கடலூர்:

வீராணம் ஏரியில் இருந்து கடலூர் மாவட்ட விவசாயிகளின் பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்பட்டு உள்ளது. இந்த நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர் எம்.சி.சம்பத் கலந்துகொண்டு ஏரியின் மதகை  திறந்து வைத்தார்.  அதன்படி  வினாடிக்கு 400 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் பெய்து வரும் கனமழை காரணமாக, காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக  மேட்டூர் அணை முழு கொள்ளவை எட்டியுள்ளது. அதைத்தொடர்ந்து அணை யில் இருந்து விவசாயத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டு உள்ளது. இந்த தண்ணீரானது, கடலூர் மாவட்டத்தில் உள்ள வீராணம் ஏரிக்கும் வந்துகொண்டிருக்கிறது. இதனால் வீராணம் ஏரியில் தண்ணீர் அதிகரித்து வருகிறது.

இதைத்தொடர்ந்து,  கடலூர் மாவட்ட விவசாயிகளின் பாசனத்துக்க  வீராணம் ஏரியில் இருந்து  தண்ணீர் திறந்த வைக்கப்பட்டுள்ளது.  இந்த நிகழ்ச்சியில், அமைச்சர் எம்.சி. சம்பத், ஆட்சியர் வெ.அன்புசெல்வன் ஆகியோர் கலந்துகொண்டு, ஏரியின் மதகுகளை திறந்து தண்ணீர் திறந்த விட்டனர். அதைத்தொடர்ந்து ஏரியின்  34 மதகுகளும் திறக்கப்பட்டது.   இதன் மூலம் கடலூர், சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் வட்டத்தில் 102 கிராமங்களில் 44,856 ஏக்கர் பாசன வசதி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.