சென்னை:
மிழகத்தில் கொரோனா பரிசோதனைக்காக 1லட்சம் பிசிஆர் சோதனைக் கருவிகள் தமிழகம் வந்தடைந்துள்ளதாக தமிழக சுகாதாரத்துறைஅதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். மேலும் 10 லட்சம் கருவிகள் வாங்க ஆர்டர் கொடுக்கப்பட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தமிழகத்தில் கொரோனா சோதனைக்காக சீனாவில் இருந்து வாங்கப்பட்ட லட்சக்கணக்கான ரேபிட் கிட் சரியான முறையில் வேலை செய்ததாலும், கூடுதல் விலைக்கு வாங்கப்பட்டதாலும் சர்ச்சை எழுந்தது. அதை உபயோகப்படுத்த ஐசிஎம்ஆர் தடை விதித்தது. பிசிஆர் கருவிகள் மூலமே சோதனை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியது.
இந்த நிலையில்,  கொரோனா பரிசோதனையை மேலும் விரிவுபடுத்துவதற்காக தமிழகத்திற்கு மேலும் 1 லட்சம் கரோனா நோய்த் தொற்றைக் கண்டறியும் பிசிஆர் பரிசோதனை கருவிகள் தென்கொரியாவில் ஆர்டர் கொடுக்கப்பட்டது. இந்த கருவிகள் தமிழகம்  வந்தடைந்துள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் நாள் தோறும் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், தமிழகம் முழுவதும் கையிருப்பில் உள்ள 1.20 லட்சம் பிசிஆர் பரிசோதனைக் கருவிகளைக் கொண்டு இதுவரை 2 லட்சத்து 16 ஆயிரத்து 416 மாதிரிகள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளது. இந்த நிலையில்,  தமிழகத்திற்கு வந்துள்ள  1 லட்சம்  பிசிஆர் பரிசோதனை கருவிகளை, விரைவில் அனைத்து மாவட்ட மருத்துவமனைகளுக்கும் பிரித்து அனுப்பி சோதனைகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
மேலும் தேவைக்காக   10 லட்சம் பிசிஆர் பரிசோதனை கருவிகளை வாங்க தென்கொரியாவிடம் தமிழக அரசு ஆர்டர் கொடுத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த கருவிகளாக ரேபிட் கிட் போல டூப்ளிக்கேட்டாக இருக்காமல் இருக்க வேண்டும் …