புதுடெல்லி: தனது தேர்தல் அறிக்கையை, முதற்கட்ட நாடாளுமன்ற தேர்தலுக்கு சற்று முன்னதாக, ஏப்ரல் முதல் வாரத்தில் வெளியிட திட்டமிட்டுள்ளது பாரதீய ஜனதா கட்சி.

கடந்த 2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது, அக்கட்சியின் தேர்தல் அறிக்கை மிகவும் தாமதமாகத்தான் வெளியிடப்பட்டது. அதாவது, முதற்கட்ட தேர்தலன்று காலைதான் தேர்தல் அறிக்கையை வெளியிட்டது அக்கட்சி.

இதுதொடர்பாக அக்கட்சி தரப்பில் கூறப்படுவதாவது: தேர்தல் அறிக்கையை குறித்த காலத்தில் வெளியிடுவதென்பது மிக முக்கியமானது. எனவேதான், மத்திய உள்துறை அமைச்சர ராஜ்நாத் சிங் தலைமையில் அதற்கான கமிட்டி அமைக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.

தேர்தல் அறிக்கை தொடர்பான தகவல்களை தருவதற்காக அமைக்கப்பட்ட துணைக் குழுக்கள் அனைத்தும், ராஜ்நாத் சிங்கிடம் தங்களின் விபரங்களை ஏற்கனவே அளித்துவிட்டன.

ஆலோசனைப் பெட்டிகள், மின்னஞ்சல்கள், பொது கலந்துரையாடல்கள் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளின் மூலம் பொதுமக்களிடமிருந்து கருத்துகள் கேட்கப்பட்டு வருகின்றன.

– மதுரை மாயாண்டி