ஜெய்ப்பூர்: 4ஆண்டுகள் உடன்வாழ்ந்த பெண்மயில் உயிரிழந்தை சோகத்தைல் தத்தளித்த ஆண் மயில், அந்த பெண் மயிலின் உடல் அடக்கம் வரை அருகிலேயே இருந்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. மேலும், இதை பார்ப்போரின் கண்களிலும் கண்ணீரை வரவழைத்தது. இது தொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.
இந்தியாவின் தேசிய பறவை மயில் என்பது அனைவருக்கும் தெரியும். இதனால், மயிலை கொல்வது சட்டப்படி குற்றம். இந்த நிலையில், ராஜஸ்தான் மாநிலத்தில் கச்சேரா நகரில் ஆண், பெண் மயில்கள் கடந்த 4 ஆண்டுகளாக இணைந்து வாழ்ந்து வந்தன. சமீபத்தில், அதில் பெண் மயில் ஒன்று உடல்நலம் பாதிக்கப்பட்டது இறந்தது.
இதையறிந்த வனத்துறையினர், இறந்த பெண் மயிலை ஒரு துணையில் எடுத்துக்கொண்டு, அதை அடக்கம் செய்ய காட்டுக்கு கொண்டு சென்றனர். இதை கண்ட ஆண்மயிலும், அவர்கள் கூடவே, பெண் மயில் அடக்கம் செய்யும் இடத்துக்கு சென்றது. அங்கு பெண் மயிலை அடக்கம் செய்யும்வரை அருகிலேயே சோகமாக இருந்தது. ஆன்மயிலின் சோகமான இந்த செயல் காண்போரின் கண்களையும் குளமாக்கியது.
இதுதொடர்பான வீடியோ வைரலாகி வருகிறது.