கவுகாத்தி:

சாமில் வெளியான தேசிய குடியுரிமை இறுதிப்பட்டியலில் முன்னாள் குடியரசுத் தலைவர் குடும்பத்தினர், ராணுவத்தில் பணியாற்றியவர்கள் உள்பட 19 லட்சம் பேரின் பெயர்கள் இடம் பெறவில்லை. இது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதுதொடர்பாக உச்சநீதி மன்றத்திலும் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அசாம் மாநில பாஜக அமைச்சர் சர்மா,   பாஜக என்.ஆர்.சி.யை நிராகரிக்கிறது என்றும், இதையே உச்சநீதி மன்றத்தில் தெரிவிக்கும் என்று கூறி னார்.

அசாம் மாநிலத்தில் கடந்த ஆண்டு தேசிய குடியுரிமை பதிவேடு தயாரிக்கப்பட்டது. அதையடுத்து கடந்த 2018ம் ஆண்டு   ஜூலை 30-ம் தேதி பதிவேட்டின் வரைவு பட்டியல் வெளியிடப்பட்டது. இதில் 40 லட்சம் பெயர்கள் விடுபட்டது சர்ச்சையை உருவாக்கவே, உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதனை விசாரித்த உச்சநீதிமன்றம், விடுபட்டோர் பெயர்களை சேர்க்கும் பணியை முடித்து, ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் இறுதிப்பட்டியலை வெளியிட உத்தரவிட்டது. இதையடுத்து அசாமின் தேசிய குடியுரிமை பதிவேட்டின் இறுதிப்பட்டியல் அரசின் இணையதளத்தில் வெளியிட்டது. இதிலு, 19 லட்சத்து 6 ஆயிரத்து 657 பெயர்கள் பட்டியலில் இடம்பெறவில்லை.  பட்டியலில் இடம் பெறாதவர்கள் வெளிநாட்டவர் தீர்ப்பாயத்தில், மேல்முறையீடு செய்யலாம் என அறிவுறுத்தப் பட்டுள்ளது. இதற்காக 120 நாட்கள் கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் பாஜக தொழிலாளர்களிடையே உரையாற்றிய மாநிலஅமைச்சர் சர்மா, பாகிஸ்தான், பங்களாதேஷ் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து வந்துள்ள இந்து அகதிகளுக்கு இந்திய குடியுரிமை வழங்குவதற்காக பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரில் குடியுரிமை திருத்த மசோதா மீண்டும் அறிமுகப்படுத்தப்படும் என்றார்.

மேலும், தற்போதுள்ள  என்.ஆர்.சி.யை நாங்கள் நம்பவில்லை. பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அமித் ஷா தலைமையில் மற்றொரு என்.ஆர்.சி இருக்கும் என்று கூறியவர், இது தொடர்பாக உச்சநீதி மன்றத்திலும் பாஜக தெரிவிக்கும் என்றார்.

பெங்காலி இந்துக்கள் தங்கள் எதிர்காலம் குறித்து அக்கறையுடனும் சோகத்துடனும் உள்ளனர்.  சமணர்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள் மற்றும் பார்சிகள் உள்பட பாரத மாதா மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கு இந்தியாவில் குடியுரிமை வழங்கப்படும் என்றவர், இன்னும், 3-4 மாதங்கள் காத்திருங்கள் என்றார்.

தொடர்ந்து பேசியவர்,  இந்து வங்காளிகளுக்கு குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்று அசாமியர்கள் விரும்புகிறார்கள்.  “மொழி இருக்க வேண்டும், ஆனால் அசாமுக்கு மிகவும் ஆபத்தான பிரச்சினை மொழி சார்ந்த தேசியவாதம். அசாமியர்கள் ஒருபோதும் வங்காளிகளுக்கு எதிரானவர்கள் அல்ல”‘

இவ்வாறுஅமைச்சர் சர்மா பேசினார்.