திரில்லர் படமாக வெளியாகியுள்ள இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் சேல்ஸ்மேன் கேரக்டரில் நடித்துள்ளார். குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் இந்த படத்தில் நடித்துள்ள நாய் முக்கிய கேரக்டரில் நடித்துள்ளது.
30 ஆயிரம் ரூபாய் கடன் கிடைக்காமல் தவிக்கும் இளைஞன் திருட நினைத்தான் , அதனால் அவன் சில ஆபத்துகளில் சிக்கினான் அதுவே ‘வாட்ச்மேன்’.
திருடியாவது பணத்தை எடுப்போம் என்று முடிவெடுத்து பேய் பங்களாவில் சிக்கி கொண்டு, அங்கு அவர் பல பிரச்சனைகளை எதிர்கொள்கிறார் அந்த பங்களாவுக்கு சென்று அங்கிருந்து பணத்தை திருடுகிறார். எதிர்பாரதாக விதமாக அங்கு இருக்கும் நாய் ஒன்று, பணத்தை திருடி விட்டு செல்ல பெரியளவிலான தடையை ஏற்படுத்துகிறது. பின்னர், அந்த நாய் தனது எஜமானருக்கு உதவவே தன்னை தடுக்கிறது என்பது தெரிய வருகிறது. அந்த நாயின் எஜமானர் தீவிரவாதிகளால் தேடப்பட்டு வருவதும் ஹீரோவுக்கு தெரிகிறது.
தியேட்டர்ல நிறைய அப்ளாஸ் வாங்கும் ஒரே கதாபாத்திரம் படத்தின் முக்கியமான கதாபாத்திரம் ப்ரூனோ என்கிற நாய் தான்.
ஜி.வி., ப்ரூனோ தவிர மற்ற கதாபாத்திரங்களின் வேஸ்ட்னே சொல்லலாம் . இந்த படத்தின் மூலம் கன்னட நடிகை சம்யுக்தா ஹெக்டே தமிழில் அறிமுகமாகியுள்ளார். படத்தின் பெரிய பலமே டெக்னிக்கல் பணிகள் தான். சினிமாட்டோகிராபி மற்றும் இசை படத்தின் ரசிக்க வைக்க உதவுகிறது. யோகி பாபுவை இன்னு நல்லா பயன்படுத்தியிருக்கலாம் . இயக்குனர் விஜய் பொறுத்தவரை நல்ல முயற்சி தான் . பாடல்கள் இல்லைனாலும் .ஜி வியின் இசை நல்லா அமைஞ்சிருக்கு.