சென்னை:
ற்போது நடைபெற்றுவரும் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் அமளிதுமளியாக நடைபெற்று வருகிறது.  நேற்று முன்தினம் மானியக்கோரிக்கை மீதான விவாதத்தில்  அ.தி.மு.க.வைச் சேர்ந்த   பரமக்குடி  எம்.எல்.ஏ., முத்தையா, “89 வயக்காட்டு பொம்மைகள்” என்று  திமுகவினரை  விமர்சித்தார்.
அதற்குப் பதிலடியாக,  ” அ.தி.மு.க. எம்.எல்.ஏக்கள்  கொத்தடிமைகள், சோற்றுப்பிண்டங்கள்” என்று சாடினார்  எதிர்க்கட்சித்தலைவரான மு.க. ஸ்டாலின். (தி.மு.க.)

"நாங்க அடிமைதான்!"
“நாங்க அடிமைதான்!”

இந்த நிலையில், மதுவிலக்கு மற்றும் ஆயத்துறை அமைச்சர் தங்கமணி, கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும்போது, “மு.க.ஸ்டாலின் கூறியதை அப்படியே ஏற்றக்கொள்கிறோம்!” என்று சொல்லி நிறுத்த…  சபையில் இருந்த அனைவரும் அதிர்ச்சியடைந்தனர். “இவர் அவுட் ஆகிறமாதிரி வார்த்தையாடுகிறாரே!”  என்றே நினைத்தனர்.
தங்கமணி
தங்கமணி

தொடர்ந்து பேசிய தங்கமணி, “புரட்சித்தலைவி அம்மா (ஜெயலலிதா) ஒரு தெய்வம்…!     அந்த தெய்வத்திற்கு அடிமையாக இருக்கிறோம்…!
அவரது அன்பிற்கு அடிமை…!  அவரது பாசத்திற்கு அடிமை…!
அம்மா என்ற சொல்லுக்கு அடிமை…!” என்று சிக்ஸர் அடிக்க…  அ.தி.மு.க.வினர் உற்சாகமாக கைகளையும், மேசைகளையும் தட்ட.. சட்டமன்ற வளாகமே அதிர்ந்தது.