1superbugs1280
ஸ்திரேலியாவில் வாழும் மலேசியரும்,  சீன வம்சாவழியைச் சேர்ந்தவருமான ஷு லாம் என்ற 25 வயதேயான பெண் விஞ்ஞானி மருத்துவ உலகுக்கு சவாலாக விளங்கிய “சூப்பர்-பக்’ பாக்டீரியா நோய்க் கிருமிக்கு மருந்து கண்டுபிடித்துள்ளார்.
‘சூப்பர் பக்’ என்பது நோய் எதிர்ப்பு மருந்துகளால் அழிக்க முடியாத நோய்க்கிருமி ஆகும். இது மிகப் பயங்கரமான வேகத்தில் பரவக்கூடியதாகும்.
இதை அழிக்க இன்னும் மருந்து கண்டறியப்படாத நிலையில் 2050-ஆம் ஆண்டுக்குள் சூப்பர்பக் கோடிக்கணக்கான உயிர்களை கொள்ளை கொண்டுபோய் விடும் என்று மருத்துவ உலகம் எச்சரித்து வந்தது.
இந்நிலையில் ஷூ லாமின் இந்தக் கண்டுபிடிப்பு மருத்துவத் துறையின் அதி முக்கிய கண்டுபிடிப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
ஷூ கண்டறிந்த இந்த தீர்வு மூலம் நல்ல செல்களை அழிக்காமல் சூப்பர் பக்குகளை மட்டும் அழிக்கும் பாதுகாப்பான முறை சாத்தியமாகும் என்று கருதப்படுகிறது. ஆனால் இப்போது வழக்கத்தில் உள்ள மருந்துகள் அனைத்தும் நல்ல செல்களையும் சேர்த்து அழித்துவிடும் தன்மை கொண்டவை.
ஷூவுக்கு இந்த கண்டுபிடிப்பை நிகழ்த்த மூன்றரை ஆண்டுகளே தேவைப்பட்டிருகிறது. ஆனால் இந்தக் கண்டுபிடிப்பு இன்னும் ஆரம்ப நிலையில்தான் உள்ளது எனவும் இதன் அமைப்பு மற்றும் ஃபார்முலாவை மேம்படுத்தி, மனித செல்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலும், குறைந்த மருந்து உட்கொண்டாலே போதும் என்ற நிலைக்கும் கொண்டுவர மேலும் சில ஆய்வுகளை நிகழ்ந்த வேண்டும் என்று ஷூ தெரிவித்துள்ளார்.