சென்னை:
கொரோனா நோய் தொற்று எங்கிருந்து பரவுகிறது என்பது எங்களுக்கு தெரியும் என்று செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மாநகராட்சி கொரோனா சிறப்பு  ராதாகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையாளர்  பிரகாஷ் தெரிவித்தனர்.
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில், குறிப்பாக சென்னை கொரோனா வைரசால் சூழப்பட்டு உள்ளது. தமிழகத்தில் மொத்த பாதிப்பு 15ஆயிரத்து 512 ஆக அதிகரித்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களில் 9989 பேர் சென்னையை சேர்ந்தவர்கள் என்று சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.
ஆனால், சென்னையில் நோய் தொற்று குறைந்து வருகிறது, மக்கள் பீதி அடைய வேண்டாம் என சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்து உள்ளார்.
சென்னையில் கொரோனா பரவலை தடுக்க ஒவ்வொரு மண்டலத்துக்கும் தனித்தனி அதிகாரி நியமிக்கப்பட்டிருந்தும், நோய் தடுப்பில் தீவிரம் காட்டாத நிலையில், நோய் பரவல் மேலும் மேலும் தீவிரமடைந்து வருகிறது.
சென்னையில் கடந்த 20ந்தேதி புதிதாக 557 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். ஆனால் 21ந்தேதி பாதிப்பு 567 ஆக உயர்ந்தது.  22ந்தேதி 569 ஆக உயர்ந்த நிலையில், இன்று (23ந்தேதி) 624 ஆக அதிகரித்து உள்ளது.
இதன் காரணமாக சென்னையில் பாதிக்கப்பட்டோரின் மொத்த  எண்ணிக்கை 9,989 ஆக உயர்துள்ளது. ஆனால், சென்னை கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணனோ, சென்னையில் நோய் குறைந்து வருவதாக கூறி வருகிறது.
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட ஆலந்தூர், பெருங்குடி, அம்பத்தூரில் நோய்த்தாக்கம் குறைந்து வருகிறது  என்று தெரிவித்துள்ளார்
இன்று சென்னை நொச்சிக்குப்பம் பகுதியில் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உடன் சென்று ஆய்வு செய்த நோடல்  அதிகாரி ராதாகிருஷ்ணன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது, தமிழகத்தில் கொரோனா இறப்பு விகிதத்தை மேலும் குறைக்க முயற்சி எடுத்து வருகிறோம் என்று கூறியவர்,  சென்னையில் கொரோனா தொற்றில் இருந்து 3791 பேர் இதுவரை முழுமையாக குணமடைந்துள்ளனர்.   இறப்பு விகிதம் 0.7% என்ற அளவில் மட்டுமே உள்ள என்றார்.
சென்னையில் கொரோனா பரவலை தடுக்க, புதிய கோணங்களில், நோய் தடுக்கும் பணி நடைபெற்று வருதாக தெரிவித்தவர், சென்னையில் சமூகப் பரவல் என்றால் எங்கிருந்து வருகிறது என்பது தெரியாது, ஆனால், தற்போது நோய் தொற்று எங்கிருந்து பரவுகிறது என்பதை என்ற விவரம் எங்களிம் உள்ளது என்றார்.
மேலும், நோய் தொற்று அதிகமுள்ள பகுதிகளில் முக கவசம் அணியும் பழக்கத்தை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என்றவர்,  சென்னையில்  நோய் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பால் பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம்,   தற்போது, ஆலந்தூர், பெருங்குடி, அம்பத்தூரில் நோய்த் தாக்கம் குறைந்து வருவதாகவும்,  குடிசைப் பகுதிகளிலும் நோய்த்தொற்றை கண்டறியும் பணியில்  ஈடுபட்டு வருகிறோம் என்றார்.
சென்னையில் நோய் தொற்று அதிகமாகி உள்ள ராயபுரம், கோயம்பேடு  பகுதிகளில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.