புதுடெல்லி:
ஒமிக்ரான் தொற்றை எதிர்கொள்ள நாம் தயாராக வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
மான் கீ பாத் நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, கொரோனாவுக்கு எதிராக இந்தியா ஒரு குடும்பமாக ஒருங்கிணைந்து நிற்கிறது என்றும், மன்கிபாத் வானொலி நிகழ்ச்சி என்பது அரசாங்க செயல்பாடுகளைச் சொல்வது அல்ல; அடித்தட்டு மக்களின் பெருமுயற்சிகளை வெளிப்படுத்துவது என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், ஓமிக்ரான் எனும் புதிய வகை வைரஸ் நமது கதவுகளைத் தட்டிவருகிறது என்பதை மறக்கக் கூடாது என்றும், கொரோனா தடுப்பு ஊசிகள் போடுவதில் இந்தியச் சாதனை படைத்திருக்கிறது என்றும் கூறினார்.
ஓமிக்ரான் வைரஸ் பரவல் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் மோடி அறிவுறுத்தினார்.