சென்னை :
தமிழகத்தில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பும் புலம்பெயர் தொழிலாளர்களின் ரயில் கட்டணத்தை தமிழக அரசே செலுத்தும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார். இது வெளிமாநில தொழிலாளர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.
கொரோனா ஊரடங்கு காரணமாக வெளி மாநிங்களில் சிக்கி உள்ள புலம்பெயர் தொழிலாளர்கள் ஒவ்வொரு மாநிலங்களில் இருந்தும் தங்களது சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க கோரிக்கை வைத்து வந்தனர். அதையடுத்து, அவர்களின் வசதிக்காக மே 1ம் தேதியிலிருந்து சிறப்பு ரயில்கள் இயக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது. அதன்படி, 115 சிறப்பு ரயில்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்ததுடன், தொழிலாளர்களிடம் பயணக் கட்டணம் வசூலிக்கவும் ரயில்வே உத்தரவிட்டது. இது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, புலம்பெயர் தொழிலாளர்களுக்கான பயணச்செலவை காங்கிரஸ் ஏற்கும் என்றும் அதிரடியாக அறிவித்தார்.
இது மத்திய மோடி அரசுக்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியது. இதையடுத்து சில மாநிலங்கள் தாங்களே பயணக் கட்டணத்தை செலுத்தப்போவதாக அறிவித்தன. இதை காரணமாகக் கொண்டு பாஜக தலைவர்கள் வசூல் வேட்டையில் இறங்கிய நிகழ்வுகளும் நடைந்தேறியது.
இந்த நிலையில், ரயில் கட்டணத்தை செலுத்த முடியாமல் தவிக்கும் தமிழகத்தில் இருந்து சொந்த ஊருக்கு திரும்பும் வெளிமாநில தொழிலாளர்களின் ரயில் கட்டணங்களை அரசு செலுத்தும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்தக் கட்டணம் மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து செலவிடப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
அதோடு, வெளி மாநிலங்களில் இருந்து ஏழை, எளிய மக்கள் மற்றும் தொழிலாளர்கள், கொரோனா பாதிப்பு அதிகம் உள்ள பகுதிகளில் இருந்து வருபவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.