வாஷிங்டன்: அமெரிக்காவில் ஏப்ரல் 19 முதல் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்றும், நாள் ஒன்றுக்கு 3மில்லியன் பேருக்கு கொரோனா தடுப்பூசி நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், விரைவில் இலக்கை அடைவோம் என அமெரிக்க அதிபர் பைடன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பின் மெத்தனம் காரணமாக, அங்கு கடந்தஆண்டு (2020) தொற்று பரவல் உச்சம்பெற்ற நிலையில், பலி எண்ணிக்கையும் அதிகரித்து. இது அந்தநாட்டு அதிபர் தேர்தலிலும் எதிரொலித்தது. அப்போது மக்களிடையே உறுதி அளித்த அதிபர் ஜோ பைடன், 100 நாட்களுக்குள் 10 கோடி பேருக்கு தடுப்பூசி போடப்படும் என கூறியிருந்தார்.  அதைத்தொடர்ந்து ஜோ பைடன்  வெற்றி பெற்று அதிபர் ஆனதும்  முதல்கட்ட நடவடிக்கையாக கொரோனா தடுப்பூசி போடும் திட்டத்தை துரிதப்படுத்தினார்.

ஆனால்,அவர் எதிர்பார்த்ததை விட அங்கு தடுப்பூசி போடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. பொதுமக்கள் ஆர்வமுடன் தடுப்பூசி செலுத்தி வருகின்றனர். இதனால், அவரது 100 இலக்கு  58 நாட்களிலேயே நிறைவுபெற்றது.

இந்த நிலையில், தற்போது புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ள பைடன்,  தற்போது 100 நாட்களுக்குள்  20 கோடி பேர் என்ற இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டிருப்பதாக கூறியுள்ளார்.  ஏற்கனவே திட்டமிட்டிருந்த மே முதல் தேதிக்கு, இரு வாரங்கள் முன்னதாகவே அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி திட்டம் செயல்படுத்தப்படும் என்று கூறிய நிலையில், தற்போது, வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் 18 வயது பூர்த்தியடைந்த அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி  தொடங்கும் என தெரிவித்துள்ளார்.

நேற்றுடன்  150 மில்லியன் ஷாட்களைக் கடந்துள்ளதாக தெரிவித்த பைடன், தான் கூறியபடி,  எனது 100 வது நாளில் 200 மில்லியன் ஷாட்களின் இலக்கைத் தாக்கும் பாதையில் செல்கிறோம். வாரத்திற்கு 20 மில்லியன் ஷாட்களுக்கு மேல் ஒரு நாளைக்கு சராசரியாக 3 மில்லியன் ஷாட்களை போடும் பணிகளை தொடங்கி உள்ளோம், விரைவில் இலக்கை அடைவோம் என   நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

150 மில்லியன் மக்கள் நிர்வகிக்கும்  நாட்டில் 62 மில்லியன் மக்களுக்கு முழுமையாக தடுப்பூசி போட்ட முதல் நாடு என்ற பெருமையை அமெரிக்கா பெற்றுள்ளதாக கூறிய பைடன்,  65 வயதிற்கு மேற்பட்டவர்களில் 75% க்கும் அதிகமானவர்கள்  தடுப்பூசியை பெற்றுள்ளனர் என்றார்.

நாங்கள் பதவியேற்றபோது தடுப்பூசி செலுத்தும் பணி  8% ஆக இருந்தது.  அப்போது நடத்தப்பட்ட ஆய்வில், கொரோனாவால் இறந்தவர்களில்  80% பேர் வயதானவர்கள் என்பது தெரிய வ்நததால், அவர்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தோம். இதனால்,  வியத்தகு திருப்பம் கிடைத்தது, வயதானோரின் உயிரிழப்பும் குறைக்கப்பட்டது.

தற்போது, கொரோனாவின் புதிய வகைகளுடன் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. வயது வந்த அனைவரும் முழு அளவில் தடுப்பூசிகளை எடுத்து கொள்வதற்கு பல மாதங்கள் எடுத்துக் கொள்ளும். அதனால் பொதுமக்கள் அனைவரும் சமூக இடைவெளியைப் பின்பற்றுதல் மற்றும் முக கவசங்களை அணிந்து கொள்ளுதல் வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்காவில் நேற்று புதிதாக 62,174 பேர்  கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதுவரை   3,15,60,329 பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.  நேற்று  905 பேர் உயிரிழந்துள்ள நிலையில், இதுவரை 5,40,259 பேர் உயிர் இழந்துள்ளனர். தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை 2,41,21,329 பேர் குணம் அடைந்துள்ளனர்.