ஒன்றிய அரசுக்கு இம்முறை உச்சநீதி மன்றம் நன்றாக வலிக்கும் அளவுக்கு’ ஒட்டுக் கேட்கும்’ விவகாரத்தில் பலமாகக் குட்டியுள்ளது!

ஒன்றிய பா. ஜ. க. அரசு, ‘ஜனநாயக விரோதப் போக்கில் ‘ கொடி கட்டிப் பறக்கிறது!

அதன் ஒரு பகுதியாக, ” பெகாசஸ” என்கிற இஸ்ரேல் நாட்டின் உளவு மென்பொருள் மூலம், நம் நாட்டின் செய்தியாளர்கள், ஒன்றிய அமைச்சர்கள், எதிர்க்கட்சித் தலைவர்கள், நீதிபதிகள், தேர்தல் அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட சுமார் 200 பேரின் செல்போன்கள்.. போன்களை ஒன்றிய பா. ஜ. க. அரசு ஒட்டுக் கேட்டதாக சர்வதேச நாளிதழ்கள் செய்தி வெளியிட்டன!

இதனால் நாடே அதிர்ச்சி அடைய, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் ஒன்றிய அரசிடம் இது குறித்துக் கேள்விகள் எழுப்பி, கடந்த மழைக்காலம் கூட்டத் தொடரையே முடக்கின!

ஆனால், ” நாங்கள் ஒட்டுக் கேட்கவில்லை” என்று , பிரதமர் முதல் கடைக்குட்டி அமைச்சர் வரை உறுதியாக மறுத்தனர்!

ஆனால், “இது தொடர்பாக, நீதி மன்றக் கண்காணிப்பில் விசாரணை நடத்தவேண்டும் என்று பல்வேறு தரப்பிலும் உச்ச நீதி மன்றத்தில் வழக்குகள் தொடரப் பட்டன!

ஆனால், ” இது குறித்து பிரமாண பத்திரங்களைத் தாக்கல் செய்ய முடியாது..இது நாட்டின் பாதுகாப்பு பற்றிய விஷயம்… என்று ஒன்றிய அரசு உச்சநீதி மன்றத்தில் தெரிவித்தது!

ஆனால், பலதரப்பட்ட வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி என். வி. ரமணா தலைமையிலான மூன்று நீதிபதிகள் அமர்வு, நேற்று ( 27.10.2021 ) அதிரடித் தீர்ப்பு ஒன்றை வழங்கியது!

அதில், “இதில், அரசு மீது வைக்கப்பட்டு உள்ள குற்றச் சாட்டு களில் இருந்து அது ஒதுங்கி விட முடியாது!

இது தொடர்பாக பிரமாண அறிக்கை தாக்கல் செய்ய ஒன்றிய அரசுக்குப் போதிய அவகாசம் அளித்தும் அதைப் பயன்படுத்திக் கொள்ளவில்லை …… அதே போன்று நம் நாட்டவரை வெளிநாட்டு உளவு நிறுவனங்கள் கண்காணிப்பது கவலை அளிக்கிறது!!

எனவே இந்த விவகாரத்தைத் தீர விசாரிக்க உச்சநீதி மன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதி ரவீந்திரன் தலைமையில் மூன்று பேர் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்படுகிறது!

இக்குழு, பொய்யை விசாரித்து உண்மையை வெளிக் கொண்டு வரும்” என்ற வரலாற்றுச் சிறப்பு மிக்க த் தீர்ப்பை வழங்கியிருக்கிறது!

இத்தீர்ப்பை வரவேற்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் “நாங்கள் அன்று வலியுறுத்தியது, இன்று நடக்கிறது” என்கிறார்!

—- ஓவியர் இரா. பாரி.