மேஷம்

வாழ்க்கைல முன்னேறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக வரும். உங்களிடம் இருக்கும் தனிப்பட்ட திறமையை வெளிப்படுத்துவீங்க. நீங்க முன்னேற்றம் அடைவதற்கான வாய்ப்புக்களையும் பாதையையும் காட்டிக் கொடுக்க ஆபீசில் ஒரு நல்ல நண்பர் கிடைப்பார். உங்க சகோதரருக்கு அல்லது சகோதரிக்கு நன்மை ஒண்ணு நடக்குங்க. குடும்பத்துல, இதுநாள் வரை திருமணம் தட்டிப்போனதல்லவா?  இனி மனசுக்குப் பிடிச்ச வரன் அமையும். கணவன் மனைவி இடையே விட்டுக்கொடுத்து போங்க.. அதனால அரை அடி குறைஞ்சு போயிட மாட்டீங்க. நல்லதே நடக்கும். உங்க தொழிலில் சின்ன பிரச்சினைகள் வரலாம் கவனமா இருங்க. அதிகமா உழைப்பீங்க. தடை தாமதங்கள் இருக்கும்தான். ஆனா, எதுக்கும் சளைக்காதீங்க. நீங்க பாட்டுக்கு உங்க வேலையைப் பார்த்துக்கிட்டுப் போயிக்கிட்டே இருங்க. எல்லாம் தானாய்ச் சரியாகும். நல்லவங்களோட ஆசி குறையாம இருக்கும். எதையும் ஒரு முறைக்கு நாலு முறையாச் செய்யும்படி ஆகும். மைண்ட் பண்ணாதீங்க.

சந்திராஷ்டமம்: ஜுன் 9ம் தேதி முதல் ஜுன் 11ம் தேதி வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமா இருங்க.

ரிஷபம்

எதிரிங்க காணாமப் போவாங்க. கடன் தொல்லை நீங்கும், வழக்குகள் அல்லது சொத்துக்களில் இருந்த தகராறுகள் இருந்த இடமே தெரியாமல் உங்களுக்கு சாதகமாக நடக்கும். அதிர்ஷ்ட காற்று ஆண்டு முழுவதும் ஒங்களோடபக்கம் வீசும். பொருளாதார வளர்ச்சி, தொழில் லாபம், மூத்த சகோதரர்களால் குடும்பத்துல உள்ள மூத்தவர்களால் ஆதாயம் என்று ஆண்டு முழுவதுமே பெரிய சிக்கல்கள் எதுவும் இருக்காது. சகோதர சகோதரிங்களால எதிர்பாராத பண வரவும், பொருள் வரவும் கிட்டும்.  அவங்ககூட இருந்த சண்டையெல்லாம் முடிஞ்சுடும். நிறையச் செலவுங்க வந்தாலும் அதெல்லாம் உங்களை ரொம்பவும் ஹாப்பியாக்கற செலவுதான். அடிச்சுவிடுங்க. உங்களோட அடிப்படை புத்திசாலித்தனம் எப்பவும்போல இப்பவும் பளிச். ஒங்களோட கூடப் பிறந்த ஜாலியான சுபாவமும் பளிச்சென்று டிரஸ் செய்துக்கிட்டு அழகாய் வளைய வரும் தன்மையும், கலகலகலகல சுபாவமும் அனைவரையும் கவர்ந்து உங்க பக்கம் இழுக்கும்.

சந்திராஷ்டமம்: ஜுன் 11ம் தேதி முதல் ஜுன் 14ம் தேதி வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமா இருங்க.

மிதுனம்

அலுவலகத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். சக பணியாளர்கள் ஒங்களோட பணிகளில் உதவிகரமாக இருப்பாங்க. ஒரு சிலருக்கு அவர்கள் விரும்பியபடி இட மாறுதல் கிடைக்கும். பெற்ற .குழந்தையாலும் பெற்ற தகப்பனாலும் நன்மையும் சந்தோஷமும் கிடைக்கும். அப்பாவுக்கு, பிரமோஷன் அல்லது சம்பள உயர்வு அல்லது இரண்டுமே கிடைக்கும். ஜாலியான் டிஸ்கஷன்ஸ் நடந்து வீடு சிரிப்பும் கும்மாளமுமாய் இருக்கும. உறவினர்களால் பொருள் வரவு அல்லது ஹெல்ப் கிடைக்கும். தங்க நகைகள் வாங்குவீங்க. குடும்பத்துல குழப்பம் ஏற்படாமலேயே காப்பது உங்க சாமர்த்தியம். கண், பல், சார்ந்த பிரச்சினைகள் வந்தாலும் தகுந்த ட்ரீட்மென்ட் எடுத்து சரியாகிவிடும். டென்ஷனை குறைங்கப்பா. கெளரவம் பார்க்காதீங்க. மத்தவங்களையும் கொஞ்சம் மதிச்சு நடங்க. குடும்பத்துல அனுசரிச்சுக்கிட்டுப் போங்க. எஸ்பெஷலி ஆண்கள்..

கடகம்

பல காலத் தொல்லைகளிலிருந்து விடுபடுவீர்கள். உடல் உபாதைகள் முழுமையாகத் தீர்ந்திருக்கும். வியாபாரத்தின் காரணமாக சிலர் தொலைதூர பயணங்களை மேற்கொள்ள நேரும். பணியாளர்கள் நல்லமுறையில் ஒத்துழைப்பு தருவார்கள். சக வியாபாரிகளுடன் இணக்கமான சூழ்நிலை உண்டாகும்.வியாபாரிகளுக்குச் சில சிரமங்களும் தொல்லைகளும் ஏற்பட்டாலும் நல்ல வேளையாகத் தேவையான சரக்குகள் கையிருப்பு இருக்கும். எனவே திடீர் ஆர்டர்களை ஜமாய்த்து வெற்றி கண்டு நிம்மதியும் சந்தோஷமும் அடைவதோடு லாபமும் பார்ப்பீர்கள்.  ஆபீஸில் இருப்பவர்களுக்கு எதையும் செய்து முடிப்பதில் துணிச்சல் உண்டாகும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். கவர்ச்சிகரமான பேச்சினால் மற்றவர்களைக் கவர்வீங்க. பேச்சை முக்கியமாய்க் கொண்டு தொழில் அல்லது ஜாப் செய்யறவங்களுக்கு இது ஜாக்பாட் வாரம். குடும்பம் ஹாப்பியா இருக்குமுங்க.

சிம்மம்

இந்த வாரம் தைரியம் இன்கிரீஸ் ஆகும். கடந்த சில வருடங்கள் இருந்ததைவிடவும், எல்லா விதத்திலும் நன்மையை தரும் இந்த வாரம். சகோதரர்களால் நன்மை உண்டாகும். காரிய வெற்றி ஏற்படும். பணவரத்து கூடும். எதிர்ப்புகள் குறையும். தொழில் வியாபாரத்துல ஈடுபட்டு இருப்பவர்களுக்கு கீழ் நிலையில் உள்ளவர்களால் லாபம் கிடைக்கும். பழைய பாக்கிகளை வசூல் செய்வதில் வேகம் காட்டுவீங்க. இந்த வாரம் எதிலும் ரொம்ப கேர்ஃபுல்லா ஈடுபடுங்க. பேச்சில் இனிமை, சாதுரியத்தால் எடுத்த காரியங்கள் சாதகமாக முடியும். ஆபீஸில், தெளிவாகச் சிந்தித்து எதையும் வெற்றிகரமாகச் சாதிப்பீங்க. புதிய பதவிகள் கிடைக்கும். குடும்ப விஷயங்களில் சரியான முடிவுக்கு வர முடியாத தடுமாற்றம் ஏற்பட சான்ஸ் இருக்குங்க. வண்டி வாகனத்தில் போகும் போது கவனமாக போங்க. ப்ளீஸ் நல்லதே நடக்கும். டவுட் வேணாம். இந்த வாரம் கூடுமானவரை இடம் மாற்றம் எதுவும் வேண்டாம்ங்க.

கன்னி

கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை ஏற்பட்டாலும்கூட அது நல்ல முறையில் முழுமையாக இந்த வாரமே நீங்கும். லேடீஸ்க்கு, காரிய அனுகூலம் உண்டாகும். எதிர்பார்த்த ஹெல்ப் கிடைக்கும். ஸ்டூடன்ட்ஸ், தொழிற்கல்வி கற்பதில் ஆர்வம் உண்டாகும். திட்டமிட்டுப் படிப்பது எதிர்காலத்துக்கு உதவும். திறமையுடன் காரியங்களைச் செய்வீங்க. உழைப்புக்கேத்த லாபமும் நன்மையும் கெடைக்கும். எல்லா நன்மைகளும் லாபமும் தடை தாமதங்களோடதான வரும். ஆனால் இறுதியில் நல்ல முடிவுதான். உங்களுக்குள் சின்னதாய் ஒரு பயம் இருந்தாலும் மனோதைரியத்தோடு எதையும் செய்து முடிப்பீங்க. மாணவர்களுக்கு அற்புதமான வாரம் இது. பகலில் பக்கம் பார்த்து பேசுங்க இரவில் அதுவும் பேச வேணாம். சுருங்கச் சொன்னால் யார் கிட்டயும் எதுவும் வம்பு வெச்சுக்க வேணாம். சரும நோய் போன்றவை காணாமல் போய், நிம்மதி தரும்.

துலாம்

குடும்பத்துல சுபகாரியங்களுக்கான ஏற்பாடுகள் நிகழ ஆரம்பிக்கும். அவை நிம்மதியையும் சந்தோஷத்தையும் தரும். லேடீஸ்க்கு,  முன்பைவிட சந்தோஷம் தரும் வாரம். பிகாஸ், சிக்கலான விஷயங்களைக்கூட சுமுகமாக முடிச்சுடுவீங்க. அது மேலதிகாரிங்க மற்றும் குடும்பத்தினருடைய பாராட்டைப் பெற்றுத் தரும். கலைத் துறையினருக்கு, நன்மைகள் நடக்கும் காலகட்டம் இது. அரசியல்வாதிகள் எதிர்காலம் தொடர்பாக அவசர முடிவுகள் எடுப்பதைத் தவிர்த்து தீவிர யோசிச்சு செய்ங்க. ஸ்டூடன்ட்ஸ், புத்தகங்கள் மற்றும் உபகரணங்கள் வாங்குவது தொடர்பான கவலை நீங்கும். இந்த வாரம் பணவரவு இன்கிரீஸ் ஆகும். மனசுல நிம்மதியும் அதே அளவுக்கு இன்கிரீஸ் ஆவுங்க. சட்டென்று பெரிய தீர்மானம்ஸ் எடுக்கணும்னா, எக்ஸபர்ட்களையும் அனுபவசாலிங்களையும் கன்சல்ட் செய்துட்டுப் பிறகு எடுங்கப்பா/ ம்மா. ஆபீஸிலிருந்து மெயில் வரும். கங்கிராட்ஸ். குட் நியூஸ்.

விருச்சிகம்

சிக்கல்கள் தீர்வதில் இருந்த தாமதம் நீங்கும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் ஆர்வம் உண்டாகும். கல்வியில் தேர்ச்சி பெறவும் கூடுதல் மதிப்பெண் பெறவும் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும். எந்த வகைல இன்வெஸ்ட் செய்வதுன்னு குழப்பம் உண்டாகலாம். எதையும் ஒரு முறைக்குப் பலமுறை யோசிச்ச பிறகே செய்ய வேண்டும். சட்டென்று கோபம் வரும் ஒங்க குணத்தைக் கொஞ்சம் மாத்திக்குங்க. . தொலைதூரத் தகவல்கள் நல்லதாக இருக்கும். தொழில், வியாபாரத்துல திடீர்ச் செலவு ஏற்படும். எதிர்பார்த்த லாபம் குறையலாம். குடும்பத்துல சிறு சண்டைகள் உண்டாகலாம்.  பட்… எல்லாமே டெம்பரரிதாங்க. இம்மீடியட்டா சரியாயிடும். சில சமயங்கள்ல அசடு வழியக்கூட சான்ஸ் இருக்கு. கவனமா இருந்துக்குங்க. ஸ்டூடன்ட்ஸ், கல்வி பற்றிய கவலை ஏற்பட்டு நீங்கும். பெற்றோர், ஆசிரியர்களின் ஆலோசனை கைகொடுக்கும்.குட் லக்.

தனுசு

மற்றவர்களுக்காக வாதாடி வெற்றி பெறுவீங்க. முன்கோபம் குறையும். பேச்சினால் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் நீங்கி பிரிந்தவர்கள் மீண்டும் நட்பு பாராட்டுவாங்க. பணவரத்து இன்கிரீஸ் ஆகும். மனசுல புதுதெம்பும் உற்சாகமும் தோன்றும். எதிர்பாராத உதவியால் நன்மை ஏற்படும். தேவையில்லாத பிரச்சினைகள்ல ஒங்க அழகான மூக்கை நுழைக்க வேணாம். லேடீஸ்க்கு, முயற்சிகளில் சாதகமான பலன் கிடைக்கும். காரியங்களைச் செய்து முடிப்பதில் திறமை வெளிப்படும். ஸ்டூடன்ட்ஸ், கூடுதலாகப் படிப்பில் கவனம் செலுத்த வேண்டும். மனம் தளராமல் செயல்பட்டால் வெற்றி உண்டு. ஸ்டூடன்ட்ஸ்  வெற்றிபெறத் திட்டமிட்டுப் படிக்க முற்படுவீங்க. இந்த வாரம் உடல் அசதி நீங்கும். கவலைகள் அகலும். கொஞ்ச நாட்களாய் உங்க மனசை ஆட்டி வைச்சுக்கிட்டிருந்த .. காரணமற்ற பயம்கூட.. இருந்த இடம் தெரியாமல் ஓடி ஒளிஞ்சு நிம்மதி வழங்கும்.

மகரம்

நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்த ஒரு காரியத்தில் சாதகமான பலன் கெடைக்கும். இழுபறியாக இருந்த சில பிரச்சினைகள் நல்ல முடிவுக்கு வரும். வியாபாரம் தொடர்பாக செய்து பாதியில் நின்ற பணிகளை மீண்டும் செய்து முடிப்பீங்க. ஆபீஸில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பாங்க. பணவரத்து திருப்தியாக இருக்கும். புதிய பொறுப்புகள் ஏற்படலாம். விரும்பிய இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும். பக்தியில் நாட்டம் இன்கிரீஸ் ஆகும். திட்டமிட்டுச் செயலாற்றுவதில் இருந்த தயக்க நிலை மாறும். இவ்ளோ காலம் பின்னடைவு இருந்துக்கிட்டிருந்த சில  பெரிய விஷயங்கள் சட்டென்று மாறி சந்தோஷம் குடுக்கும். பயணங்களில் தடங்கல் அகலும். கொடுத்த வாக்கைக் காப்பாற்றுவதில் உறுதியாக இருப்பீங்க. ஆபீஸில் வேலைப்பளுவை உணர்வீங்க. மேலதிகாரிகள், உங்க செயல்களில் குறை காணலாம். சக ஊழியர்களிடம் கருத்து வேறுபாடுகள் வரலாம்.

கும்பம்

குடும்பத்துல மகிழ்ச்சி இன்கிரீஸ் ஆகும். சுபநிகழ்ச்சிகளுக்கு இருந்த தடைகள் அகலும். சில விஷயங்கள் கொஞ்சம் நிதானமாய் நடந்தாலும் நல்லபடியா நடந்து முடியுங்க. அதுக்குள்ள பொறுமை இல்லாம பொலம்பித் தீர்த்துடுவீங்க. பல காலம் நெருங்காத உறவினர்கள் ஓடிவந்து பேசுவாங்க. எல்லாம் எதுக்கு? உங்ககிட்ட உதவி கேட்கறதுக்குத்தான். மத்த எல்லா வேலைங்களையும் ஒதுக்க வைச்சுட்டு அவங்களுக்கு முதல்ல உதவ செய்ங்க. ஆண்டவன் எல்லாருடைய கணக்கையும் பார்த்துக்கிட்டிருப்பான். உங்களுக்குச் சரியான நேரத்துல  அவன் வந்து உதவுவான். கடந்த சில வருஷங்களா இருந்துக்கிட்டிருந்த மன உளைச்சலெல்லாம் பக்தி என்னும் டெட்டால் போட்டதில் சுத்தமாய்க் காணாமல் போயிடும்.  கணவர் / மனைவியின் நலன் பற்றி இருந்த பயம் நீங்கும். பேச்சில் மி…………கவும் கவனமா இருக்கணும். அதைவிட பெட்டர் பேசவே வேண்டாம்.

மீனம்

பிள்ளைங்களுடைய படிப்பில் நீங்களும் கடுகு சைஸ் அக்கறையாச்சும் காட்ட வேண்டும். செலவு அதிகமா இருந்தாலும் அந்தச் செலவுங்க மூலம் நீங்க அடைஞ்ச நன்மைக்கு ஈடு இல்லைங்க. பிள்ளைங்களுடைய படிப்பில் நீங்களும் கடுகு சைஸ் அக்கறையாச்சும் காட்ட வேண்டும். அவங்களையும் காட்ட வைக்க வேண்டும். மனசில் சோர்வு இருக்கும். எல்லாம் நீங்களா கற்பனை செய்துக்கறதுதாங்க. விட்டுத் தள்ளுங்க. கவலைப்படற நேரத்துல பிரார்த்தனை செய்யலாம்ல. குடும்பத்துல ஒற்றுமை உண்டாகும். குடும்பத்துல அமைதி ஏற்படும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் வாங்குவீங்க. பிள்ளைகளிடம் அன்பு இன்கிரீஸ் ஆகும். வெளியூர் அல்லது வெளிநாட்டுல உள்ள குழந்தைங்களால நன்மையும், மகிழ்ச்சியும், சந்தோஷமும், லாபமும் அதிகமாகி, ஒங்களைத் திக்குமுக்காட வைக்கும். கோபத்தைக் குப்பையில் போட்டுடுங்க.

சந்திராஷ்டமம்: ஜுன் 6ம் தேதி முதல் ஜுன் 9ம் தேதி வரை

சந்திராஷ்டம தினங்களில் பேச்சிலும் செயலிலும் கவனமா இருங்க.