சென்னை:

மிழர்களின் பாரம்பரிய உணவான இட்லிக்கு புகழ்பெற்ற முருகன் இட்லிக்கடையின் அம்பத்தூர் கிளைக்கு அதிகாரிகள் சீல் வைத்துள்ளனர்.

உணவில் புழுக்கள் இருந்ததாக எழுந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்து, ஓட்டலை ஆய்வு நடத்திய உணவுத்துறை அதிகாரிகள், முருகன் இட்லி கடையை மூடி சீல் வைத்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னையில் ஆங்காங்கா காணப்படும் பிரபல உணவங்களில் முருகன் இட்லி கடையும் ஒன்று. இங்கு மல்லிப்பூ போன்ற இட்லியும் அதைத் தொட்டுக்கொள்ள  பல வகையான பொடி வகைகள் மற்றும் சட்னி வகைகளும் வழங்கப்படும். முருகன் கடை இட்லிக்கு மக்களிடையே தனி மவுசு உண்டு.

இந்த நிலையில், அம்பத்தூர் தொழிற்பேட்டையில், கடந்த  7ம் தேதி உணவு சாப்பிட்ட வழக்கறிஞர் ஒருவர், அது தொடர்பாக நிர்வாகத்தில் புகார் கொடுத்தும், தகுந்த நடவடிக்கை எடுக்காத நிலையில், இது குறித்து உணவு பாதுகாப்புத்துறைக்கு புகார் அளித்திருந்தார்.

இந்த புகாரின் பேரில், திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் , அம்பத்தூரில் உள்ள முருகன் இட்லிக் கடையின் உணவுக் கூடத்தை சோதனையிட்டனர். அப்போது, உணவுக்கூடம் சுத்தமின்றி காணப்பட்டதாகவும்,  சமைக்கும் உணவுகள் சுத்தமில்லா மலும், காய்கறிகளில் புழுக்கள் இருந்ததும்  தெரிய வந்தது.

இதைத்தொடர்ந்து, முருகன் இட்லி கடையை மூடி சீல் வைத்த அதிகாரிகள்,  இட்லி கடையின் உரிமத்தையும்  தற்காலிகமாக ரத்து செய்துள்ளனர்.

பிரபலமான உணவு விடுதியான முருகன் இட்லி கடைக்கு சீல் வைக்கப்பட்ட நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.