வாஷிங்டன்

டிரம்ப் ஆதரவாளர்கள் வாஷிங்டனை முற்றுகை இட்டதையொட்டி அவர் பதவிக்காலம் முடியும் முன்பே அவரை பதவி விலக்கம் செய்ய மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அமெரிக்காவில் அதிபர் தேர்தலில் ஜோ பைடனிடம் தோல்வி அடைந்த டொனால்ட் டிரம்ப் தனது தோல்வியை ஒப்புக் கொள்ளாமல் தொடர்ந்து நீதிமன்றங்களில் வழக்கு தொடுத்து வந்தார்.  அவரது வழக்கு மனு அனைத்து நீதிமன்றங்களிலும் தள்ளுபடி செய்யப்பட்டது.  இந்நிலையில் சமீபத்தில் ஜார்ஜியா மாகாணத்தில் நடந்த தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் டொனால்ட் டிரம்ப் தோல்வி உறுதி ஆனது.

இதையொட்டி டிரம்ப் ஆதரவாளர்கள் வாஷிங்டன் நகரை முற்றுகை இட்டு செனட் கட்டிடத்தில் வன்முறை தாக்குதல் நடத்தினர்.  இந்த தாக்குதலில் ஒரு பெண் உயிர் இழந்தார்.  டிரம்ப் இந்த தாக்குதலுக்கு முன்பே அதை ஆதரித்து சமூக வலைத்தளங்களில் பதிவுகள் வெளியிட்டு அதையொட்டி டிவிட்டர் மற்றும் முகநூலில் அவருடைய கணக்குகள் முடக்கப்பட்டன.   ஜோ பைடனின் வெற்றியை ஒப்புக் கொள்ள மனமில்லாத டிரம்ப் தாம் அவரது பதவி ஏற்பு விழாவில் கலந்துக் கொள்ள மாட்டேன் எனத் தெரிவித்தார்.

டிரம்ப் வன்முறையைத் தூண்டியதாக எழுந்த புகாரையொட்டி மக்களில் பலர் அவருக்கு எதிர்ப்புக் குரல் எழுப்பத் தொடங்கி உள்ளனர்.   டிரம்பின் பதவிக்காலம் முடிந்து ஜனவரி 20 அன்று ஜோ பைடன் பதவி ஏற்க உள்ளார்.  ஆனால் அதற்கு முன்பே டிரம்ப் ஐ பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்னும் கோரிக்கை மக்களிடையே பரவி வருகிறது.,  இது  குறித்து ஏபிசி நியூஸ் மற்றும் இப்சோஸ் இணைந்து மக்களிடையே ஒரு கருத்துக் கணிப்பு நடத்தி உள்ளனர்.

இந்த கருத்துக் கணிப்பில் ஆரம்பத்தில் 56% பேர் டிரம்ப்பை பதவி விலக்க வேண்டும் எனவும் 43% பேர் அதற்கு எதிராகவும் வாக்களித்திருந்தனர்.  ஆனால் சிறிது சிறிதாக இந்த எண்ணிக்கை மாறியது.  தற்போதைய நிலையில் 94% மக்கள் கரம்பைப் பதவி விலக்கம் செய்ய வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளனர்.  இதில் 13% பேர் டிரம்பின் கட்சியான குடியரசுக் கட்சியை சேர்ந்தவர்கள் ஆவார்கள்.