வெள்ளத்தில் இருந்து காப்பாற்றிய ராணுவ வீரர்: காலை தொட்டு வணங்கிய பெண்

Must read

மஹாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள தங்களை காப்பாற்றிய இராணுவ வீரர் ஒருவரின் கால்களை தொட்டு வணங்கும் வீடியோ, சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

மஹாராஷ்டிர மாநிலம் தென்மேற்கு பருவமழையின் தீவிரம் காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அம்மாநிலத்தின் கிழக்கு பகுதியில் உள்ள சங்கிலி வெள்ளத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள மக்களவை பாதுகாப்பான இடத்திற்கு மாற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அப்பணிகளுக்கு பொதுமக்களிடம் வரவேற்பும் கிடைத்துள்ளது.

இத்தகைய சூழலில், சமீபத்தில் மனதை உருக்கும் விதமாக சமூக வலைதளத்தை வீடியோ ஒன்று ஆக்கிரமித்திருந்தது. சங்லி பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தால், கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள மக்களை மீட்கும் பணியில் துணை ராணுவப்படை வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். அப்போது தங்களை போராடி மீட்டதற்காக, ராணுவ வீரரின் காலை பெண் ஒருவர் தொட்டு வணங்கியுள்ளார். இது வீடியோவாக படம் பிடிக்கப்பட்டுள்ள நிலையில், சமூக வலைதளங்களில் வைரலாகவும் பரவி வருகிறது.

More articles

Latest article