சென்னை :
மிழகத்தில் இயங்கி வரும் கூட்டுறவு வங்கிகள் நவீன மயமாக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று அறிவித்தார்.
தமிழ்நாடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி, தொழிற் கூட்டுறவு வங்கி, கூட்டுறவு வங்கி என 11 வகையான கூட்டுறவு வங்கிகள்  தமிழ்நாட்டில் செயல்பட்டு வருகின்றன.
கிராமப்பகுதிகளில் உள்ள ஏழைகள், விவசாயிகள் பயன்பெறும் வகையில் இந்த வங்கிகள் சேவையாற்றி  வருகின்றன.
jaya
இந்த வங்கிகள் மூலம்

  • விவசாய கடன்கள்,
  • பயிர் கடன்களுக்கு வட்டியில் மானியம் வழங்குதல்
  • நலிந்த பிரிவு மக்களுக்கு கடன் அளித்தல்.
  • பண்ணை சாரா கடன்களுக்கு வட்டியை குறைத்தல்
  • நகைக் கடன்கள்
  • கிசான் கடன் அட்டைத் திட்டம்
  • சிறுகடன் திட்டம்
  • சுய உதவிக் குழுக்களுக்கு உதவி செய்தல்
  • பெண் தொழில் முனைவோர் கடன் திட்டம்
  • வேலை செய்யும் பெண்களுக்கான கடன் திட்டம்
  • தாய்மை காலக் கடன் திட்டம்
  • தொழில் நெறிஞர் கடன் திட்டம்
  • தாழ்த்தப்பட்டோர்/பழங்குடியினர் உறுப்பினர்களுக்கு வட்டியில்லா முதலீட்டுக் கடன்
  • பெண் உறுப்பினர்களுக்கு வட்டியில்லா முதலீட்டுக்கடன்  போன்ற பல சேவைகள் நடைபெற்று வருகின்றன.

இந்த வங்கிகள் அனைத்தும் நவினமயமாக்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா சட்டபேரவையில் அறிவித்து உள்ளார்.
இன்றைய பேரவை கூட்டத்தில்,  விதி 110ன் கீழ் முதல்வர் ஜெயலலிதா இந்த அறிவிப்பினை வெளியிட்டார்.
தமிழகத்தில் உள்ள 11 கூட்டுறவு வங்கிகளுக்கு பாதுகாப்பு மற்றும் நவீன வசதிகளுடன் கட்டடங்கள் கட்டப்படும் என்றும், வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் கூட்டுறவு வங்கிகள் நவீனமயமாக்கப்படும்.
இதற்காக ரூ.12.45 கோடியில் 79 கூட்டுறவு சங்கங்கள் நவீனமயமாக்கப்படும் என்றும் முதல்வர் அறிவித்தார்.