பெங்களூரு: காவிரி விவகாரத்தில் கர்நாடக காங்கிரஸ் கட்சியின்  துணைமுதல்வர் தமிழ்நாட்டுக்கு எதிராக முரண்டுபிடித்து வந்த நிலையில், தற்போது முதலமைச்சர் சித்ததராமையும், காவிரியில் தண்ணீர் திறந்துவிட முடியாது என கைவிரித்து உள்ளார்.

தமிழ்நாட்டுக்கு தர வேண்டிய காவிரி தண்ணீரை கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விட மறுத்து கர்நாடக மாநில அரசு திமிர்த்தனம் காட்டி வருகிறது. இதை தட்டிக்கேட்க முடியாத, முதுகெலும்பற்ற நிலையில் தமிழ்நாடு அரசு உள்ளது. இதையடுத்து தமிழ்நாடு அரசு , காவிரியில் தண்ணீர் திறந்து விட உத்தரவிடக்கோரி மத்தியஅரசை வலியுறுத்தி வருகிறது. இதையடுத்து, காவிரி மேலாண்மை ஆணைய கூட்டம் நேற்று ( 11ந்தேதி) டெல்லியில் நடைபெற்றது. இதில், தமிழ்நாடு அரசு சார்பில் கலந்துகொண்ட அதிகாரிகள், ,தமிழ்நாட்டுக்கு கிடைக்க வேண்டிய 38 டிஎம்சி நீரை உடனே திறந்துவிட உத்தரவிட வேண்டும் என்றும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. ஜூன் ஒன்றாம் தேதி முதல் ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை தமிழகத்திற்கு தர வேண்டிய காவிரி நீரின் அளவு 53 டி.எம்.சி ஆகும். இதில் தற்போது வரை 15 டி.எம்.சி மட்டுமே கர்நாடகா அரசு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து கர்நாடக அரசுக்கு உத்தரவிட்ட காவிரி மேலாண்மை ஆணையம், அதாவது 10 ஆயிரம் கன அடி தண்ணீர் காவிரியில் தமிழ்நாட்டுக்கு  திறந்து விடும்படி அறிவுறுத்தி உள்ளது.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய கர்நாடக காங்கிரஸ் முதல்வர் சித்தராமையா,  கர்நாடக மாநிலத்தில்,  மிகக்குறைவாக மழை பெய்துள்ளதால் எங்களிடம் போதிய அளவில் தண்ணீர் இல்லை என  தெரிவித்துள்ளார்.

”கேரளா, குடகு மாவட்டங்களில் மிகக்குறைந்த அளவே மழை பெய்துள்ளது. மிகக் குறைவாகவே மழை பெய்துள்ளதால் எங்களிடம் போதிய தண்ணீர் இல்லை. இதன் காரணமாகவே தமிழ்நாட்டிற்கு கூடுதலாக தண்ணீரை திறக்க முடியவில்லை”  என கூறியுள்ளார்.