சென்னை: உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ மாணவர்களுக்கு நாங்கள் இடம் ஒதுக்க முடியாது, அவர்களுக்கு சீட் வழங்குவது மத்திய அரசின் கையில்தான் உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள தேசிய முதியோர் நல மருத்துவமனையை ஆய்வு செய்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் பின்னர்  செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, கிங்ஸ்  இன்ஸ்டிடியூட் வளாகத்தில் ரூ. 151.17  கோடி மதிப்பில் தேசிய முதியோர் நல மருத்துவமனை வளாகம் கட்டப்பட்டதாகவும்,  கொரோனா பரவல்  காரணமாக  இந்த மருத்துவமனை 800 படுக்கை கொண்ட சிறப்பு மருத்துவமனையாக மாற்றப்பட்டதாகவும் தெரிவித்தார்.

தற்போது கொரோனா பரவல் குறைந்துன் வருவ்தால், மீண்டும் அதனை தேசிய முதியோர் நல மருத்துவமனையாக மாற்றலாம் என முடிவு செய்யப்பட்டு உள்ளதாக கூறியவர்,  கிங்ஸ் மருத்துவமனை கட்டிட முறைகேட்டில் யார் ஈடுபட்டிருந்தாலும்  அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என  எச்சரித்தார்.

மருத்துவத்துறையில் விரைவில் 1000பணியிடங்களுக்கு பணி மாறுதல் செய்யப்படும் பணி நடைபெற உள்ளதாக கூறியவர்,  இந்த பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு  வருகிற செவ்வாய், புதன், வியாழன் ஆகிய 3 நாட்கள் நடைபெறும் என்றும், பணியிட மாறுதல்  வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும் என்றும் தெரிவித்தார்.

உக்ரைனில் இருந்து திரும்பிய மருத்துவ  மாணவர்களுக்கு மருத்துவ இடம்  வழங்குவது மத்திய அரசின் கையில்தான் உள்ளது என்றும், மாநில அரசு இதில் ஒன்றும் செய்ய முடியாது,  தன்னிச்சையாக செயல்பட முடியாது என்றும்  தெரிவித்தார்.

முன்னதாக கடந்த மார்ச் மாதம், இதுதொடர்பாக இந்திய மருத்துவ ஒழுங்குமுறை அமைப்பான தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்ட தகவலில்,  “உக்ரைனில் ஏற்பட்ட போரினால்   அங்கே மருத்துவக் கல்வி முடித்து பயிற்சி மருத்துவம் செய்து கொண்டிருந்த மாணவர்கள் அதை பாதியிலேயே விட்டுவிட்டு தாயகம் திரும்பும் சூழல் உருவாகியுள்ளது. அவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு,  அவர்கள் இந்தியாவிலேயே தங்களின் பயிற்சி மருத்துவப் படிப்பை மேற்கொள்ள அனுமதிக்கப் படுகின்றனர்.

அதற்காக வெளிநாட்டில் படித்த‌ மாணவர்கள் எஃப்.எம்.ஜி தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த கோரிக்கைகளோடு வரும் விண்ணப்பங்களை மாநில அரசுகளின் மருத்துவக் கவுன்சில்களே பரிசீலித்து நடவடிக்கையை மேற்கொள்ளலாம்.

இதை மாநில மருத்துவக் கவுன்சில்கள், தேசிய தேர்வு வாரியத்தின் மூலம் எஃப்எம்ஜி மருத்துவ தகுதித் தேர்வை நடத்த உறுதி செய்யலாம். விண்ணப்பதாரர் குறிப்பிட்ட தகுதியுடையவராக இருந்தால் அவருக்கு தற்காலிக பதிவை மாநில மருத்துவக் கவுன்சில்கள் வழங்கலாம். அதன்படி, மாணவர்கள் 12 மாதங்களுக்கு பயிற்சி மருத்துவம் பயிலவோ அல்லது அவர்கள் ஏற்கெனவே முடித்ததிலிருந்து எஞ்சியுள்ள காலத்திற்கான பயிற்சி மருத்துவத்தை இங்கே பயிலலாம்.

மாநில மருத்துவக் கவுன்சில்கள், தேசிய தேர்வு வாரியத்தின் மூலம் எஃப்எம்ஜி மருத்துவ தகுதித் தேர்வை நடத்த உறுதி செய்யலாம். விண்ணப்பதாரர் குறிப்பிட்ட தகுதியுடையவராக இருந்தால் அவருக்கு தற்காலிக பதிவை மாநில மருத்துவக் கவுன்சில்கள் வழங்கலாம். அதன்படி, மாணவர்கள் 12 மாதங்களுக்கு பயிற்சி மருத்துவம் பயிலவோ அல்லது அவர்கள் ஏற்கெனவே முடித்ததிலிருந்து எஞ்சியுள்ள காலத்திற்கான பயிற்சி மருத்துவத்தை இங்கே பயிலலாம் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.