சீன அதிபரைக் கண்டு அஞ்சும் பலவீனமான மோடி : ராகுல் தாக்கு.

Must read

டில்லி

சீன அதிபர் ஜி யை கண்டு பலவீனமான பிரதமர் மோடி அஞ்சுவதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறி உள்ளார்.

பாகிஸ்தானின் தீவிரவாத இயக்கமான ஜெய்ஷ் ஈ முகமது இயக்கம் சமீபத்தில் நடந்த புல்வாமா தாக்குதல் உள்ளிட்ட பல பயங்கரவாத தாக்குதல்களை இந்தியாவில் தொடர்ந்து நடத்தி வருகிறது.   இந்த இயக்கத்தின் தலைவன் மசூத் அசார் சர்வ தேச பயங்கரவாதி என அறிவிக்க இந்தியா ஐநா பாதுகாப்பு குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுவரை நான்கு முறை விடுக்கபட்ட கோரிக்கைகளையும் சீன தனது வீட்டோ அதிகாரத்தின் மூலம் நான்கு முறையும் தடுத்துள்ளது.    இப்போது பல உலக நாடுகள் ஆதரவு இருந்தும் சீனா தடுத்தது இந்தியாவுக்கு கடும் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.

இந்த விவகரத்தில் பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக தாக்கி உளார்.   ராகுல் காந்தி, “மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க இந்தியா ஐநா பாதுகாப்பு குழுவுக்கு விடுத்த கோரிக்கையை சீனா தடுத்துள்ளது.   நமது பிரதமர் மோடி மிகவும் பலவீனமாக உள்ளதால் சீன பிரதமர் ஜி ஜின் பிங் கை கண்டு அச்சம் கொள்கிறார்.

சீனாவுடன் மோடி பேச்சு வார்த்தை நடத்தி மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்க ஒப்புக்கொள்ளச் செய்ய முடியாதா?  மோடியின் ராஜ தந்திரம் அவ்வளவு தானா?

மோடியை பொறுத்தவரை குஜராத்தில் ஜி உடன் ஊஞ்சல் ஆட்டம், டில்லியில் கட்டி அணைத்தல் சீனாவில் தலை வணங்குதல் என்பது தான் அவருடைய ராஜ தந்திரம்.   இந்தியாவுக்கு எதிராக சீன அதிபர் நடவடிக்கைகள் எடுக்கும் போது அவருக்கு எதிராக மோடி ஒரு வார்த்தை கூட சொல்வதில்லை” என தெரிவித்துள்ளார்.

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article