் வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. திடீர் முன்னேற்ற வாய்ப்புகள் சந்தோஷம் தரும்.

சந்திராஷ்டமம் : ஜூலை 10 முதல் ஜூலை 13 வரை/ சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமாக இருங்கள்

துலாம்

இந்த வாரம் பேச்சின் இனிமை சாதூர்யத்தின் மூலம் காரிய வெற்றி காண்பீங்க. சாமர்த்தியமான செயல்களால் மதிப்பும், அந்தஸ்தும் உயரும். மனக்கவலை நீங்கும்படியான சூழ்நிலை இருக்கும். உற்சாகம் உண்டாகும். பயணத்தின் போது ஏற்பட்ட தடங்கல் நீங்கும். தொழில் வியாபாரம் லாபகரமாக நடக்கும். தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பீங்க. உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பணிகளை விரைந்து முடிக்க தேவையான ஹெல்ப்ஸ் கெடைக்கும். புதிய வேலை தொடர்பாக மேற்கொள்ளும் முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். குடும்பத்துல இருப்பவர்கள் உங்களை அனுசரித்து செல்வாங்க. நீண்ட நாட்களாக இருந்த பிரச்சனைகள் தீரும். பெண்களுக்கு கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காணப்படும். கஷ்டமாக தோன்றிய பாடங்களை எளிதாக படிச்சு முடிப்பீங்க.

விருச்சிகம்

தடைப்பட்ட பண உதவி கிடைக்கும். பிசினஸ்ல உள்ளவங்களுக்கு இத்தனை காலம் இருந்துக்கிட்டிருந்த போட்டிகள் அகலும். நீங்க செய்யும் காரியங்களுக்கு இருந்த தடை நீங்கும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெறுவோம் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். இந்த வாரம் பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீங்க. உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். எடுத்த வேலையை செய்து முடிப்பதற்குள் பல தடங்கல்கள் உண்டாகும். குடும்பத்துல இருப்பவர்களால் டென்ஷன் உண்டாகலாம். கணவன், மனைவிக்கிடையில் கருத்து வேற்றுமை வராமல் இருக்க மனம்விட்டு பேசுவது நல்லது. பிள்ளைகள் நலனில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. மனதில் தூய சிந்தனைகள் அதிகரிக்கும்.

தனுசு

பெண்கள் எடுத்த காரியத்தைச் செய்துமுடிச்சு சந்தோஷப்படுவீங்க. குறுக்கு வழில சம்பாதிக்க நெனைச்சவங்க சற்று அலைய வேண்டி இருக்கும். கலைத் துறையினருக்கு வீண்குழப்பம், காரிய தடை எல்லாமும் நீங்கி நிம்மதி கெடைக்கும். வாகனங்களில் செல்லும் போது கூடுதல் கவனம் தேவை. அரசியல்வாதிகளுக்கு கவன தடுமாற்றம் உண்டாகலாம். பணவரத்து தாமதப்படும். எதிர்பார்த்தபடி ஒப்பந்தங்கள் கிடைப்பது தாமதமாகலாம். மாணவர்கள் கல்வியில் வெற்றி பெற கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். சிக்கன நடவடிக்கை கைகொடுக்கும். இந்த வாரம் நிலுவையில் இருந்த பணம் வந்து சேரும். நீண்ட நாட்களாக வாங்க திட்டமிட்ட வாகனம் சொத்து மற்றும் வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீங்க. பயணங்கள் சாதகமான பலன் தருவதாக இருக்கும்.

மகரம்

எதிர்பாராத அதிர்ஷ்டம் கெடைக்கலாம். உடல் ஆரோக்யம் உண்டாகும். தெய்வ பக்தி அதிகரிக்கும். லேடீஸ்க்கு நோய்கள் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். பணவரத்து எதிர்பார்த்ததை விட அதிகமாவதால மனசுல சந்தோஷம் வரும். எதிரிங்களால் இருந்துக்கிட்டிருந்த பிரச்சனை தீரும். ஃப்ரெண்ட்ஸ் மூலம் தேவையான ஹெல்ப்ஸ் கெடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான பயணங்கள் மேற்கொள்ள வேண்டி இருக்கும். இனிமையான பேச்சின் மூலம் வாடிக்கையாளர்களை தக்கவைச்சுக்குவீங்க. உத்தியோகத்தில உள்ளவங்களுக்கு அலுவலக பணி தொடர்பான அலைச்சல் இருக்கும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பும் கிடைக்கும். குடும்பத்துல உங்களது பேச்சுக்கு எதிர்பேச்சு பேசியவர்கள் அடங்கி விடுவாங்க. மகிழ்ச்சி நீடிக்கும். பிள்ளைகள் தொடர்பான பயங்கள் முற்றிலும் நீங்கி நிம்மதி பிறக்கும்.

கும்பம்

எந்த விஷயமுமே கொஞ்சம் ஸ்லோவாய் இருக்கும். அதனால பரவாயில்லைங்க. முன்னேற்றம்தானே நமக்கு முக்கியம். பொறுமையை மட்டும் கைவிடக் கூடாதுன்னு கொஞ்சம் உறுதியா இருந்துடுங்க. போதும். கணவர் / மனைவியால் நன்மை ஏற்படும். தொழில் வியாபாரம் மந்தமாக காணப்பட்டாலும் பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீங்க. முட்டுகட்டைகள் விலகும். கலைத்துறையினருக்கு அடுத்தவரிடம் உங்களது செயல்திட்டங்களை பற்றி கூறுவதை தவிர்ப்பது நல்லது. அரசியல்வாதிகளுக்கு மேலிடம் கூறுவதை கேட்டு தடுமாற்றம் அடையலாம். நிதானமாக யோசித்து செய்வது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் திறமை வெளிப்படும். கல்வியில் வெற்றி பெற தேவையான உதவிகள் கிடைக்கும். ஆர்டர் தொடர்பான காரியங்களில் தாமதம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சல் வேலைபளு இருந்த நெலைமை மாறி நிம்மதி வரும்.

மீனம்

சக ஊழியர்கள், மேலதிகாரிகளை அனுசரிச்சுக்கிட்டுப் போவீங்க. இதனால அவங்களோட கருணைப் பார்வை ஒங்க மேல விழும். குடும்பத்துல இருப்பவர்களுடன் மகிழ்ச்சியாக பொழுதைக் கழிப்பீங்க. கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்து போவது நன்மைதரும். பிள்ளைகளின் நலனில் அக்கறை தேவை.  ஆரோக்யத்தைக் கெடுக்கற பழக்கம் உள்ளவங்க இந்த நிமிஷமே அதைத் தூக்கிக் குப்பைல போடுங்க. ஃபேமிலில உள்ளவங்களோட ஒங்களுக்குக் கருத்து வேற்றுமை ஏற்படுத்தணும்னு சிலர் கங்கணம் கட்டிக்கிட்டுப் போராடுவாங்க. அவங்களோட முயற்சி பலிக்கறதுக்கு நீங்க எடம் கொடுத்துப்புடாதீங்கப்பா. எது எப்பிடி இருந்தாலும் இந்த வாரம் பொருளாதாரத்தில் நல்ல மேன்மை ஏற்படும். சேமிக்க வேண்டும் என்ற எண்ணம் அதிகரிக்கும். தொழில் வியாபாரம் நிதானமாக நடக்கும். கடன்விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். புதிய ஆர்டர்களுக்கான முயற்சிகள் சாதகமான பலன் தரும்.