டந்த 2016ம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை தமிழகத்தில் ஏற்பட்டுள்ள வரலாறு காணாத வறட்சி காரணமாக தற்கொலை செய்து கொண்டும், அதிர்ச்சி காரணமாகவும் 144 விவசாயிகள் உயிரிழந்தனர்.

இதனைத் தொடர்ந்து  தாமதமாக விழித்துக் கொண்ட தமிழக அரசின் அப்போதைய முதல்வர் இப்போதைய துணை முதல்வர் திரு.பன்னீர்செல்வம் அவர்கள்  ஜனவரி 17-ஆம் தேதிதான் தமிழகத்தை வறட்சி மாநிலமாக அறிவித்தார்.

கடந்த ஜனவரி 5-ஆம் தேதி தேசிய மனித உரிமைகள் ஆணையம் தமிழக அரசுக்கு அனுப்பியுள்ள அறிவிக்கையில்,ஒரே மாதத்தில் மட்டும் 106 விவசாயிகள் தமிழகத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2017ம் ஆண்டில் வறட்சி என்று அறிவித்திருந்தாலும் தமிழக அரசு அதற்கு மேலாவது நடவடிக்கைகள் எடுத்திருந்தால் நிச்சயம் இந்தப் பிரச்னைகள் ஒரளவாவது கட்டுக்குள் கொண்டு வந்திருக்கலாம், ஆனால் நடவடிக்கை எடுக்காததன் விளைவு இப்போது தண்ணீர்  பிரச்னை தலை விரித்தாடுகிறது

இந்திய வானிலை ஆய்வுத் துறை அறிக்கையின் படி 1876ம் ஆண்டைப்போலவே 2016ம் ஆண்டு தமிழகத்தின் மழை பொழிவு 166 மிமீட்டர்தான் இருந்ததாக தெரிவித்துள்ளது. 1871-ஆம் ஆண்டு முதல் சேகரிக்கப்பட்ட தரவுகளின்படி, கடந்த 1876-ஆம் ஆண்டு வட கிழக்கு பருவ மழை பொய்த்துப் போனதால், தமிழகம், கடலோர ஆந்திரா, கர்நாடகத்தின் உட்பகுதிகள் மற்றும் கேரளா ஆகிய பகுதிகள் மோசமான வறட்சியை சந்தித்தன. ஆனால் அதற்கு பின்னர், 140 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் இது போன்ற மோசமான வறட்சி ஏற்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு கிடைக்கும் பருவ மழைகளில் வடகிழக்கு பருவமழை மிக முக்கியமானது. ஆனால் 2011ம் ஆண்டில் இருந்து 2016ம் ஆண்டு வரை நமக்கு கிடைக்க மழை பொழிவு மிகக்குறைவு

இதோ 2015ம் ஆண்டு மட்டுமே நமக்கு அதிக மழை கிடைத்துள்ளது, அதன் பின் எல்லாமே பற்றாக்குறை மழைதான்

இந்தியாவில் வட கிழக்கு பருவ மழையின் சராசரி மழைப்பொழிவு இந்த முறை 45 சதவீதம்  குறைந்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில் சராசரி அளவை விட 62 சதவீதம் வட கிழக்கு பருவ மழை குறைந்துள்ளது.தென் மேற்கு பருவ மழையை பொறுத்தவரை இந்திய அளவில் சராசரி அளவை விட 3 சதவீதம் மட்டுமே மழைப் பொழிவு குறைந்துள்ளது. ஆனால் தமிழகத்தில் பெய்யக் கூடிய சராசரி அளவை விட 19 சதவீதம் தென் மேற்கு பருவ மழை இந்த முறை குறைந்துள்ளது.

ஆனால் தமிழக அரசில் இத்தனை அதிகாரிகள் இருந்தும் இந்த விசயத்தில் மெத்தனமாக இருந்தார்களோ என்ற சந்தேகமே ஏற்பட்டுள்ளது

புள்ளியல் விபரங்கள்

இந்திய வானிலை ஆய்வுக்கழகம் கொடுக்கும் அறிக்கைகள் இன்னமும் பிடிஎப் முறையிலேயே உள்ளது, தகவல்களை வழங்கும் இந்திய வானிலை ஆய்வுக்கழமே முழுமையாக தரவு அறிவியல் மென்பொருள் ஒன்றினை உருவாக்கி  முழுமையான தரவறியல் தகவல்களை மக்களுக்கும், மாநிலங்களுக்கும் வழங்க முடியும். ஆனால் அவர்கள் பொத்தாம் பொதுவாக பிடிஎப் கோப்பில் கொடுத்துவிட்டு தங்கள் பணி முடிந்துவிட்டதாக நினைப்பது வருத்தத்திற்குரியது

82% குறைந்த தமிழக அணைகளின் நீர்மட்டம்

2017 ஜனவரி 5ம் ஆண்டே இந்தியாவில் உள்ள நீர்நிலைகள் அனைத்திலும் மிக அதிகமாக தமிழகத்தில் 82%  நீர் மட்டம்  வீழ்ச்சியடைந்துள்ளது என்று அறிக்கை இருந்தும் தமிழக அரசு பாராமுகத்தில் இருக்கிறது என்பது இன்னமும் கவலைக்குரியது.

எப்போது அணை நீர் மட்டம் அதாள பாதாளதிற்கு சென்றதோ அப்போதே மழை நீர் சேகரிப்பை அரசாங்கம் கட்டயாமாக்கியிருக்க முடியும். ஆனால் அதையும் செய்யவில்லை

கண் கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்

-செல்வமுரளி