டில்லி:

நாட்டின் பொருளாதார வீழ்ச்சி காரணமாக, ஆட்டோமொபைல் நிறுவனம் கடுமையான இழப்பை சந்தித்து வந்தது. இந்த நிலையில், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்டு வரும் வரியை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கடந்த வாரம் குறைத்து அறிவித்தார்.

இந்த நிலையில், பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி, குறிப்பிட்ட மாடல் கார்களின் விலையை ரூ.5 ஆயிரம் வரை குறைத்து அறிவித்து உள்ளது. இதன் காரணமாக மற்ற கார் நிறுவனங்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளன.

இந்தியாவின் மிகப் பெரிய வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்று மாருதி சுசுகி நிறுவனம். தற்போது நாட்டின் பொருளாதார மந்த நிலை காரணமாக மாருதியின் வாகனங்கள் விற்பனை கடுமையாக சரிந்ததது. அதன் காரணமாக மாருதி நிறுவனத்தின் சில ஆலைகள் தற்காலிக மாக முடப்பட்டன.

இந்த நிலையில், அண்மையில், மத்திய நிதியமைச்சர் பெரு நிறுவனங்களுக்கான வரி குறைப்பை மேற்கொள்ள இருப்பதாக அறிவித்ததுடன், இந்திய ஆட்டோமொபைல் துறையின் வீழ்ச்சியை கணிசமாக குறைக்கும் விதமாக, வரி குறைப்பினைச் செய்துள்ளது.

இதையடுத்து, மாருதி வாகனங்களின் விற்பனையை அதிகரிக்கும் விதமாகவும், வாடிக்கையாளர் களைக் கவரும் விதமாகவும் அதன் குறிப்பிட்ட மாடல்களின் விலையைக் கணிசமாக குறைத்துள்ளது. இதற்கான அறிவிப்பை அந்நிறுவனம் இன்று (புதன்கிழமை) வெளியிட்டுள்ளது.

தீபாவளி, நவராத்திரி விழாக்கள் வரும் நிலையில், விழாக் காலங்களை சிறப்பிக்கும் விதமாக விலை குறைப்பு நடவடிக்கையை மாருதி சுஸுகி நிறுவனம் மேற்கொண்டுள்ளது.  பண்டிகைக் காலத்தில் புதிய வாகனங்களை வாங்க திட்டமிட்டிருக்கும் மக்களைக் கவரும் விதமாக, குறிப்பிட்ட மாடல்களின் விலையில் இருந்து ரூ. 5 ஆயிரம் குறைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, பிரபலமான 10 மாடல்களின் விலையை ரூ.5000 (எக்ஸ்-ஷோரூம் விலையில்) வரை குறைக்க மாருதி நிறுவனம் குறைத்துள்ளது..

ஆல்டோ 800, ஆல்டோ கே 10, ஸ்விஃப்ட் டீசல், செலிரியோ, பலினோ டீசல், இக்னிஸ், ஸ்விஃப்ட் டிசைர் டீசல், டூர் எஸ் டீசல், விட்டாரா பிரெஸ்ஸா மற்றும் எஸ்-கிராஸ் உள்ளிட்ட மாடல்களுக்கு விலையை குறைத்துள்ளது. இதில் ஸ்விஃப்ட் டிசைர் மற்றும் பலினோ பெட்ரோல் வகை மாடல்களுக்கு மட்டும் எந்த விலை குறைப்பும் இல்லை.

இந்த புதிய விலை இன்று முதல் நாட்டிலுள்ள அனைத்து டீலர்ஷிப்களுக்கும் பொருந்தும் என்று மாருதி நிறுவனம் தெரிவித்துள்ளது.