டெல்லி:

மிழகத்தில் உள்ளாட்சித்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தேர்தலுக்கு தடை கோரி திமுக தாக்கல் செய்த மனு மற்றும் 8 வாக்காளர்கள் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை உச்சநீதி மன்றத்தில்  இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

திமுக சார்பில், பிரபல வழக்கறிஞர் கபில்சிபல், அபிசேக் மனு சிங்வி வாதாடி வருகின்றனர்.  தற்போது காரசாரமான வாதங்கள் நடைபெற்று வருகின்றன.

விவாதத்தின்போது ஆஜரான அபிஷேக் மனு சிங்வி,  தமிழகத்தில் வார்டு மறுவரையறைப் பணிகள் முழுமையாக முடிக்கப்படவில்லை,  அதனால், அங்கு தேர்தல் நடத்துவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறினார்.

மேலும், உரிய சட்ட முறைகளை கடைபிடிக்காமல் உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.  மாவட்ட தேர்தல் அதிகாரிதான், வார்டு மறுவரையறை அதிகாரியாகவும் உள்ளார் என்று குற்றம் சாட்டினார்.

அதையடுத்து, மாநில தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர், 2011 மக்கள்தொகை அடிப்படையில் வார்டு மறுவரையறை பணிகள் மேற்கொள்ளப்பட்டதாகவும், புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்ட பின் அவற்றில் தொகுதி மறுவரையறை செய்ய தேவையில்லை என்று மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

வார்டு மறுவரையறை, இடஒதுக்கீடு உள்ளிட்ட அனைத்து பணிகளும் நிறைவடைந்துவிட்டது அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு வெளியிடப்படும் போதுதான் புதிய மாவட்டங்களுக்கான வார்டு மறுவரையறை செய்ய முடியும்  என்றும் மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்து.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், வார்டுகள் மறுவரை செய்யாமல் தேர்தல் நடத்தப்பட்டால் குழப்பம் ஏற்படாதா என்று கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த தேர்தல் ஆணைய வழக்கறிஞர், தேர்தல் நடைமுறை அமலுக்கு வந்த பின், எந்த நீதிமன்றத்தாலும் தேர்தலை தள்ளிபோட முடியாது என்று கூறப்பட்டது.

நாடாளுமன்றம் என்ன விதி வகுத்துள்ளதோ அதன்படியே உள்ளாட்சித் தேர்தல் நடைபெற வேண்டும் என்றும், குறுக்கு வழியில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தக் கூடாது என்றும் நீதிபதிகள் கூறினார்.

மேலும், தேர்தலை ரத்து செய்யமுடியாது. ஆனால் முறையான விதிமுறைகள் பின்பற்ற முடியவில்லை எனில் அதை எங்களால் நிறுத்தி வைக்க முடியும் என்றும், தேவைப்பட்டால் தேர்தலை தள்ளி போட முடியும் தெரிவித்தனர்.

மூன்று மாவட்டங்களுக்கு ஒரே மாவட்ட பஞ்சாயத்தா? என கேள்வி எழுப்பிய நீதிபதிகள்,இத்தனை ஆண்டுகள் ஏன் தேர்தல் நடத்தாமல் இருந்தீர்கள்? என்றும் தேர்தல் ஆணையத்தை விளாசினர்.

புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் தொகுதி மறுவரையறை செய்தீர்களா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ஆணைய வழக்கறிஞர்,  அதை செய்ய வேண்டியதில்லை என்று பதில் அளித்தார்.

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தொகுதி மறுவரையறை பணிகள் செய்துள்ளோம். அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பின் படியே புதிய மாவட்டங்களுக்கு வார்டு மறு வரையறை செய்ய முடியும் என்றும் ஆணைய வழக்கறிஞர் விளக்கினார்.

ஏற்கனவே உள்ள மாவட்டத்தின் வார்டுகள் புதிய மாவட்டங்களுக்கு எப்படிப் பொருந்தும் ? ஜனநாயகத்தின் அடிப்படையில் தான் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்று தலைமை நீதிபதி கூறினார்.

பழைய தொகுதி மறுவரையறை பணிகளை தான் மீண்டும் கொடுத்திருக்கிறோம் என்ற வாதத்தை ஏற்க முடியாது” எதற்காக மாவட்டங்கள் பிரிக்கப்பட்டன? பழைய நிலையே தொடரும் என்றால் எப்படி புரிந்து கொள்வது? என்றும் கேள்வி எழுப்பினர்.

தொடர்ந்து காரசாரமான வாதங்கள் நடைபெற்று வந்த நிலையில், மாநில தேர்தல் ஆணையம் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், தேவைப்பட்டால் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கு மட்டும் தேர்தலை தள்ளி வைக்கலாம் என்று கூறப்பட்டது.

இதற்கு திமுக தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. தேர்தலை மொத்தமாக நிறுத்த வேண்டும் என்றும் என்று வலியுறுத்தப்பட்டது.

இதையடுத்து, இதுகுறித்து மதியம் 2மணிக்கு பதில் அளிக்குமாறு மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை பிற்பகலுக்கு தள்ளி வைத்தனர்.