வாட்ஸ்-அப்பில் படம்: சிங்கப்பூரில் சசிகலா புஷ்பா….?

Must read

சிங்கப்பூர்:
ந்தியாவையே பரபரப்புக்குள்ளாக்கிய  பெண் எம்.பி. சசிகலா தற்போது சிங்கப்பூரில் இருப்பதாக வாட்ஸ்அப்பில்  அவரது படம் உலா வருகிறது.
தமிழக போலீசார் தன்னை கைது செய்துவிடுவார்கள் என டெல்லி ஐகோர்ட்டில் முன்ஜாமின் வாங்கிய சசிகலா, யாருக்கும் தெரியாமல் வெளிநாடு சென்றுவிட்டார். தற்போது சிங்கப்பூரில் இருப்பதாக, அவரே அனுப்பியதாக ஒரு வாட்ஸ்அப் தகவல் ஊடகங்களில் உலா வ்ந்து கொண்டிருக்கிறது.
sasi-singapore
அதில்,  ‘சிங்கப்பூர் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதனின் இறுதிச்சடங்கில் கலந்துகொண்ட ஒரே தமிழ் எம்.பி., நான் தான்’ எனக்கூறி, அந்நாட்டு பாராளுமன்றம் முன்பு தான் நிற்கும் படத்தை அனுப்பியுள்ளார்.
இதற்கிடையில் நேரில் ஆஜராக மதுரை ஐகோர்ட்டு கிளை  பிறப்பித்த உத்தரவு 6 வாரம் கால கைது செய்ய தடை பெற்ற சசிகலாபுஷ்பா, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி வரும் திங்கட்கிழமை மதுரை ஐகோர்ட்டில் நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். ஆகவே அவர் திங்கட்கிழமை மதுரை வந்து கோர்ட்டில் ஆஜர் ஆவாரா? அப்போது வேறு ஏதேனும் வழக்கை காரணம் காட்டி அவர்  கைது செய்யப்படுவாரா?  என  மீடியாக்கள் பரபரப்போடு எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றன.
 

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article