றக்கம் உயிர்களுக்கு கிடைத்திருக்கும் உயரிய வரம். நாம் உறங்கும்போது நமது உடல் ரீ-சார்ஜ் ஆவது மட்டுமன்றி உடலினுள் மில்லியன் கணக்கான வேதிவினைகளும் நடைபெறுகின்றன. உடலின் செல்களெல்லாம் புத்துயிர் பெறுகின்றது. நீங்கள் தூக்கத்தை தவிர்ப்பதன் மூலம் மேற்சொன்ன அத்தனை அத்தியாவசிய மாற்றங்களையும் நடைபெறவிடாமல் தடை செய்கிறீர்கள். இது உங்கள் உயிருக்கு உலை வைக்குமளவுக்கு சீரியஸான பிரச்சனைகளில் கொண்டுபோய் விடலாம் என்று மருத்துவர்கள் எச்சரிக்கிறார்கள்.
bad-sleep
உறக்கத்தை தொலைத்தவர்களை துரத்தம் வியாதிகள் பின்வருமாறு:
1. அல்சீமர்:
தூக்கத்தை தவிர்ப்பதால் மூளை நரம்புகளில் உள்ள திசுக்கள் பாதிக்கப்பட்டு அல்சீமர் எனப்படும் மறதிநோய்ஏற்படுகிறது.  இந்நோய் உங்கள் மொழித்திறன், படைப்புத் திறன் மற்றும் சிந்தனா சக்திக்கே உலை வைக்கிறது
2. உடல் பருமன் மற்றும் சர்க்கரை வியாதி:
போதிய தூக்கமின்மையால் உங்கள் உடலின் இன்சுலின் அளவு மாறுபடுகிறது. இன்சுலின் குறைந்தால் உடலின் சர்க்கரை அளவு அதிகமாகும்.
3. மாரடைப்பு: 
தூக்கத்தை தவிர்ப்பவர்களுக்கு 2.6 மடங்கு மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகம் என்று மருத்துவ உலகம் எச்சரிக்கிறது.
4. தற்கொலைக்கு தூண்டும் எண்ணங்கள்:
தற்கொலை எண்ணங்கள் தோன்றக்காரணம் கடுமையான மன அழுத்தத்துக்கு ஆட்படுவதுதான் என்பது நமக்கு தெரியும். ஆனால் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் இரவு தூக்கமின்றி தவிப்பவர்களும் மன அழுத்தத்துக்கு ஆட்படாமலேயே தற்கொலை எண்ணங்களால் தூண்டப்பட முடியும் என்று கண்டறியப்பட்டுள்ளது.
5. அல்சர்:
தூக்கமின்மை மற்றும் அதிகப்படியான தூக்கம் இரண்டுமே அல்சரைத் தோற்றுவிக்கக் கூடும். நீங்கள் தினமும் 6 மணி நேரத்துக்கு குறைவாய் தூங்குபவராக இருந்தால் நீங்கள் அழைக்காமலேயே உங்களுக்கு அல்சர் வந்துவிடும்.
6. ப்ராஸ்டேட் கேன்சர்:
ஆண்சுரப்பி புற்றுநோய் எனப்படும் இந்த நோய் தூக்கத்தை தொலைப்பவர்களுக்கு வரும் வாய்ப்பு அதிகம். இந்த நோய் வராமல் தடுக்க உங்களுக்கு மெலட்டோனின் என்ற சுரப்பி தேவை. பினியல் சுரப்பியீருந்து சுரக்கும் இந்த திரவம் உங்கள் உடல் இருட்டில் இருக்கும்போது மட்டுமே சுரக்கும். நீங்கள் இரவு நேரங்களில் கம்பியூட்டரில் வெகு நேரம் அமர்ந்திருந்தால் கம்பியூட்டரின் வெளிச்சம் இந்த சுரப்பி சுரப்பதை தடுத்து ப்ராஸ்டேட் கேன்சர் வரும் அபாயத்தை அதிகரிக்கும்.
ஆகவே எக்காரணத்தைக் கொண்டும் இரவு தூக்கத்தை அலட்சியம் செய்யாதீர்கள்!