சென்னை: அதிமுக பாஜக கூட்டணி  மற்றும் தொகுதி பங்கீடுகுறித்து பேசியபிறகு  கூட்டாக செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிச்சமி பாஜக மத்தியஅமைச்ச்ர பியூஸ்கோயல் ஆகியோர்,  எங்களது ஆலோசனையின்போது, ஊழல் திமுக ஆட்சியை அகற்றுவது குறித்து  ஆலோசித்ததாகவும்,
‘2026-ல் அதிமுக – பாஜக கூட்டணி  ஒருங்கிணைந்து ஆட்சியை பிடிக்கும்  என தெரிவித்தனர்.

தமிழ்நாட்டிற்கு வருகை தந்துள்ள மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் டிசம்பர் 23ந்தேதி அன்று  சென்னை கிண்டியில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் தேர்தல் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார். பின்னர் மத்தியஅமைச்சர் கோயல், இபிஎஸ் இருவரும் கூட்டாக பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்.

முதலில் பேசிய மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், “எனது நண்பரும், சகோதரருமான எடப்பாடி பழனிசாமியை சந்தித்ததில் மகிழ்ச்சி. அவர் அதிமுக – பாஜக அடங்கிய தேசிய ஜனநாயக கூட்டணியின் தலைவராக உள்ளார். இந்தச் சந்திப்பில் 2026 தேர்தலுக்கான வாய்ப்புகள் குறித்தும், கூட்டணியை பலப்படுத்துவது குறித்தும் ஆலோசனை நடத்தினோம். வரும் மாதங்களில் எப்படி செயல்படுவது, ஊழல் திமுக ஆட்சியை அகற்றுவது எப்படி என்பது பற்றியும் ஆலோசித்தோம். ஊழல் திமுக ஆட்சியில் தமிழகத்தின் வளர்ச்சி, வேலைவாய்ப்பு ஆகியவை பாதிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் பெண்கள், இளைஞர், மீனவர்கள், வணிகர், விவசாயிகள் ஆகியோரின் நலனை மேம்படுத்தும் ஆட்சியை 2026-ல் அமைப்போம்.

பிரதமர் மோடியின் வழிகாட்டுதலின்படி 2026 தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமோக வெற்றி பெறும். இந்தச் சந்திப்பு சுமுகமாக நடைபெற்றது” என்றார்

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, “நீண்ட இளைவெளிக்குப் பிறகு பியூஷ் கோயலை சந்தித்தது மகிழ்ச்சி. இந்தச் சந்திப்பில் தமிழக அரசியல் நிலவரம் குறித்து கேட்டறிந்தார். 2026 தேர்தலில் அதிமுக, பாஜக, தேஜக கூட்டணியில் உள்ள கட்சிகள் ஒருங்கிணைந்து எப்படியெல்லாம் செயல்பட வேண்டும் என்ற கருத்தை பரிமாறிக்கொண்டோம். திமுக ஆட்சியை அகற்றுவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினோம். திமுக ஆட்சியை அகற்ற மக்கள் கொந்தளிப்போடு உள்ளார்கள். 2026 தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி ஒருங்கிணைந்து ஆட்சியை பிடிக்கும்” என்று கூறினார்.

முன்னதாக, அதிமுக பாஜக கூட்டணியில் தொகுதி பங்கீடு குறித்து,  தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள  மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சரான பியூஷ்  கோயல் ஒருநாள் பயணமாக டெல்லியில் இருந்து சென்னைக்கு வந்தார். தி.நகரில் உள்ள பாஜக அலுவலகமான கமலாலயத்தில் பாஜக நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இந்தச் சந்திப்பு குறித்து தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் வெளியிட்ட எக்ஸ் பதிவில், ‘இன்றைய தினம் சென்னை வருகை தந்த வரும் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான தேர்தல் பொறுப்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கும் மத்திய வர்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் மற்றும் இணை பொறுப்பாளர் சட்டம் மற்றும் நீதி அமைச்சகத்தின் மத்திய இணை அமைச்சர் அர்ஜுன்ராம் மேக்வால் இருவரையும் தமிழக சட்ட மன்ற எதிர்க்கட்சித் தலைவரும் அஇஅதிமுகவின் பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் அஇஅதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்து 2026 சட்டமன்றத் தேர்தல் குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தினர்.

இந்த நிகழ்வில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாஜக தேசியச் செயலாளர் மற்றும் தமிழக பாஜக தேசிய பொறுப்பாளர் அரவிந்த் மேனன், தமிழக பாஜக தேசிய இணை பொறுப்பாளர் சுதாகர் ரெட்டி உடன் இருந்தனர்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]