புதுடெல்லி: 
மீண்டும் ஆன்லைன் வகுப்பு மற்றும் தேர்வுகளுக்கு அகில இந்தியத் தொழில்நுட்ப கல்விக்குழு பரிந்துரை செய்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட உருமாறிய ஓமிக்ரோன் வகை கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் ரஷ்யா உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஓமிக்ரோன் பரவல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், மீண்டும் ஆன்லைன் வகுப்பு மற்றும் தேர்வுகளுக்கு அகில இந்தியத் தொழில்நுட்ப கல்விக்குழு பரிந்துரை செய்துள்ளது.
இதுகுறித்து அகில இந்தியத் தொழில்நுட்ப கல்விக்குழு சார்பில் கல்வி நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் ஒமைக்ரான் வைரஸ் பரவல் அதிகரித்து வரும் நிலையில்,  மீண்டும் ஆன்லைன் வகுப்பு மற்றும் தேர்வுகள் நடத்துவது குறித்து தொழில்நுட்ப கல்வி நிலையங்கள் பரிசீலனை செய்து முடிவு எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.