ஐ.பி.எல் தடையைக் காட்டிலும் தேநீரை சர்க்கரை இல்லாமல் அருந்தினால் 150 சதவீதம் அதிக தண்ணீரைச் சேமிக்க முடியும்.
மும்பை உயர் நீதிமன்றம் பி.பி.சி.ஐ க்கு ஐ.பி.எல். போட்டிகளை மகாராஸ்திராவிலிருந்து இடமாற்றம் செய்வது குறித்து பரிசீலிக்க உத்தரவிட்டது. எனினும் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ள போட்டிக்குத் தடை விதிக்க மறுத்து விட்டது.
மும்பை பூனே நாக்பூர் ஆகிய மூன்று அரங்கங்களில் நடைபெற உள்ள இருபது போட்டிகளுக்கு ஆறு மில்லியன் லிட்டர் தண்ணீர் பயன் படுத்தப் படுமென லோக்சத்தா இயக்கம்.
இந்த அளவு மிகஅதிகமாகத் தோன்றினாலும், மைதான்ங்கலுக்கு தண்ணீர் தடைசெய்வதைக் காட்டிலும் அதிக பலனலிக்கக்கூடிய முறையில் தண்ணீரைச் சேகரிக்க முடியும்.
ஒரு பொருளைத் தயாரிக்க செலவாகும் தண்ணீரைக் கணக்கிட எம்பெட்ட்ட் கான்செப்ட் பயன்படுத்துவோமேயானால், நம்மால் இன்னும் பல விசயத்திற்கு தடை விதிப்பதன் மூலம், இன்னும் அதிகத் தண்ணீரைச் சேகரிக்க முடியும். ஆனால் அவ்வாறு செய்வது உசிதமா ?
இந்திய உள்கட்டமைப்பு அறிக்கை 2011-ன் புள்ளிவிவரப்படி, நாம் குளிப்பதற்கும், சமைப்பதற்கும், குடிப்பதற்கும், கார் கழுவவும் பயன் படுத்தும் தண்ணீரின் அளவைவிட உணவிற்காகப் பயன்படுத்தும் தண்ணீரின் அளவு மிக அதிகம். ஏனெனில், ஒரு உணவுப் பொருளை விளைவிக்கவும், பதப்படுத்தவும் அதிக அளவில் தண்ணீர் பயன்படுத்தப்படுவதே காரணமாகும்.
தேசிய புவியியல் அமைப்பின் கணக்கீட்டின்படி அரைப் கிலோ கோழிக்கறி தயாரிக்க ஆகும் தண்ணீரின் அளவு 1500 லிட்டர் ஆகுன். மேலும், ஒரு பாட்டில் வைன் தயாரிக்க 1000 லிட்டர் தண்ணீர் பயன்படுத்தப்படுகின்றது.
பைனான்சியல் எக்ஸ்பிரஸ் இதழில் கட்டுரையாளர் சுனில் ஜெயின் “அதிக தண்ணீரை உறிஞ்சும் கரும்பை விவசாயம் செய்ய ஊக்குவிக்கும் அரசின் கொள்கைகள் தான் காரணம் எனக் குற்றம் சாட்டியுள்ளார்.
ஒரு வாதத்திற்கு எடுத்துக் கொண்டோமேயானால், ஒரு கிலோ சர்க்கரை தயாரிக்க 1500 லிட்டர் தண்ணீர் தேவைப்படுகின்றது. மும்பையின் மக்கள் தொகையில் 20 சதவிதம் பேர், தோராயமாக 2.5 கோடி மக்கள் தினமும் ஒருவேளை ஒரு தேக்கரண்டி சர்க்கரையுடன் தேநீர் அருந்துவதாக வைத்துக் கொண்டாலும், ஒரு நாளைக்கு 10,000 கிலோ சர்க்கரை பயன்படுத்தப் படுகின்றது.
IPL WATER CRISIS FEATUREDஇந்த10,000 கிலோ சர்க்கரை ஒன்றரை கோடி லிட்டர் தண்ணீர் தேவை படுகின்றது. இது ஐ.பி.எல்.க்காகப் பயன் படுத்தப்படப் போகும் தண்ணீரின் அளவை விட 2.5 மடங்கு அதிகமாகப் பயன்படுத்தப் படுகின்றது.
இந்தக் கணக்கில் பல தோராயங்கள் இருந்தாலும், இதன் மூலம் சொல்லவரும் செய்தி ஒன்றுதான், தண்ணீர் பாதுகாப்பு என்று வரும்பொழுது, நம் நுண்ணறிவு நினைப்பது எல்லாம் சரியாகிவிடாது என்பதே.
எப்படி, மும்பை மக்கள் ஒருநாள் சர்க்கரையின்றி தேனீர் அருந்துவதால் சர்க்கரையின் அடுத்த வருட உற்பத்தி குறையப் போவதில்லையோ, அதே போன்றுதான், இந்த ஐ.பி.எல்.போட்டிகளைத் தடைச் செய்துவிடுவதால் மராத்வாடாவில் நிலவி வரும் வறட்சியில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தி விடாது. ஏனெனில், இந்தத் தண்ணீரை 400 கிலோமீட்டர் தாண்டி எடுத்துச் செல்ல முடியாது. அரசு, அறிவியல் பூர்வமாகச் செயல்பட்டு, அதிக தண்ணீரை உறிஞ்சும் பயிரான கரும்பு விவசாயத்தை தடைச் செய்துவிட்டு, குறைந்தத் தண்ணீர் தேவைப்படும் பயிர்களை விளைவிக்க விவசாயிகளை ஊக்குவிக்க வேண்டும்.
தேசிய அளவில் வேளாண்மைக்காக 650 பி.சி.எம் (பில்லியன் கியூபிக் மீட்டர்) தண்ணீர் உள்ளது. அதில் 15% சதவீதம், அதாவது 100 பி.சி.எம். தண்ணீர் கரும்பு விவசாயத்திற்கு பயன்படுத்தப் பட்டு வருகின்றது. இந்தியாவில் உள்ள விவசாய நிலங்களில் வெறும் 2.5% சதவிகித வயல்களில் மட்டுமே பயிரிடப்பட்டு வருகின்றது.
மராத்வாடா பகுதியில், சர்க்கரை ஆலைகளில் எண்ணிக்கை, கடந்த 5 ஆண்டுகளில் 40ல் இருந்து 52 ஆக உயர்ந்துள்ளது.
விவசாயத்துடன், மற்ற தொழில்துறைகளும் அதே தண்ணீருக்காகப் போராடுகின்றன. எப்படி மற்றத் துறையில் தண்ணீர் வீணாக்கப் படுகின்றதோ, அதேப் போன்று, விவசாயத்திலும், கரும்புச் சாகுபடியால், குடித்தண்ணீர்ப் பஞ்சம், மின் உற்பத்தி போன்றவற்றால் இங்கு மக்கள் நேரடியாகப் பாதிக்கப்படுகின்றனர்.
தண்ணீர் அரசியலை நிறுத்தி, நீர் மேலாண்மையில் கவனம் செலுத்துமா மராட்டிய அரசு ?