கொல்கத்தா: இந்தியாவில் ஆண்டுக்கு ஒன்று என்ற முறையில் பகலிரவு டெஸ்ட் போட்டியை நடத்துவதற்கு முயற்சிப்போம் என்று தெரிவித்துள்ளார் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி.

பிசிசிஐ தலைவர் பதவிக்கு அவர் வேட்புமனு தாக்கல் செய்ததிலிருந்தே தொடர்ந்து செய்தியில் அடிபட்டு வருகிறார். எதையேனும் பரபரப்பாக செய்துகொண்டிருக்கிறார்.

தற்போது முதன்முறையாக, வங்கதேச அணியுடன் பகலிரவு டெஸ்ட் போட்டியை நடத்துவதற்கான முயற்சியில் வெற்றிபெற்றுள்ளார்.

இந்நிலையில் ஒரு நேர்காணலில் பேசிய அவர், “ஆண்டுக்கு ஒரு பகலிரவு டெஸ்ட் போட்டியாவது இந்தியாவில் நடைபெறுவது நிச்சயம். இந்திய அணியின் வெளிநாட்டு சுற்றுப்பயணத்தின்போதும், சம்பந்தப்பட்ட நாடுகளின் கிரிக்கெட் வாரியத்துடன் பேசி, பகலிரவு டெஸ்ட் போட்டியை நடத்துவதற்கான முயற்சி மேற்கொள்ளப்படும்.

இந்திய அணியை வழிநடத்தும் ரோகித் ஷர்மாவின திறமை குறித்து இனியும் விவாதிப்பது தேவையற்றது. என்மீது எனக்கு அதிக நம்பிக்கையுள்ளது. நான் உரிய நேரத்தில் உரியதை செய்வேன். டிரெஸ்ஸிங் அறையில் அமர்ந்திருந்தால் மட்டுமே சிறந்த கிரிக்கெட்டர் ஆகிவிட முடியாது. சவால்களை ஏற்பது அவசியம்” என்றார்.